கிறிஸ்துமஸ் - செயற்பாடு

காாிருள் வேளையில் கடுங்குளிா் நேரத்தில் ஏழைக் கோலமதாய்

வரிகள்:
 • காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழைக் கோலமதாய்
 • பாரினில் வந்தது மன்னவனே உன் மாதயவே தயவே ! (2)

 • விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே
 • வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே.
 • காரிருள் வேளையில் ...

 • விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்
 • மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்
 • காரிருள் வேளையில் ...

உலகில் வந்தாா் தெய்வசுதன் வையம் போற்றும் வல்ல பரன்

வரிகள்:
 • உலகில் வந்தார் தெய்வசுதன் வையம்போற்றும் வல்ல பரன்
 • அதிகுளிரில் நடுஇரவில் உதித்தனரே மானிடனாய் (2)

 • பெத்தலையில் மாடையில் புல்லணையில் அவதரித்தார்
 • வேதத்தின் சொல் நிறைவேறிட தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே !
 • உலகில் வந்தார் தெய்வசுதன் ...

 • வானசேனை கீதம் பாடி வாழ்த்தினரே விண்ணவனை
 • உன்னத்தில் மாமகிமை மண்ணுலகில் சமாதானமே !
 • உலகில் வந்தார் தெய்வசுதன் ...
மாநிலமே மகிழ்வாய்

வரிகள்:
 • மாநிலமே மகிழ்வாய் மாபரன் பிறந்ததினால்
 • பண்ணிசை முழங்கிடுவோம் விண் சுடரொளி வந்ததினால்
 • வானவர் இசைப் பாட வானவர் உனை வணங்க
 • வாழ்வாய் வழியாய் ஒளியாய் தவழ்ந்தாய் புவியில் மனுவாய் !

 • சின்ன இரு விழி விரிப்பில் விண்ணகமே மின்னும்
 • சிவந்த மலர் இதழ் சிரிப்பில் கோடி எழில் சிந்தும் (2)
 • வாய் உதிர்க்கும் மழலையில் நம் வாழ்வினை பொருள் சிறக்கும் (2)
 • வானவர் இசை பாட வானவர் உனை வணங்க
 • வாழ்வாய் வழியாய் ஒளியாய் தவழ்ந்தாய் புவியில் மனுவாய் !

 • விண்ணகத்தில் உயர் மகிமை பூவில் சமாதானம்
 • சிந்தை கவர் மகிழ் செய்தி கொண்டு வந்தார் வானோர் (2)
 • காலமெல்லாம் எதிர்பார்த்த மாமன்னன் பிறந்துள்ளார் (2)
 • வானவர் இசைப் பாட வானவர் உனை வணங்க
 • வாழ்வாய் வழியாய் ஒளியாய் தவழ்ந்தாய் புவியில் மனுவாய் !
அதிகாலையில் பாலனைத்தேடி சேல்வோம் நாம் யாவரும் கூடி

வரிகள்:
 • அதிகாலையில் பாலனைத்தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி
 • அந்த மாடடையும் குடில் நாடி தேவப்பாலனை பணிந்திடப் பாடி
 • அதிகாலையில் பாலனைத்தேடி வாரீர் வாரீர் நாம் செல்வோம் .....

 • அன்னை மரியின் மடிமேலே மன்னன் மகவாகவே தோன்ற
 • விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க
 • அதிகாலையில் பாலனைத்தேடி வாரீர் வாரீர் நாம் செல்வோம் ...

 • மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே
 • தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமும்
 • அதிகாலையில் பாலனைத்தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி
 • அந்த மாடடையும் குடில் நாடி தேவப்பாலனை பணிந்திடப் பாடி
 • அதிகாலையில் பாலனைத் தேடி வாரீர் வாரீர் நாம் செல்வோம் ...
தேவபாலன் பிறந்தீரே

வரிகள்:
 • தேவபாலன் பிறந்தீரே! மனுக்கோலம் எடுத்தீரே !
 • வானலோகம் துறந்தீர் இயேசுவே ! நீர் வாழ்க வாழ்கவே !
 • தேவபாலன் பிறந்தீரே !

 • மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே !
 • வாழ்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே
 • தேவ பாலன் பிறந்தீரே ! மனுக்கோலம் எடுத்தீரே !
 • வானலோகம் துறந்தீர் இயேசுவே ! நீர் வாழ்க வாழ்கவே !

 • பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்தி பரிசுத்தனே !
 • பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே
 • தேவ பாலன் பிறந்தீரே ! மனுக்கோலம் எடுத்தீரே !
 • வானலோகம் துறந்தீர் இயேசுவே ! நீர் வாழ்க வாழ்கவே !

வண்ணம் தீட்டுதல் (பகுதி -I)

இயேசு சொன்ன கதைகள்
  Good Neighbour

  அண்டை வீட்டான்

  Lost And Found

  தொலைந்து கிட்டிய மகன்

இயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்


அத்தகு சிறப்பான ஆளுமை கொண்ட அரிய மக்களின் வாழ்வு மனித குலத்தின் நன்மையை நிலை நிறுத்தவும், உலக அமைதி மற்றும் வளமைக்காகவும், தனிமனிதனுக்கு புலன் இன்பங்கள் மற்றும் வெறிகள் எனும் தளையிலிருந்து விடுதலை பெறவும் வாழப்பட்டன. அவர்களது காலத்தில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சிகளால் இவை விளக்கப்பட்டன. இயேசு பிறந்த பொழுது அத்தகு வெளிப்பாடுகள் நடந்ததாக நம்பப்படுகின்றது. அந்த பிரதேசத்தின் ஆட்சியாளன் மக்கள் தொகை கணக்கெடுத்திட, அவரவர் சொந்த கிராமத்துக்குச் செல்லும் படி கட்டளை பிறப்பித்தான். ஆகவே, மேரியும் அவளது கணவனும் தங்களது சொந்த கிராமத்திற்கு இட்டுச் செல்லுகின்ற பாதையின் வழியே நடந்து சென்றனர். மேரி வயிற்றில் குழந்தையை சுமந்திருந்ததால், பாதி வழியில் அவளுக்கு வலி தோன்றியது. அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த கிராமத்தில், அவர்கள் எவரையும் அறிந்திருக்கவில்லை. ஆகவே, அவர்கள் ஒரு மாட்டுக்கொட்டிலில் சரணடைந்தனர். ஜோசப் மாடுகளுக்கிடையே இடம் ஏற்படுத்தி, நடு இரவில், விதிக்குச் சென்று, எவரேனும் பெண்மணி உதவிக்கு வருவரா எனத் தேடினார். ஆனால் விரைவில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

