தீபாவளி - செயற்பாடு

தெய்வீக அருளுரையிலிருந்து ஒரு பகுதி


தீபாவளி என்பது விளக்குகளின் பண்டிகை. அது தீமையின் மீதான நன்மையின் வெற்றியும் அஞ்ஞானம் மீதான ஞானத்தின் வெற்றியும் ஆகும். இந்தியாவின் வடபாகங்களில் ஸ்ரீ ராமர் ராவணனை வதம் முடித்து அயோத்யா மீண்டதை நினைவு கூரும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது தென்னிந்திய மாநிலங்களில் நரகாசுரனை ஸ்ரீ கிருஷ்ணர் வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனின் வாழ்க்கை வரலாறு அவனது கொடுமைத்தனத்தின் பிரம்மாண்டத்தை விவரிக்கிறது. அவனது ஆட்சியே இருளில் மூழ்கிக்கிடந்தது. வீடுகளிலோ, தெருக்களிலோ விளக்குகள் ஏற்ற எரிக்கப்படவில்லை. பெண்கள் எவரையும் வெளியிடங்களில் காண முடியாது. அவன் ஆயிரக்கணக்கான ராஜகுமாரிகளை சிறை பிடித்து வைத்திருந்தான். எண்ணிலடங்கா பெண்களை இம்சித்தான். இந்த அவமானத்தை தாங்க முடியாத பெண்கள் கிருஷ்ணரிடம் உதவி கோரி முறையிட்டனர். அவன் பெண்களுக்குத் துன்பங்களை கொடுத்ததால் அவன் ஒரு பெண்ணாலேயே தண்டிக்கப்படவேண்டும். இக்காரணத்தால், கிருஷ்ணர் தன் தேவி சத்யபாமாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். சத்தியபாமாவே நரகாசுரனை வதம் செய்தாள்.

மறுநாள் அமாவாசை தினம். அன்று கிருஷ்ணன், நரகாசுரன் பிடியிலிருந்த 16000 கோபிகைகளை சிறைமீட்டு விடுவித்தான். கோபிகைகளுக்கு இதுவே விடுதலை நாளாகும். இது நிலவு இல்லாத நாள். ஆதலால், இரவு கும்மிருட்டாக இருந்தது. கோபிகைகள் தாங்கள் அன்று விடுதலை என்னும் ஒளி பெற்றமையால் அந்நாள் என்றும் ஒளிர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர், ஆகவே அன்று விளக்குகள் ஏற்றப்படுகின்றன. விளக்கு மற்றொரு முக்கியத்துவத்தையும் குறிக்கிறது. விளக்குகள் எங்கு வைக்கப்பட்டாலும் அவற்றின் சுடர்கள் மேல் நோக்கியே போகும். ஒருபோதும் கீழே இறங்காது. அது போலவே ஞானச்சுடர் (ஆன்மீக ஞானம்) ஒருவரை தர்மத்தின் வழியில் மேலான நிலைக்கு அழைத்துச் செல்கிறது

ஒரு விளக்கை ஏற்றுவதற்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன. முதலில் ஒரு விளக்கு, இரண்டாவது எண்ணெய், மூன்றாவது திரி, நான்காவதாக வத்திப்பெட்டி. இதில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் விளக்கை ஏற்றமுடியாது. எனினும் இந்த விளக்கு புற இருளைத் தான் நீக்கும். இதயத்திலிருக்கும் இருட்டை எவ்வாறு நீக்குவது? அதனை ஞான ஜ்யோதியால் மட்டுமே (ஞானம் என்னும் ஒளி) நீக்க முடியுமே தவிர வேறொன்றாலும் அல்ல. இந்த ஞான ஜோதியை-ஆன்மீக விளக்கை எவ்வாறு ஏற்றுவது? இதற்கும் நான்கு பொருட்கள் தேவை. வைராக்கியம்(பற்றறுத்தல்) விளக்கு, பக்தி என்பது எண்ணெய் ஏகாக்ர சிந்தனை – ஒருமுனைப்படுத்தப்பட்ட சிந்தனை என்பது திரி ஞானம் (மெய்ஞ்ஞான அறிவு வத்திப்பெட்டி இந்த நன்கும் இல்லாத நிலையில் ஆன்மீக ஞானம் என்னும் விளக்கை ஏற்ற இயலாது.

