அவதார தினம்

 • தெய்வீகத்தின் வெளிப்பாடு
 • பேரறிவிப்பு
 • கடவுளும் தூதுவர்களும்
 • சத்தியப் ப்ரஹடனம்
 • சிறுவருக்கான சிறு கதைகள்
 • பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, தன் அவதாரத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய இந்தப் புனித நன்நாளில், வேத சம்ரக்ஷணம், தர்ம ஸ்தாபனம், வேத வித்துக்கள் போஷனம் மேலும் பக்த ஜன ரக்ஷணம் ஆகிய தன் முதன்மைக் கடமைகளை நிறைவேற்றுவதற்காககவே இவ்வுலகில் அவதரித்தார் என்பதை நாம் அனைவரும் நினைவு கூர்வோமாக!

  நம் தினசரி வாழ்வில், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை மற்றும் அஹிம்சை ஆகிய 5 அடிப்படை நற்பண்புகளைக் கடைபிடிக்கும்படி ஸ்வாமி மீண்டும் மீண்டும் நம்மைத் தூண்டுகிறார். ஏனெனில், அவையே நம் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மைப்படுத்தி தர்மத்தை நிலை நாட்ட வழி வகுக்கும்.

  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர்பைத் திறந்து பாருங்கள். இந்த நற்பண்புகளை வலியுறுத்தும் சுவாரசியமான கதைகளைப் படியுங்கள். ஒவ்வொரு கதைக்கும் நற்குணங்களைப் போதிக்கத் தகுந்த விளக்கப் படங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • சத்யம்
  • KEEP YOUR PROMISE

   வாக்குறுதியைக்...

   TRUTH WINS THE GRACE..

   வாய்மை கடவுளின் ..

   TRUTH ABOUT GOD

   இறைவனைப்...

  • தர்மம்
  • WHAT IS DUTY

   கடமை என்பது...

   WHO IS A KING

   மன்னன் என்பவன்...

   img26

   எளிய தன்மை

   img26

   துன்புறும்போது...

   img26

   மூன்று உயர்ந்த்...

   img26

   கல்லை கடவுளாக...

   img26

   விவேகாநந்தரது...

   img26

   யோகக்ஷேமம்...

   img26

   இறைவன்...

  • சாந்தி
  • img16

   பொறுமை்

   img16

   நஸிருதீனுடைய...

   img26

   தன்னம்பிக்கை...

  • ப்ரேமை
  • img16

   அழகி

   img16

   மக்கள் சேவையே ...

  • அஹிம்சை
   • KEEP YOUR PROMISE

    அஹிம்சை

    TRUTH WINS THE GRACE..

    நக்மஹாசயன்

சத்தியப் ப்ரஹடனம் (அவதார தின அறிவிப்பு)

நம் அன்பிற்குரிய ஸ்வாமி ஸ்ரீ சத்ய சாய் பாபா, தன் 14-வது வயதான 1940 –ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2௦-ந்தேதி, தம் அவதார அறிவிப்பை வெளியிட்டார். இறைவனின் தெய்வீக லீலைகளை சாமான்ய மக்களால் புரிந்துகொள்ள இயலாது என்பதால்தான், ஸ்வாமி, தம்மை அறிமுகப்படுத்துவதும், தம் உண்மை ஸ்வரூபத்தைக் காட்டுவதும், மற்றும் தம் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதும் இன்றியமையாததானது.

சாய் உருவில் வந்த நம் பகவான், இவ்வுலகில் உள்ள அனைத்து தெய்வீக உருவங்களின் உண்மை ஸ்வரூபமாவார். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பேரின்பம் அளிப்பதற்காக பகவான் விஷ்ணுவே சாய் அவதாரமெடுத்தார். மக்களை தர்மத்தின் வழியில் நடத்தவும், தம்மைச் சரணடைந்தவர்களைக் காக்கவும், உலகில் நிலவும் குழப்பமான சூழலைத் தூய்மைப் படுத்தவும் மேலும் பூமித் தாயின் பாரத்தைக் குறைக்கவுமே இவ்வவதாரம் எடுத்தார்.

அந்த சத்தியப் பிரகடனம் அதாவது உண்மை அறிவிப்புப் பற்றிய கவிதைகள் அடங்கிய ஒரு கேட்பொலித் தொகுப்பு இதோ உங்களுக்காக. பகவான் அருளிய கவிதைகளை திருமதி p.சுசீலா அவர்கள் பாடியுள்ளார் ,. Dr கீதா ரெட்டி அவர்கள் இக்கவிதைகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்துள்ளார். இப்பாடல்களில், ஸ்வாமி அவர் தம் சகோதரர் சேஷமராஜுவின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள், ஸ்வாமி பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதி, 1968-ல் மும்பையில் நடந்த 'தர்மக்ஷேத்ரா' துவக்க விழாவில் அவர் விடுத்த அறிவிப்பு, மேலும் பலவற்றைக் கேட்டு மகிழலாம். இப்பாடல்கள் அனைத்தும், பிரத்யேகமாக மக்கள் மனதில் எழும் சந்தேகங்களைக் களையும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. இவ்வித அறிவிப்புகள், ஸ்வாமி நமக்கு இறை நம்பிக்கையை வளர்க்க உதவவும் மேலும் அறியாமை இருளைப் போக்கவுமே வந்துள்ளார் என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

கேட்கும் திறன், குழந்தைகளிடத்தில் ஒருமுகப் படுத்துதலையும், புரிந்துகொள்ளும் சக்தியையும் அதிகரிக்கிறது. நாம் இந்த அவதார நன்நாளில், இனிமையான குரலில் பாடப்பட்ட, சுவாமியின் விலை மதிப்பற்ற பாடல்களின் இக்கேட்பொலி வாயிலாக ஸ்ரீ சத்ய சாய் அவதாரத்தின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

அவதார தின அறிவிப்பு (பகுதி- I)
அவதார தின அறிவிப்பு (பகுதி- II)
கடவுளும் தூதுவர்களும்
அக்பர் பீர்பால் கதைகள்

“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”

இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்.

பீர்பால் கூறினார் “இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்”

சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார்.


அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.

பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அக்பர் “குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?” எனப் பதிலுக்கு கேட்டார்.

பீர்பால் அமைதியாக கூறினார், “சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்.” என்றார்.