மேலும் அக்கதை விண்ணில் ஒரு ஒளிமிக்க நட்சத்திரம், அப்புதிய ஒளியின் அருகில் வீழ்ந்தது எனவும், இது சில திபெத்தியர்களையும், இதர மக்களையும், அந்த மீட்பர் பிறந்த இடத்திற்கு இட்டுச் சென்றதாகவும் கூறுகிறது. நட்சத்திரங்கள் அவ்வாறு திடீரென கீழே விழுவதோ, சரிவதோ இல்லை என்ற பொழுதிலும், இந்த கதை பலரால் நம்பிக்கையுடன் படிக்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்தக் கதையின் முக்கிய அம்சம் இதுவே. இயேசு பிறந்த போது சிறப்பான பெரிய ஒளிவட்டம், கிராமத்தின் மீதான விண்ணில் பரவியது. தீமை, அறியாமை எனும் இருளை வெல்பவன் பிறந்து விட்டான் எனவும், அவன் அன்பு எனும் ஒளியினை மனிதனுடைய இதயத்திலும், மனித குலத்திடையேயும் பரப்பிடுவான் எனவும் இது பொருளாகிறது.

[“இயேசு எவரை அறிவித்தாரோ, அவரே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 11, டிசம்பர் 24,1972, பெங்களூர்]

ஒரு கிருஸ்தவ சிந்தனையின் படி பைபிள் (விவிலியம்) அதிகார பூர்வமானதாகக் கருதப்படுகிறது. நாம் பைபிளை படிக்கும்போது இயேசுவை ஒரு ஆதர்ச புருஷனாக, உலகத்துக்கு உண்மையை அறிவிக்க வந்தவராக பார்க்கிறோம். அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை கற்கும் போது அவர் கன்னி மரியாளுக்கு பிறந்தவர் என்ற முடிவிற்கு வருகிறோம். கன்னி மரியாளுக்கு இயேசு பிறந்ததை வெளியிட்ட தருணத்தின்போது கிருஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் அனைவரும் பெருமையாக உணரத் தொடங்கி, இந்த மர்மமான பிறப்பு, தெய்வீக சக்தியின் விளைவே, மரியாள் ஒரு புனித மங்கையே என உணர்ந்தனர். அவர்கள் மேலும் இந்த உண்மையை உலகிற்கு பெருமையுடன் அறிவித்தனர். நாம் இதனை புரிந்துகொண்டு, அவர்கள் எவ்வாறு இந்த சம்பவத்தை ஒத்துக்கொண்டனர் என அறிந்து கொள்ள வேண்டும்.

[“ப்ரம்மன்” ப்ருந்தாவனத்தில் கோடை மழை 1974 ப்ருந்தாவன்]

இயேசுவைப் போல் இருக்க முயலுங்கள். இயேசுவின் ஒரே மகிழ்ச்சி தெய்வீக அன்பினை வழங்குவதும், தெய்வீக அன்பினைப் பெறுவதும். தெய்வீக அன்பில் வாழ்வதும் ஆகும்.

இயேசுவின் பிறந்த தினத்தை அவரது பிறப்பன்று தோன்றிய பிரகாசமான நட்சத்திரம்’ அடிப்படையில் கொண்ட பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அது 800 வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றும் என கூறுப்படுகிறது. சிலர் செப்டம்பர் 15ம் தேதி அவர் பிறந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அவர் டிசம்பர் 28, அன்று 3.15 a.m (விடியற்காலை) 1980 வருடங்களுக்கு முன் பிறந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த தினம் தோன்றிய நட்சத்திரமானது, 800 வருடங்களுக்கு ஒரு முறைதான் தோன்றும். அதன் தோற்றத்திற்கும், இயேசுவன் பிறப்பிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, தெய்வீக சக்தி நட்சத்திரம் தோன்றிட வேண்டும், எனும் விதி எதுவும் இல்லை. அது பக்தர்களின் கருத்து மட்டுமே. ஆனால் இயேசுவே. எல்லையற்ற மதிப்பு கொண்ட நட்சத்திரமாவார். எல்லையற்ற விஸ்தீரணத்திற்கு அவரது பிரகாசத்தினை பரப்புகிறார். பின் அதனை விடவும் குறைவான பிரகாசம் கொண்டதனை ஏன் பார்க்க வேண்டும்.

[“இயேசுவின் வழி”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 14, டிசம்பர்25, 1979, பிரசாந்தி நிலையம்]

டிசம்பர் 25 ஆம் நாள் இயேசு பிறந்த போது, மூன்று அரச பிரதிநிதிகள் மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார்கள். அப்படி உள்ளே நுழைந்த மூன்று பேரும், குழந்தை இயேசுவின் அழகையும், ஜாஜ்வல்யமான ஒளியையும் பார்த்து கூறினார்கள் “சகோதரா! இந்த குழந்தை கடவுளை நேசிக்கும் குழந்தை”- மற்றொருவர் அதனை உடனே மறுத்து “இல்லை, இல்லை, இந்த குழந்தையை கடவுள் தான் நேசிக்கிறார்!” மூன்றாமவர் சொன்னார் “இந்த குழந்தையே கடவுள்தான்!”. இந்த மூன்றின் உள்ளர்த்தம் என்ன? கடவுளை நீ விரும்புவதனால் நீ கடவுளின் தூதுவன் என்றாகிறது. கடவுள் உன்னை விரும்புகிறார் என்றால் ‘நீ கடவுளின் குழந்தை என்ற அர்த்தம் வருகிறது. தூதுவன் என்று சொல்லும் போது தீய குணங்களை ஒழிக்க வேண்டும்.