இவை நான்கில் முதல் தேவை வைராக்கியம் (துறவு) பற்றற்ற நிலையின்றி வேதங்களால் பெற்ற அறிவால் யாதொரு பயனுமில்லை. இந்த பற்றற்ற நிலை என்பது என்ன? இது நம் உடல் மீதான பற்று இல்லாமைதான். எப்பொழுதும் “ நான்” என்பதையே நினைக்கவைக்கும் அகம்பாவம், என்பதனை விட்டுவிட வேண்டும் மமகாரம் (தனக்கே சொந்தம் என்ற எண்ணம்) மற்றும் அகங்காரம் இவையே பற்றுதலுக்கு காரணமாக அமைகின்றன இந்த பற்றுதல் என்னும் நோயை எப்படி ஒழிப்பது? சுய பரிசோதனை மூலமே.

இந்த உடலின், புலன்களின், அனுபவங்களின் நிலையாமையைப் பற்றி அறியும்போது வைராக்கியம் கிடைக்கப்பெறுகிறது இதன் பொருள் என்னெவென்றால் உனது கடமைகளை நீ ஆற்றும் போது இது இறைவனால் இதற்காக வழங்கப்பட்ட கருவி என்று எண்ண வேண்டும். பரோபகாரார்த்தம் இதம் சரீரம் (இந்த உடல் பிறருக்கு சேவை செய்வதற்கே) இது முழுமையாக சுய நலத்துக்காக அல்ல. தீபாவளி என்பது நரகாசுரன் அடையாளம் காட்டிய அனைத்து தீய குணங்களிலிருந்தும் நாம் விடுபடும் நாளாக கொண்டாடப்பட வேண்டும் விடுதலை பெற்ற கோபியர் என்பது நம்மிடம் மறைந்து கிடக்கும் நற்குணங்களை குறிக்கும் அவை வெளிப்படையாக ஒளிர வேண்டும். இதுவே இப்பண்டிகையின் உட்பொருளாகும். மனி தனிடம் அசுர குணங்கள் இருக்கும் வரையில் அவன் இருட்டிலேதான் மூழ்கி இருப்பான். கெட்ட குணங்கள் மற்றும் எண்ணங்கள் மொத்தமாக விடுபட வேண்டும்

ஸ்வாமி கூறுகிறார். “நம்முடைய பண்டிகைகளையும் மற்றும் புனித நாட்களையும் அனைத்தும் அதன் உள் தாத்பர்யத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு சரியான ஆர்வத்துடன் கொண்டாட வேண்டும் என நான் விரும்புகிறேன். நரகாசுரன் வதம் என்பது கெட்டவைகளை அழித்து நல்லனவற்றை திரும்ப புகுத்தல் என்பதன் குறியீடாகும்“.

இதுவே தீபாவளி என்பதன் உண்மையான கருத்து!

ஆதாரம்: தெய்வீக அருளுரை –ப்ரசாந்தி மந்திர் நவம்பர் 9 1988

சின்ன கதை
தீபாவளி பற்றி தெய்வீக அருளொளி

நரகசதுர்த்தி பண்டிகை அதாவது தீபாவளி என்று அறியப்படுவது-அக்டோபர் 18,2009 இல் கொண்டாடப்பட்டது) மனிதனுக்கு, ஒருவனது ஒழுக்கம் எவ்வாறு அவனது விதியை நிர்ணயிக்கிறது என்பதையும், அது அவனது வெற்றிகளை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையும், ஒருவன் தேவனா, அசுரனா என்று குறியிடப்படுவதையும் நினைவூட்டும் நாளேயாகும் இந்த நாள் “நரகன்” என்பவன் பெயரால் அழைக்கப்படுகிறது. “நர” ஒரு மனிதனே. ஆயினும் அவன் அசுரனாக வளர்ந்தான். எனவே நரகாசுரன் என்னும் அர்த்தமுள்ள பட்டத்தை பெற்றான், தன் அசுர குணத்தால், நரகாசுரன் நரகத்தை நோக்கியே சென்றான். அரசனான அவன் தன் குடி மக்களை, தன் அதிகாரத்தால் தன்னைப்போல் தீய பிம்பமாகவே, ஆக்கி வைத்திருந்தான். அவனுடைய நாட்டு மக்கள் தீயவற்றிலும், வன்முறையிலும் மயங்கிக்கிடந்தார்கள்

இறைவன் நரகாசுரனை அழித்து விட்டு மக்களை கொடுங்கோலாட்சியிலிருந்து மீட்டு, புனித சாத்வீக பாதையில் (பக்தி)திருப்ப திருவுளங் கொண்டார். இங்கு இறைவன் செய்த விசித்திரமான ஒரு யுக்தியை நாம் மனதில் கொள்ள வேண்டும். இறைவன் அவனது ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்தார்; ஒரு முறையல்ல; மீண்டும், மீண்டும். ஒரு வேளை அவர் அந்த அசுரனின் அழிவை முதல் படையெடுப்பிலேயே முடித்திருக்கலாம் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மீண்டும் மீண்டும் படையெடுத்து. அவனுக்கு ஆத்திரமூட்டி கோபத்தால் வெடிக்கச்செய்து அவனை பலவீனமாக்கினார். அவனது எதிர்ப்பு, பலவீனமாகிக் கொண்டே போனது.

கோபம் ஒருவனது பலத்தைக் கடுமையாக குறைக்கிறது எனவே இறைவன் அவனை அடிக்கடி கோபத்தில் மூழ்கடித்து அவன் மயக்கமுற்றபோதும் அவன் தன் கைகளால் வதம் செய்யத் தகுதியானவனல்ல என்று கருதினார். எனவே தனது தேவி சத்யபாமாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்று அந்த துஷ்டனைக் கொல்லப்பணித்தார்..அவளால் அதை சுலபமாக செய்ய முடியும் ஏனெனில் அவன்தான் தனது முக்கால்வாசி சக்தியை இறைவனின் உத்தியால் இழந்துவிட்டானே.

இந்நாள் (தீபாவளிப்பண்டிகை) ஒரு அசுரனை அழித்ததன் நினைவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது இந்த கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இன்னாளில் இறைவன் அஞ்ஞானம் (அறியாமை) என்னும் இருளை அழித்து ஆத்மாவைப்பற்றிய விழிப்புணர்வு இல்லா திருந்ததை மக்களிடமிருந்து மறையச்செய்தார். எங்கு ஆன்ம ஒளி ஒளிர்கிறதோ அங்கு தீய எண்ணங்கள், தீயபேச்சுக்கள், கெட்ட செய்கைகள் ஆகியவை பயங்கொண்டு பறந்தோடும். எனவே ஒருவர் தான் யார் என்று அறிய வைக்கும் ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
- பாபா

குறுந்தகடு - தொங்கவிடு
(சுவரலங்கார தொங்கல்கள் - உபயோகமற்றதை உருப்படி ஆக்குதல்)

நம் பல பேரிடம் வீணான குறுந்தகடுகள் வீட்டில் கிடக்கன்றன. அவற்றை நாம் அற்புதமான வண்ண மயமான கலைப்பொருளாக மாற்றலாம். இங்கு அவற்றைக் கொண்டு அழகான சுவற்றலங்கார தொங்கல்கள் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.


கற்பிக்கும் நற்பண்புகள் :
 • கலைத்திறன்
 • பொறுமை
 • பொருட்களை திறமையாக கையாளுதல்.