[“அன்பு நெறியைப் பரப்புங்கள்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 27, டிசம்பர் 25, 1994, பிரசாந்தி நிலையம்]

இயேசுவின் வருகை

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரியில் பாலஸ்தீனம் என்ற இடத்தில் யூத மதம் இருந்தது. யூதர்கள் அவர்கள் கடவுள். கடவுளை யகோவ என நம்பினார்கள். அவர்கள் அவர் தூதனை இஸ்ரேலுக்கு அனுப்புவார் என நம்பினார்கள். ஜெருசலம் யூதர்களின் புனித நகரம். ரோமர்களின் ஆளுகைக் கீழ் அவ்வாறே இருந்தது. இந்த சமயத்தில் இயேசு பிறந்தார். இளமைப்பருவத்தில் புனித குண இயல்புகளான அன்பு, கருணை, தியாகம் என்பனவற்றை வெளிப்படுத்தினார்.

[ “ஆன்மீகத்துடன் ஒன்று சேர்ந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 24, டிசம்பர் 25, 1991, பிரசாந்தி நிலையம்]

குழந்தை அன்னை மேரியால் வளர்க்கப்பட்டது. அவரது தந்தை தச்சுவேலை செய்பவராக பணிபுரிந்து வந்தார். அப்போது ஜெருசேலம் நகரில் திருவிழாக்காலம். பெற்றோர்களால் குழந்தை இயேசு அங்கே அழைத்துச் செல்லப்பட்டார். குழந்தை கூட்டத்தில் காணாமற் போய்விட்டது. அவர்களால் குழந்தையைத் தேடிப் பார்த்தும் காணமுடியவில்லை. அன்னை மேரி மிகவும் வருத்தப்பட்டாள்.கடைசியாக அவர்கள் பிரார்த்தனை செய்ய கோயிலுக்குச் சென்றார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், குழந்தை இயேசு கோயிலிலிருந்து வெளிவருவதைக் காண முடிந்தது. இத்தனை நேரம் குழந்தை கோயிலிலேயே இருந்து, அந்தக் கோயிலில் பூசை செய்பவர் நடத்திய அருளுரையைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது. அன்னை மேரி குழந்தையை ஆசையோடு எடுத்து அணைத்துக் கொண்டாள். இதுவரை என்ன செய்து கொண்டிருந்தாய் போன்ற கேள்விகளையெல்லாம் கேட்கத் துவங்கினாள்.

குழந்தை பதில் கூறிற்று: “தாயே! நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? இதுவரை நான் கடவுளின் கரங்களில் தான் இருந்தேன். இந்தக் கோயிலில் பூஜை செய்பவர் இறைவனுடைய அருட்சொற்களை எடுத்து விளக்கியதை கேட்டுக் கொண்டிருந்தேன்.” இவ்வாறு மிகச் சிறு வயதிலிருந்தே அந்தக் குழந்தை இறை சிந்தனையில் தான் இருந்தது.

சிலகாலம் கழித்து அவரது தந்தை ஜோசப் இறந்துவிட்டார். அன்னை மேரி மகனிடம் சொன்னாள். “உனது தந்தை இறந்துவிட்டதால் நீ உனது தந்தையின் தொழிலை ஏற்றுச் செய்ய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் வாழ்க்கை நடத்தலாம்”. ஆனால் மகனுக்கோ தந்தையின் தொழிலைத் தொடர்வதில் நாட்டமில்லை. தாயும் இளம் இயேசுவின் விருப்பத்துக்கு எதிராக வற்புறுத்தவில்லை. ஒருநாள், இளம் இயேசு ஒரு மலை உச்சிக்கு தனியாகச் சென்றார். தாய் மிகவும் மனம் வருந்தினாள். தன் மகன் இல்லாததால் மிகவும் துயரப்பட்டாள். இயேசு தனியாக அமர்ந்து இறைவனை தியானிக்கத் தொடங்கினார். சில காலம் கழித்து, பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் திரும்பும் வழியில் கலிலீ என்ற கடற்கரையில் சில மனிதர்கள் ஒரு குழுவாக அமர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். இளம் இயேசு அவர்கள் வருத்தப்படும் காரணத்தை வினவினார். அவர்கள் தாங்கள் செம்படவர்கள் என்றும், சில தினங்களாக அவர்களது வலையில் ஒரு மீன் கூட சிக்கவில்லை என்றும் கூறினர். இயேசு கூறினார் “என்னைப் பின் தொடருங்கள், மீன்கள் இல்லாத நீர் நிலை கூட இருக்குமோ?” பின்னர் அவர்களை அழைத்துச் சென்று தானும் அவர்களது படகில் அமர்ந்து கொண்டார்.

கடலின் நடுப்பகுதிக்கு வந்த பிறகு, அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இப்போது வலைகளை வீசிப் பார்க்கச் சொன்னார். அவர்களின் ஆச்சரியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் ஏற்ப, செம்படவர்கள் அன்று தங்கள் வலை நிறைய மீன்கள் பிடிப்பட்டதைக் கண்டனர். இந்த நிகழ்ச்சி செம்படவர்களிடம், அவர் மேல் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆகையால் மனித குலத்துக்கு நம்பிக்கை என்பது மிக முக்கியமானது எனப்புரிகிறது.