தேவைப்படும் பொருட்கள் :
 1. பழைய குறுந்தகடுகள் (சி.டி)
 2. அக்ரிலிக் பெயிண்ட்.(எந்த கலராக இருந்தாலும்.)
 3. குந்தன் கற்கள், மணிகள், சரங்கள், பொன் கலர் லேஸ் முதலியன
 4. ஏதாவது சிறிய கலைபொருள் அல்லது கடவுளரின் உருவ பொம்மைகள் அலங்கரிக்க.
 5. க்ராஃப்ட் பசை

செயல்முறை :
 1. பழைய சிடியை எடுத்து நடுபகுதியில் அக்ரிலிக் பெயிண்ட் அடிக்கவும்.
 2. சிடிஐ அலங்கரிக்க ஆரம்பிக்கவும்-குந்தன் கற்கள், மணிகள், மணிசரங்கள் படத்தில் காட்டியுள்ளபடி.
 3. அலங்காரப் பொருளை நடுவில் வைத்து ஒட்டவும்.
 4. பொன் கலர் லேஸ் எடுத்து வெட்டி u வடிவத்தில் சிடிக்கு பின்புறம் வைத்து ஒட்டவும்.
 5. அழகான ஒளிரும் சுவரலங்கார தொங்கல்கள் தயார்.
 6. இந்த அற்புதமான செயல்முறையை செய்து நம் வீட்டை இந்த தீபாவளிக்கு அலங்கரிப்போம்.
 7. மேலும் சில வடிவமைப்புக்கள் தரப்பட்டுள்ளன.


ஆரத்தி தட்டு அலங்கரித்தல்

புகுத்தும் நற்பண்புகள் :
 • பொறுமை
 • கலைஉணர்வு

தேவைப்படும் பொருட்கள் :
 1. மண் விளக்குகள்
 2. ஏதாவது எவசில்வர் தட்டு, மண் தட்டு (அ) பித்தளை தட்டு
 3. மணி சரங்கள், குந்தன் கற்கள் முதலியன
 4. க்ராஃப்ட் ஒட்டும் பசை
 5. அக்ரிலிக் பெயிண்ட்

செயல்பாடு :
 1. மண் அகல் விளக்குகளையும் தட்டையும் அக்ரிலிக் பெயிண்ட் அடித்து தயார் ஆக வைக்கவும்.
 2. தட்டை மணிகளாலும், சரங்களாலும் அலங்கரிக்க ஆரம்பிக்கவும் (படத்தில் காட்டியுள்ளது போல்)
 3. பெயிண்ட் அடித்துள்ள விளக்கினை தட்டின் நடுவில் வைக்கவும்.
 4. தீபாவளி ஆரத்தி தட்டு தயார்.
 5. விதவிதமான வகைகள் தயார் செய்யலாம், சில மாதிரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.விளக்குகள் வண்ணமிடுதல்

தீபாவளி என்பது ஒளி மயமான பண்டிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். தீபாவளி என்னும் வார்த்தை ‘தீபம்’ மற்றும் ‘ஆவளி’ என்ற சொற்களிலிருந்து பிறந்தது. ‘தீபம்’ என்றால் மண்ணாலான அகல் விளக்குகள் ‘ஆவளி’ என்றால் வரிசை.

ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று பின் திரும்பியதும் அன்று அமாவாசையாக இருந்ததால் அயோத்யாவாசிகள் ராமருக்கு வெளிச்சம் கிட்டும் பொருட்டு மண் அகல்களை ஏற்றி வீட்டுக்கு வெளியே வரிசையாக வைத்தனர் என்று நம்பப்படுகிறது. இந்த தீபாவளியன்று நாம் பெயின்ட் அடித்த மண் விளக்குகளைக் கொண்டு நம் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் விளக்கேற்றி வைத்து நம்முடைய ஆசைகளையும், பொய்மையையும், பற்றுகளையும் எரித்து நாமும் ஒளி பெற்றவர்களாவோம்.


கற்பிக்கப்படும் நற்பண்புகள் :
 • பொறுமை
 • கலைத்திறம்
 • விளக்கேற்றுதல் என்பது தூய்மை, நன்மை மற்றும் நேர்மறை சக்தியைக் குறிக்கிறது.

தேவைப்படும் பொருட்கள் :
 1. மண் விளக்குகள்
 2. ஒளிர்பவை (glitters), மணிகள்
 3. அக்ரிலிக் பெயிண்ட்.
 4. க்ராஃப்ட் பசை.

செயல்பாடுகள் :

 1. விளக்கினை நல்ல ஒளிரும் கலரால் பெயிண்ட் அடித்து சற்று காய வைக்கவும் (மேலே கண்ட வாறு)
 2. பிறகு அழகானா மணிகளாலும்,சிறிய கற்களாலும் ஒளிர்பவைகளாலும் அலங்கரிக்கவும்.
 3. இதை பலவிதங்களில் உங்கள் கலைத்திறனுக்கேற்றவாறு செய்யலாம். சில மாதிரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குறுந்தகடு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்
(உபயோகமற்றதை உருப்படி ஆக்குதல்)

இந்த தீபாவளிக்கு வீணான, உபயோகமற்ற குறுந்தகடுகளிலிருந்து நமக்கு வேண்டிய விளக்கு அல்லது மெழுகு வ்ர்த்தி ஸ்டாண்ட்களை தயார் செய்துக்கொள்வோம் உபயோகமற்ற பொருட்களிலிருந்து உருப்படியான கலைப்பொருட்களை தயார் செய்து உங்கள் வீட்டை ஒளி மயமாக்குக.

அறியப்படும் பண்பு நலன்கள் :
 • கலைத்திறன்
 • பொறுமை
 • உபயோகமற்றதை கலைப்பொருள் ஆக்கல்

தேவைப்படும் பொருட்கள் :
 1. உபயோகமற்ற குறுந்தகடுகள்
 2. ஃபோம் பேப்பர்
 3. வாசனையூட்டப்பட்ட மெழுகுவர்த்தி அல்லது மண் அகல் விளக்குகள்
 4. பசை

செயல்முறை :


 1. ஃபோம் பேப்பரை அடியில் வைத்து அதன்மீது குறுந்தகட்டை வைத்து வரைந்து கத்தரித்து எடுக்கவும் – படத்தில் கண்டுள்ளபடி.


 2. இதுபோல் நான்கு செட் ஃபோம் பேப்பர் வெட்டிய துண்டுகள் தயார் செய்துக் கொள்ளவும்.
 3. குறுந்தகட்டின் மேல் ஒட்டும் பசை தடவி அதன்மீது ஃபோம் பேப்பர் வெட்டியதை ஒட்டவும்.
 4. குறுந்தகட்டின் அடுத்த பக்கத்திலும் இதே போல் செய்யவும்.


 5. நடுவில் அகல் விளக்கு அல்லது வாசனியூட்டப்பட்ட மெழுகுவர்த்தியை வைக்கவும்
 6. ஒரு எளிய,அழகான மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் அல்லது விளக்கு ஸ்டாண்ட் தயார்.

வளையல் விளக்கு ஸ்டாண்ட்

அனைத்து பண்டிகைகளின் உட்பொருளின் சிறப்பை அறிதல் மிக முக்கியமானது என ஸ்வாமி கூறியுள்ளார். பண்டிகை காலங்களில் மக்கள் அதிகாலையில் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து தங்கள் வீட்டையும் சுற்றுப்புரத்தையும் சுத்தமாக வைத்திருப்பார்கள். வேதம் கூறுகிறது, ‘அந்தர் பஹிஸ்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ்திதஹ’ அதாவது இறைவன் உள்ளும் புறமும் வ்யாபித்திருக்கிறார். இவ்வாறு உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்கவேண்டியது அவசியமாகிறது தண்ணீர் எவ்வாறு நம் உடம்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறதோ அதுபோல் அன்பு நம் இதய்த்தை சுத்தமாக வைத்திருக்கிறது. பண்டிகைகளின் உட்பொருளின் சிறப்பை அறிதல், விழாக் கொண்டாட்டத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