இயேசு அந்த மக்களிடம் அத்தகைய உயர்ந்த நம்பிக்கையை உருவாக்கினார். அங்குள்ள செம்படவர்களில் ஒருவனுக்கு இயேசு, பீட்டர் என்று பெயரிட்டார். அவர் இயேசு மேல் அளவற்ற அன்பும், நம்பிக்கையும் வளர்த்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செம்படவர்கள் இயேசுவை தங்களுடன் மீன் பிடிக்க அழைத்துச் செல்வார்கள். அவர்கள் திரும்பியதும், இயேசு அவர்களுக்கு ஆன்மீக விஷயங்களைப் பற்றி எடுத்துக் கூறுவார். பீட்டரின் தந்தை இறந்தபோது, அவரின் தாய் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தாள். ஆனால் இயேசு அவளைத் தேற்றி ஆறுதல் சொன்னார்.

“மரணம் என்பது ஒரு உயிருக்கு உடையைப் போன்றது. இதற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்? இந்த பௌதீக உடல்கள் வந்து போகக்கூடியவை. ஆகையால் நிலையற்ற இவற்றுக்காக உங்கள் சிந்தனையை வீணாக்காதீர்கள். உள்ளிருப்பவர் இந்த உடலினுள் வாழ்பவர் தான் உண்மையான தெய்வம்”

இவ்வாறு இயேசு நிறைய போதனைகள் செய்து தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படிச் செய்தார். இவ்வாறாக செம்படவர் குலத்தவர், இயேசுவின் அருகில் இருந்து மகிழ்ச்சியை அனுபவித்தனர். அந்த நேரத்தில் ரோமானியர்களுக்காக, மாத்யு என்ற வரி வசூல் செய்பவர், தனது வருகையின்போது, இயேசு சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார். அத்தோடு நில்லாமல் குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வார். கடைசியில் அவர் இயேசுவின் சீடர்களில் ஒருவரானார்.

சில காலம் கழித்து, இயேசுவுக்கு கஷ்டங்கள் ஏற்படத் தொடங்கின. அவரது போதனைகளுக்கு எதிர்ப்புகள் தோன்றின. யார் மனித உருவில் வந்தாலும், இந்த நிலை தவிர்க்க முடியாது. கஷ்டங்கள் இன்றி மனிதனால் வாழ முடியாது. சாவு, பிறப்பைத் தொடர்கிறது. அதேபோல் கஷ்டங்களும், மகிழ்ச்சியைத் தொடர்கின்றன.

சுகதுக்கே ஸமேக்ருத்வா லாபலாபௌ ஜயா ஜயௌ

(இன்பத்திலும், துன்பத்திலும், லாபத்திலும், நஷ்டத்திலும், வெற்றியிலும், தோல்வியிலும் ஒருவன் தன் சமநிலை தவறக்கூடாது)

ஆன்மிகம் என்பது பஜன் செய்வதும், சில வழிப்பாடுகளை நடத்துவதும் என்பதல்ல. நல்ல மேன்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு எப்போதும் நன்மை செய்யுங்கள். நல்ல பெயரை சம்பாதியுங்கள்.

இயேசு தனது உடலை சிலுவையில் அறையும்படியான தியாகத்தைச் செய்துவிட்டு அத்தகைய நல்ல பெயரைத்தான் சம்பாதித்தார். நீங்கள் தியாகத்தை விட்டு விட்டு, போகத்தில் ஈடுபட்டால் ரோகத்தில் தான் முடிவடைவீர்கள். ஆகவே எப்போதும் தியாகம் செய்யச் சித்தமாய் இருங்கள்.

இயேசு கிறிஸ்து இத்தகைய மேன்மையான குணங்களை வளர்த்துக் கொண்டவர். அன்பான இதயத்தோடு ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர் அடைக்கலம் தந்தார். உண்மையில் நிறையபேர் அவரிடம் அடைக்கலம் பெற விழைந்தனர். இதனால் அவர் நிறைய எதிரிகளை சம்பாதிக்க நேர்ந்தது. உங்களுக்குக் கஷ்டம் வந்தாலும் நீங்கள் மற்றவருக்கு உதவ வேண்டும். ஒரு பொழுதும் மற்றவர்களை தூஷனை செய்யாதீர்கள். ஏனெனில் அதே ஆத்மாதான் எல்லோரிடமும் ஊடுருவி நிற்கிறது.

நீங்கள் மற்றவர்களை திட்டினால், உங்களையே திட்டியதாக ஆகிறது. உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்றால் விலகி இருங்கள். நீங்கள் தீய குணங்களை விடவில்லையென்றால் நீங்கள் என்ன நல்ல வேலை செய்தாலும் எந்தப் பயனும் இல்லை. உங்களால் அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், நல்ல இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்.

நீங்கள் யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்கு உதவுங்கள். இன்று இது அவன் முறை, நாளை உனது முறையாக இருக்கலாம். எப்போதும் இதனை மனத்தில் வையுங்கள். எப்போதும் எல்லோருடைய நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

[“இப்போதைய தேவை – அன்பும் ஒழுக்கமும்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 35,டிசம்பர் 25,2௦௦2, பிரசாந்தி நிலையம்]

இயேசு மூன்று பொருட்களை வேண்டி பிரார்த்தித்தார்

இயேசு தமது முப்பதாவது வயதில், தந்தையின் இழப்பிற்குப் பிறகு தாயின் அமைதியோடு ஆன்மீகப் பாதையில் நடக்கத் தொடங்கினார். ஜான் என்ற பாதிரியாரிடம் ஆன்மீக போதனைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு நாற்பது நாட்கள் காட்டில் சென்று ஆன்மீக சாதனை செய்தார். அதன்போது அவர் இறைவனிடம் கேட்ட மூன்று வரங்களாவன.

1.அனைவரையும் பேதமின்றி நேசிக்கும் பண்பு
2. பொறுமை அமைதி
3. தியாகத்தின் வழியில் உடலைப் பயன்படுத்தி சேவை செய்தல்
இவையே ஆகும்.

நாற்பது நாட்கள் வழிபாடு செய்த பின்பு அவர் இறைவனை வாழ்த்தி இறைவன் தாம் விரும்பியதைத் தந்தமைக்காக வணங்கினார். பின்னர் ஓர் குற்றம் புரிந்த மீனவனைத் திருத்தி அவனையே தமது முதல் சீடனாக ஏற்றார்.

கல்வி என்ற இடத்தில் தமது சீடர்களிடம் பூமியில் இறைவனின் அன்பு என்ற பரலோக ராஜ்ஜியத்தை நிறுவவே தாம் வந்துள்ளார். எனவும் மீனவர்கள் அவரது அமைப்பிற்கு உதவ வேண்டும் எனவும் விரும்பினார்.

அவர்கள் அப்பாமர மக்களை நோக்கி மனிதப்பிறப்பின் மகத்துவத்தை உரைத்தார். தமக்குள் உறைகின்ற இறைவனை அவர்கள் கண்டு வாழ்வில் உயர்வடைய வேண்டுமென போதித்தார்.

இயேசு கூறிய கதையாவது ஒரு ஆற்றில் நீர்வேகமாக ஓடிக்கொண்டிருகிறது. அதன் விசைக்கேற்ப ஒரு மீன் அதன் வழியில் நீந்துகிறது. விளையாடி மகிழ்கிறது. ஆனால் அந்நீரில் ஒரு யானை விழுந்தால் அது அடித்துச் செல்லப்பட்டு இறந்து போகும்.

அதே போல வாழ்வில் யானை போன்று பெரிய அளவில் உலகாயத ஆசைகளைக் கொண்டவராய் நாம் இருந்தால் அடித்துச் செல்லப்படுவோம். மீன் எளிமையாக அறியாததாக இருப்பது போல தேவைக்கேற்ப உலகப் பொருட்களில் மிதமான ஆசை வைத்தால் என்றும் மிதந்துகொண்டு, நீந்திக் கொண்டு வாழ முடியும், எனவே பற்றுகளை அறுத்து இறையன்பு என்று ஆனந்தத்தோடு வாழ வேண்டும்.

[“அன்பு மனித ஒற்றுமைக்கான திறவுகோல்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 21, டிசம்பர்25, 1995, பிரசாந்தி நிலையம்]

இளமைப்பருவத்தில் இயேசு புனித குண இயல்புகளான அன்பு, கருணை, தியாகம் என்பனவற்றை வெளிப்படுத்தினார். ஒருவரின் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று குல வழக்கப்படி தச்சு வேலையில் ஈடுபட்டார். அவரின் 12வது வயதில் அவரது தந்தை காலமானார்.

சிறிது காலம் தந்தையின் தொழிலைத் தொடர்ந்தபின் மனித சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மொட்டானது மலரும் போதே மனம் வீசுவது போல் அவரின் தெய்வீகம் சிறுவயதிலேயே வெளிப்பட்டது.

[“ஆன்மீகத்துடன் ஒன்று சேர்ந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 24, டிசம்பர்25, 1991, பிரசாந்தி நிலையம்]

இயேசு சமுதாய சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்! அதற்கு முக்கிய காரணம் அவரது மேரிதான்! சிறிய வயதிலேயே அன்னை மேரி குழந்தை இயேசு சத்யம், தர்மம், அன்பு, இரக்கம் இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னாள்! இயேசு தமது பனிரெண்டாம் வயதில் தமது தாய் தந்தையாகிய மேரி, ஜோசப்புடன் ‘ஜெவிஷ்’ திருவிழாவைக் காணச்சென்றார். கூட்டத்தில் இயேசு பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டார். மரியாளும் ஜோசப்பும் நெடிய நேரம் தேடிய பின் இயேசு ஒரு கோயில் முன்பு பிரசங்கம் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார். மரியாள் இயேசுவைப் பார்த்து, மகனே நீ ஏன் சொல்லாமல் சென்றாய்? நானும் உன் தந்தையும் தவித்துப் போவோம் என்றாள். இயேசு உடனே தாயே! இறைவனாகிய தந்தை இருக்கும் போது என்ன பயம்? ஏன் கவலைப்படுகிறீர் என்று கேட்டார். அவ்வயதிலேயே இயேசு தம்மை இறைவனின் மகனாகக் கருதினார். இயேசு தமது முப்பதாவது வயதில், தந்தையின் இழப்பிற்குப் பிறகு தாயின் அமைதியோடு ஆன்மீகப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.ஜான் என்ற பாதிரியாரிடம் ஆன்மீக போதனைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் ஞானஸ் னம் பெற்றபின்பு நாற்பது நாட்கள் காட்டில் சென்று ஆன்மீக சாதனை செய்தார். நாற்பது நாட்கள் வழிபாடு செய்த பின்பு அவர் இறைவனை வாழ்த்தி இறைவன் தாம் விரும்பியதைத் தந்தமைக்காக வணங்கினார். கல்வி என்ற இடத்தில் தமது சீடர்களிடம் பூமியில் இறைவனின் அன்பு என்ற பரலோக ராஜ்ஜியத்தை நிறுவவே தாம் வந்துள்ளார். எனவும் மீனவர்கள் அவரது அமைப்பிற்கு உதவ வேண்டும் எனவும் விரும்பினார். அவர்கள் அப்பாமர மக்களை நோக்கி மனிதப்பிறப்பின் மகத்துவத்தை உரைத்தார். தமக்குள் உறைகின்ற இறைவனை அவர்கள் கண்டு வாழ்வில் உயர்வடைய வேண்டுமென போதித்தார்.அவர் மேலும் இவ்வாறு அறிவித்தார், “ நானும் எனது தந்தையும் ஒன்றே”

[“அன்பு நெறியைப் பரப்புங்கள்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 25, டிசம்பர் 25,1994, பிரசாந்தி நிலையம்]

மேலும் படிக்க...
சின்ன குழந்தை இது செல்ல குழந்தை

வரிகள்:
 • லா லா லா லா லா லா .............
 • லா லா லா லா லா லா .............