தீபாவளி என்பது விளக்குகளின் பண்டிகை, அது தீயதன் மீதான தர்மத்தின் வெற்றியைக் குறிக்கிறது என்பது நமக்குத் தெரிந்ததே. புராணகால அரக்கனான நரகாசுரன் கொல்லப்பட்ட போது மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்து விளக்குகளை ஏற்றி இந்த நிகழ்வை கொண்டாடினார்கள். தீபாவளி என்றால் விளக்குகளின் வரிசை என்று பொருள் படும்.

இந்த தீபாவளியில் நாம் பழைய வளையல்களை உபயோகித்து ஒரு விளக்கு தாங்கி தயார் செய்வோம். உபயோகமற்றதிலிருந்து உன்னத கலைப்பொருள் செய்வதால் தீபாவளி கொண்டாட்டம் கண்டிப்பாக மேலும் சந்தோஷத்தைக் கொடுக்கும்

கற்பிக்கப்படும் பண்பு நலன்கள் :
 • பொறுமை
 • கலைத்திறன்.
 • தேவையற்றதையும் பழைய பொருட்களையும் கலைப்பொருளாக மாற்றல்
 • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல்

தேவைப்பட்ட பொருட்கள் :
 1. ஒரு பழைய டீ கப் வைக்கும் தட்டு
 2. பசை
 3. விளக்கு அல்லது மெழுகுவர்த்தி

செயல்முறை :


 1. உங்கள் வளையல் சேமிப்பிலிருந்து எளிதாக ஒளியை பிரதிபலிக்ககூடிய அழகான வடிவமைப்புகள் கொண்ட விளக்குகளை எடுத்துக்கொள்ளவும் 6 அல்லது 8 வளை யல்களை பசை தடவி ஒரு கோபுரம் போல் ஒன்றன்மேல் ஒன்றாக ஒட்டிக் கொள்ளவும் அதற்கு மேல் வளையல் வைத்தால் விளக்கின் ஒளியை மறைத்து விடும்.
 2. இந்த கோபுரம் போன்ற அமைப்பை ஒரு டீ வலையின்மீது ஒட்டவும் ஒரு மண் அகல் விளக்கை அதன் மீது வைக்கவும். விளக்கு காற்றில் அணைந்துவிடுமோ என்று கவலைப்பட வேண்டாம் டீ கப் வைக்கும் தட்டு விளக்கிலிருந்து வரும் சூட்டை கிரகித்துக்கொள்ளும்
 3. ஒரு அழகான விளக்கு தாங்கி தயார்


ஒளிரும் எண்ணங்கள்
(தீபாவளிக்கான பாலவிகாஸ் வகுப்பு செயற்பாடு)

குரு ‘தீபாவளி’ என்ற ஒரு தலைப்பை, கரும்பலகையின் மத்தியில் எழுதி அதனை உரக்கக் கூறுகிறார்.

இந்த தலைப்பிற்கு சம்பந்தமான வார்த்தைகளை குழந்தைகள் கூற வேண்டும். அவற்றை, குருமார்கள் கரும்பலகையிலும், மாணவர்கள் நோட்டு புத்தகத்திலும் எழுத வேண்டும் (தயவு செய்து அவற்றை இலக்கமிட வேண்டாம்). மேலும் வார்த்தைகளை ஒழுங்கு படுத்த வேண்டாம். அவர்களிடமிருந்து என்ன, விதமான, எத்தனை வார்த்தைகள் வரும் என்பதற்கு எல்லையில்லை.