 • சின்ன குழந்தை செல்ல குழந்தை
 • மண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை
 • சின்ன குழந்தை இது செல்ல குழந்தை
 • மண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை

  ஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே ஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே

 • விண்ணும் மண்ணும் மகிழ்ந்திட
 • நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்திட
 • நெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே
 • நம் நெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே

 • சின்ன குழந்தை இது செல்ல குழந்தை
 • மண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை

 • புதுமை தேடுகின்ற புது வரவு
 • புது விடியலை தருகின்ற அருள் இரவு
 • நம்பிக்கை விதைத்திடும் புது நிலவு
 • இந்த நாநிலம் மகிழ்வுறும் இறைவுறவு

 • லா லா லா லா லா லா .............
 • லா லா லா லா லா லா ..............

 • புதுமை தேடுகின்ற புது வரவு
 • புது விடியலை தருகின்ற அருள் இரவு
 • நம்பிக்கை விதைத்திடும் புது நிலவு
 • இந்த நாநிலம் மகிழ்வுறும் இறைவுறவு

 • இதயமும் உதயமும் காணுதே
 • இறை அருள் மழை பொழியவே மகிழ்ந்திடுதே (2)

 • சின்ன குழந்தை இது செல்ல குழந்தை
 • மண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை

 • லா லா லா. லா லா லா .............
 • லா லா லா லா லா லா ..............

 • அன்பை பாடுகின்ற ஆரமுது
 • இது அகிலத்தை நிறைக்கின்ற வானமுது
 • நம்பிக்கை சுடர்விடும் திருவிளக்கு
 • இது நம்பிடும் யாவருக்கும் அருள் வாக்கு

 • லா லா லா லா லா லா .............
 • லா லா லா லா லா லா ..............

 • அன்பை பாடுகின்ற ஆரமுது
 • இது அகிலத்தை நிறைக்கின்ற வானமுது
 • நம்பிக்கை சுடர்விடும் திருவிளக்கு
 • இது நம்பிடும் யாவருக்கும் அருள் வாக்கு

 • இதையத்தில் பேரொளி சொல்லுதே
 • இறை அருள் மணி ஒலித்திட மகிழ்ந்திடுதே (2)

 • சின்ன குழந்தை செல்ல குழந்தை
 • மண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை
 • சின்ன குழந்தை இது செல்ல குழந்தை
 • மண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை

 • ஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே
 • ஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியே (2)

 • விண்ணும் மண்ணும் மகிழ்ந்திட
 • நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்திட
 • நெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே
 • நம் நெஞ்சுக்குளே பிறந்திடும் நாள் இதுவே

 • சின்ன குழந்தை இது செல்ல குழந்தை
 • மண்ணில் நம்மை தேடி வந்த தெய்வ குழந்தை

சின்னஞ்சிறு தொட்டில் சின்ன மாட்டு கொட்டில்

வரிகள்:
 • சின்னஞ்சிறு தொட்டில்
 • சின்ன மாட்டு கொட்டில்
 • சின்ன பாலன் இயேசு ராஜன்
 • செல்லமாக தூங்க (2)

 • தூங்கு தூங்கு தேவ பாலகா
 • தூதர்களும் பாடல் பாடிட
 • தூங்கு தூங்கு சர்வ வல்லவா
 • சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட (2)

 • சின்னஞ்சிறு தொட்டில்
 • சின்ன மாட்டு கொட்டில்
 • சின்ன பாலன் இயேசு ராஜன்
 • செல்லமாக தூங்க (2)

 • Mary’s Boy Child Jesus Christ
 • Was Born on Christmas Day

 • மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்
 • இயேசு பாலன் - பிறந்த செய்தி கூறினார் (2)

 • மண்ணுலகின் மன்னவரே
 • மானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ (2)

 • சின்னஞ்சிறு தொட்டில்
 • சின்ன மாட்டு கொட்டில்
 • சின்ன பாலன் இயேசு ராஜன்
 • செல்லமாக தூங்க (2)

 • என்னை மீட்ட மன்னனுக்கு
 • புல்லணை தானோ
 • பொன், பொருள், பரிசு
 • உமக்கு போதுமோ (2)

 • பொன்னுலகின் ரக்சகனே
 • பாவிகளின் காணிக்கையே ஏற்றுகொள்ளுங்கள் (2)

 • சின்னஞ்சிறு தொட்டில்
 • சின்ன மாட்டு கொட்டில்
 • சின்ன பாலன் இயேசு ராஜன்
 • செல்லமாக தூங்க (2)

 • தூங்கு தூங்கு தேவபாலகா
 • தூதர்களும் பாடல் பாடிட
 • தூங்கு தூங்கு சர்வ வல்லவா
 • சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட (2)

 • சின்னஞ்சிறு தொட்டில்
 • சின்ன மாட்டு கொட்டில்
 • சின்ன பாலன் இயேசு ராஜன்
 • செல்லமாக தூங்க (2)

 • Mary’s Boy Child Jesus Christ
 • Was Born on Christmas Day

இயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு

வரிகள்:
 • தந்தான ..............

 • இயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு
 • நம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு (2)

 • எளியவரின் குரலை கேட்க
 • ஏழைகளின் வாழ்வை உயர்த்த
 • இயேசு சாமி மண்ணில் வந்தாரு
 • விண்ணில் இருந்து மண்ணில் வந்தாரு

 • இயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு
 • நம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு

 • ஹே ஹே ஹே ..... ஹே ஹே ஹே ..... ஹோ ஹோ

 • நீதி நேர்மை உலகத்தில் விளங்கிடவே
 • அன்பு அமைதி மனசினில் தவழ்ந்திடவே (2)

 • நல்ல செய்தி நமக்கு சொல்ல,
 • நல்லவராய் வாழ செய்ய (2)
 • புதிய உலகம் படைத்திடவே பொறந்து வந்தாரு
 • இயேசு பொறந்து வந்தாரு

 • இயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு
 • நம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு (2)

 • தந்தான ..............

 • ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை எடுத்துச் சொல்லி
 • தாழ்வில்லாத நல்ல வாழ்க்கை வாழச் சொல்லி (2)

 • ஊரும் உலகும் இணைஞ்சி நிக்க
 • சமாதானம் எங்கும் ஒலிக்க (2)

 • ஒசந்த வாழ்வை உலகம் பெற்று
 • உள்ளம் மகிழுது, இந்த உலகம் உய்யுது

 • இயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு
 • நம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு (2)

 • எளியவரின் குரலை கேட்க
 • ஏழைகளின் வாழ்வை உயர்த்த
 • இயேசு சாமி மண்ணில் வந்தாரு
 • விண்ணில் இருந்து மண்ணில் வந்தாரு

 • இயேசு சாமி நம்ம மண்ணில் வந்தாரு
 • நம்ம எல்லோரையும் மீட்க வந்தாரு

ராக்காலம் பெத்லேம்

வரிகள்:
  • ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
  • தம் மந்தை காத்தனர்
  • கர்த்தாவின் தூதன் இறங்க
  • விண் ஜோதி கண்டனர்

  • அவர்கள் அச்சங் கொள்ளவும்
  • விண் தூதன் திகில் ஏன்
  • எல்லாருக்கும் சந்தோஷமாம்
  • நற்செய்தி கூறுவேன்

  • தாவீதின் வம்சம் ஊரிலும்
  • மெய் கிறிஸ்து நாதனார்
  • பூலோகத்தார்க்கு ரட்சகர்
  • இன்றைக்குப் பிறந்தார்

  • இதுங்கள் அடையாளமாம்
  • முன்னணை மீது நீர்
  • கந்தை பொதிந்த கோலமாய்
  • அப்பாலனைக் காண்பீர்

  • என்றுரைத்தான் அக்ஷணமே
  • விண்ணோரம் கூட்டத்தார்
  • அத்தூதனோடு தோன்றியே
  • கர்த்தாவைப் போற்றினார்

  • மா உன்னதத்தில் ஆண்டவா
  • நீர் மேன்மை அடைவீர்
  • பூமியில் சமாதானமும்
  • நல்லோர்க்கு ஈகுவீர்

சிந்தை மகிழும்

வரிகள்:
  • லாலலா ... லாலலா
  • சிந்தை மகிழும் சென்று புகழும்
  • இன்று பரர் உமக்காய்
  • கந்தை அணிந்து வந்து பிறந்தார்
  • கன்னி மரியின் மைந்தனாய்
  • சிந்தை களி கூறுங்கள்
  • தேவ தேவன் உமக்காய்
  • நிந்தை ஒளியாய் இன்று பிறந்தார்
  • கன்னி மரியின் மைந்தனாய்

  • லாலலா ... லாலலா
  • சிந்தை மகிழும் …........
  • லாலலா ... லாலலா

  • சமாதனம் பூமிக்கு
  • தந்தார் பரரும் மகிழ
  • தாமாய் மகவாய் பாவிகளுக்காய்
  • தாவீது அரசனின் ஊர் வந்ததார்

  • லாலலா ... லாலலா
  • சிந்தை மகிழும் …......
  • லாலலா ... லாலலா

  • எண்ணும் நன்மை யாவையும்
  • கண்ணும் கர்த்தன் பாலனாய்
  • விண்ணில் மகிமை மண்ணில் பெருமை
  • திண்மை நிலை பெற நண்னினாய்

  • லாலலா ... லாலலா
  • சிந்தை மகிழும் ….....
  • லாலலா ... லாலலா

வண்ணம் தீட்டுதல் (பகுதி -II)

இயேசுவைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம் – பிரிவு II


ஏசுவிலிருந்து கிறிஸ்துவாக – ஒரு ஆன்மீக பரிமாணம்

ஒவ்வொரு மனிதனும் சக்தி பெற்ற இறைவனின் தூதுவன். ஆனால் இன்று இறப்பு கடவுளுடைய தூதுவர்களாக மக்கள் ஆகிவிட்டனர். அவர்கள் அவர்களுடைய உண்மையான மனித நிலைக்கு துரோகிகள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு உள்ளே உள்ள தெய்வத்தன்மையை தோன்றச் செய்யவேண்டும் என மனிதத்தன்மை வேண்டுகிறது. ஒவ்வொருவரும் கடவுளின் உண்மையான தூதுவனாக இருந்து அமைதியையும் பாதுகாப்பையும் இந்த உலகத்தில் வளர்க்க முயல வேண்டும். வேறு எந்த வழியும் பின்பற்றுவதற்கு இங்கு இல்லை. கடவுளுடைய செய்தி புனிதமானது மற்றும் முழுவதுமாக தன்னலத்திலிருந்து சுதந்திரமானது.

ஏசு பிறந்தபோது மூன்று மன்னர்கள் சிறு குழந்தையை காண்பதற்கு வந்தனர். அவர்களில் ஒருவர் இந்தக் குழந்தை கடவுளை நேசிப்பவராக இருப்பார் எனக் கூறினார். இரண்டாமவர் இந்தக் குழந்தை கடவுளின் அன்புக்கு உரியவராக இருப்பார் என்றார். மூன்றாமவர் அவர் கடவுள் என அறிவித்தார். கடவுளை நேசிப்பவர்கள் கடவுளின் தூதுவன். யார் ஒருவரை கடவுள் அன்பு செய்கின்றாரோ அவர் கடவுளின் மகன். ஒருவர் இவ்விரண்டையும் அனுபவிக்கும் பொழுது அவர் கடவுளுடன் ஒன்றி விடுகிறார். தந்தையும் மகனும் ஒருவரே. ஆகையினால் வெளிப்படையாக உங்களைக் கடவுளின் தூதுவராக இருப்பதற்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள், நீங்கள் கடவுளின் செய்தியை பின்பற்றி வாழ வேண்டும் என்பதாகும். இந்த செய்தி அனைவரையும் சேவை செய்ய அழைக்கின்றது. அனுதாபம், நல்லொழுக்கம், நேர்மை ஆகியவை அந்த செய்தியின் முக்கியமான அம்சங்களாகும். அன்பு காவல்காரனாக இருக்க வேண்டும். அன்பு இல்லாமல் இருந்தால், அங்கே வெறுப்பு அதிகரிக்க வழியுண்டு. இன்று மக்களிடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லை என்றால் எப்படி அங்கு பேரானந்தம் இருக்க முடியும்? பேரானந்தம் இல்லாமல் எப்படி ஒருவரால் கடவுளை அனுபவிக்க முடியும்? மனிதர்கள் தன்னலமற்ற வாழ்க்கையை நடத்தவேண்டும். இது கடினமானதாக இருக்கலாம். ஆனால், உண்மையில் எதுவுமே எளிமையானது அல்ல. தன்னலமே மனித இனத்திற்கு அனைத்து வகையான துன்பங்களையும் ஏற்படுத்துகின்றது. தன்னலமில்லாத எந்த கெடுதலுக்கும் இடம் கொடுக்காது. தன்னலமில்லாத அன்பு எதிர்ப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இத்தகைய எதிர்ப்புகளால் பயமோ அல்லது தடுமாற்றமோ அடையக்கூடாது. ஒருவருடைய வாழ்வின் மூச்சாக அன்பு போற்றப்பட வேண்டும்.