குறிப்பு: சம்பந்தபட்ட வார்த்தைகள் குழந்தைகளிடமிருந்து தான் வரவேண்டும். குருவிடமிருந்து அல்ல. கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பிற்கும், குழந்தை சொன்ன வார்த்தைக்கும் சம்பந்தமில்லாதிருந்தால், என்ன காரணத்தினால் இந்த வார்த்தை தோன்றியது என்று கேட்க வேண்டுமேயன்றி, “சம்பந்தம் கிடையாது” என்று மறுதலிக்கக் கூடாது.

வண்ணம் தீட்ட வகையான கோலங்கள்

குறுந்தகட்டில் விளக்கு ஸ்டாண்ட்
(உபயோகமற்றதை உருப்படி ஆக்கல் – தீபாவளிக்கான செயல்பாடு)


தீபாவளி நாடெங்கிலும் அனைவராலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது இல்லத்திற்கு அன்பையும் ஆனந்தத்தையும் மேளதாளத்துடன் அழைத்து வருகிறது.

விளக்கேற்றுதல் என்பது இவ்விழாவின் உள்ளார்ந்த ஒருங்கிணைப்பு கொண்டது தற்போது கடைத்தெருவில் அழகான நவீன விளக்குகள் குவிந்து கிடக்கின்றன. மண்ணாலான விளக்குகளை வண்ணமடித்து பண்டிகைக்கான கலையம்சம் கொண்டு வீட்டை அலங்க ரிக்க முடியும். வீட்டில் உபயோகமற்ற பொருட்களைக்கொண்டு விளக்கு ஸ்டாண்ட் கூட செய்யமுடியும்.

பழைய குறுந்தகடுகளைக் கொண்டு விளக்கு ஸ்டாண்ட் செய்வதெப்படி என்பது குறித்த காணொளிக்காட்சியைத் தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது பிரிவு 2 குழந்தைகளுக்குப் பொருத்தமான செயல்பாடு ஆகும்.

இந்த தீபாவளியில் ஞான தீபம் ஏற்றுவோம். உண்மையை நோக்கி என்று முள்ள பரவச உலகிற்குச் செல்வோம்! நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாப்போம். உபயோகமற்றதை மறுசுழற்சி செய்து நமது கைவண்ணத்தால் அலங்கரித்துக் கொண்டாடுவோம்.

நிலைப்படியை அலங்கரித்தல்
(தீபாவளி கைவேலைப்பாடுகள்)


பண்டிகைக் காலங்களில் கதவுகளில் தோரணம் அல்லது கதவு தொங்கல்கள் தொங்கவிடுவது வழக்கம். தோரணம் என்பது அலங்காரமான மாலை. வீட்டு வாயிற்கதவை அல்லது பூஜையறை வாயிலை அலங்கரிப்பது. பாரம்பரிய வழக்கம் என்னவென்றால் மாவிலை அல்லது வேப்பிலைத் தோரணம் கட்டுவதுதான். இவை பூச்சிகளை அண்டவிடாது மற்றும் எதிர்மறை சக்திகளை விரட்டும் என்று நம்பப்படுகிறது. சாமந்தி மலர்கள் வெகு நேரம் இருக்கும் என்பதால் அவற்றாலான தோரணங்களும் கட்டப்படுகின்றன.

பண்டிகைக் கால கைவேலைப்பாடாக தோரணங்களை மணிகள், பேப்பர் மற்றும் இதர அலங்காரப் பொருட்களைக் கொண்டு செய்யலாம். இங்கு வண்ணத்தாள்களைக் கொண்டு சுவற்றில் மாட்டும் தொங்கல்கள் செய்வதெப்படி என்பது குறித்து ஒரு காணொளிக் காட்சி. இந்த செயல்பாடு பிரிவு 1 குழந்தைகளுக்கான செயல்பாடு ஆஹும். இதனை குழுச்செயல்பாடாகவும் செய்யலாம். கட்டாயம் இது விழாக்காலத்தை மேலும் சுவாரசியமாக்கும்.

இந்த தீபாவளியில் நாம் பேப்பர் சுவர் தொங்கல்கள் செய்து கொண்டாடுவோம்.

தீபம் வண்ணக்கோலம்

இந்தியாவின் பல பாகங்களில், தீபத்திருவிழாவாம் தீபாவளியைக் குறிக்கும் விதமாக வண்ணக் கோலங்கள் வரைவது பழக்கமாக உள்ளது, தீபாவளி ஒளியையும் அன்பையும் நமக்கு போதிக்கிறது. ‘தமஸோ மா ஜ்யோதிர் கமய’ இறைவா இருளிலிருந்து என்னை - ஒளிக்கு இட்டுச் செல்வாயாக. அறியாமை என்னும் குருட்டுத் தனத்திலிருந்து உண்மை என்னும் காட்சிக்கு அழைத்துச் செல்வாயாக, ஏனெனில், உண்மை அங்கே பிரதிபலிக்கும். இத்தருணத்தில் நம் இல்லத்தை ஒளிரும் தீப ரங்கோலியால் அழகு படுத்துவோம்.

உணர்த்தப்படும் பண்புகள் :
 • ஆக்கபூர்வம்
 • கலைத்திறன்
 • பொறுமை
 • சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்தல்

தேவைப்படும் பொருட்கள் :
 1. வண்ணக் கோலப்பொடி
 2. வெள்ளை கோலப்பொடி
 3. ரங்கோலியை அலங்கரிக்க மணிகள்

செயல்முறை :
 1. தீபத்தின் வெளிக்கோட்டை சாக்பீஸால் வரைந்து கொள்ளவும்
 2. ரங்கோலியை பளிச்சென்ற கலரால் வண்ணமிடவும்
 3. பொன்னிற மணிகள் கற்கள் ஆகியவற்றால் ரங்கோலியை அலங்கரிக்கவும்
 4. - Rangoli by Janani Raghavan

பூஜை அறையை அலங்கரித்தல்
(உபயோகமற்றதை உருப்படியாக்கல்-செயல்பாடு)

வ வீட்டு வேலைகளில் பங்கேற்றல் என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஒன்று. அவர்கள் அவர்களால் முடிந்த சிறிய வேலையையாவது செய்ய வேண்டும் உதாரணத்திற்கு அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவலாம்., வீட்டை சுத்தமாக பராமரிக்கலாம் இந்த தீபாவளியில் அம்மா தீபாவளி பலகாரங்கள் செய்வதில் மும்முரமாக இருக்கும்போது மேசைமேல் வைக்கும் பழைய, காலண்டர்களைக்கொண்டு எவ்வாறு பூஜையறையை அலங்கரிக்கலாம் என்று பார்ப்போம்.

கற்பிக்கப்படும் பண்பு நலன்கள் :
 • கலைத்திறன்
 • பொறுமை
 • உபயோகமற்றதை கலைப்பொருளாக்கல்
 • வீட்டு வேலையில் பங்கெடுத்தல்

தேவைப்படும் பொருட்கள் :
 1. மேஜை மீது வைக்கப்படும் பழைய காலண்டர்கள் (கடவுளர் படமாயிருந்தால் நலம்)
 2. மணிகள் மற்றும் குந்தன் கற்கள்
 3. புதிய மற்றும் பிளாஸ்டிக் பூக்கள்
 4. புதிய மற்றும் பிளாஸ்டிக் இலைகள்

செயல்முறை :

 • 1. உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு காலண்டர்களிலிருந்து படங்களை வெட்டிக் கொள்ளவும்

 • 2. படங்களை ஒழுங்கு படுத்தவும்

 • 3. மணிகளாலும் குந்தன் கற்களாலும் அழகு படுத்தவும்

 • 4. வெளிப்புற ஓரத்தை பூக்களாலும், இலைகளாலும் அழகு படுத்தவும்.
தீபாவளி வண்ணம் தீட்டுதல்