[“தூய்மையான அன்பின் வழியாக கடவுளை அறிவாய்” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 28, டிசம்பர் 25, 1995, பிரசாந்தி நிலையம்]

ஏசுவினது வாழ்வில் இருந்த மூன்று நிலைகள்:ஏசு ஒரு காரண-ஜன்மா, இலக்குடன் பிறந்த தலைவர். அன்பு தர்மம் மற்றும் காருண்யத்தை மனிதனுடைய இதயத்தில் தக்க வைக்கும் பணிக்காகப் பிறந்தார். தன் மீது எவ்வித பற்றுதலையும் அவர் கொள்ளவில்லை. அதே போன்று மகிழ்ச்சி அல்லது துயரம். இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவிசாயத்திடவில்லை. தவிர்த்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் இதயத்தைக் கொண்டிருந்தார். அதே போன்று மகிழ்ச்சி அல்லது துயரம், இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவி சாய்த்திடவில்லை, தவித்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலலிக்கும் இதயத்தை கொண்டிருந்தார். அன்பெனும் பாடத்தினை நாடெங்கும் பிரச்சாரம் செய்தபடி செய்தார். மனித குலத்தினை மேலோங்கச் செய்வதற்கான வீடு பேறே அவர் தம் வாழ்வு.

பெரும்பாலான சாதகர்களைப் போன்று, லெளகீக உலகில் அவர் முதலில் கடவுளைத் தேடினார். ஆனால் விரைவில் அவர் இந்த உலகமானது ஒருவரது சுயமான கற்பனையால் சித்தரிக்கப்பட்ட மாயக்கண்ணாடி என்பதனை உணர்த்து தன்னுள்ளேயே இறைவனை கண்டறிய விழைந்தார். கஷ்மீரில் ஹிமாலய மடாலயங்களிலும், கிழக்கு நாடுகளில் துறவு மையங்களிலும், தத்துவ விசாரத்திலும் அவர் அனுபவம் அடைந்த பின்னர், அந்த அனுபவங்கள் அவருக்கு பெருத்த அளவிலான அறிவு நிலையைத் தந்தது, இறைவனது தூதுவன் எனும் நிலையிலிருந்து இறைவனது புதல்வன் எனத் தன்னை அழைக்கும் நிலைக்கு உயர்ந்தார். உறவின் பிணைப்பு அதகரித்தது. “நான்” என்பது ஒரு தொலைதூர தனிப்பட்ட ஒளியோ அல்லது தன்மையோ அல்ல. ஒளியானது ’நான்’ என்பதன் ஒரு அங்கமாயிற்று. உடல் பற்றிய உணர்வு பிரதானமாக இருக்கும் போது, அவர் தூதுவனாயிருந்தார். இதயம் குறித்த உணர்வு நிலையில் அவர் உயர்ந்த பின்னர், அதிக அளவிலான நெருக்கம் மற்றும் அருமையினை அவர் உணர்ந்திட இயல்பாகிவிட்டது.

பின்னர், ஆத்மா பற்றிய உணர்வு நிலை நாட்டப்பட்ட பொழுது ஏசு ”நானும் எனது தந்தையும் ஒன்றே” என அறிவித்தார். இந்த மூன்று நிலைகளையும் இங்ஙனம் விளக்கிடலாம் “நான் ஒளியில் இருந்தேன் ஒளி என்னுள் இருந்தது” மற்றும் “நானே ஒளியாகிறேன்”. இதனை த்வைதம் (இரட்டை நிலை) விசிஷ்டாத்வைதம் (தகுதி பாடுடைய இரட்டை-நிலை அற்ற தன்மை) மற்றும் அத்வைதம் (இரட்டை-நிலை அல்லாத நிலை) என்பதுடன் ஒப்பிடாலாம். இவை வேத தத்துவத்தில் விவரிக்கப்பட்டுள்ள பல நிலைகள். முடிவான நிலையில், இரட்டை நிலை அனைத்தும் விட்டொழிக்கப்பட்டன. இவையே, அல்லது ஆன்மீக ஒழுக்கங்கள் மற்றும் போதனைகளின் சாரம்.

ஏசுவின் உண்மையான பெயர் ஈசா

ஏசு, கிறிஸ்து என மக்களால் போற்றப்படுகிறார் ஏனெனில் அவரது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களின் செருக்கின் தடயமே காணப்படவில்லை, அவளிடம் பொறாமை அல்லது வெறுப்பு இருந்ததே இல்லை. அன்பு, தர்மம், அடக்கம் மற்றும் இரக்கத்தால் அவர் நிரம்பியிருந்தார். ஏசுவின் உண்மையான பெயர் ஈசா, அதனை மீண்டும் மீண்டும் உரைத்தால் ஸாயி என்றாகும். ஈசா, ஸாயி என இரண்டுமே ஈசுவரனை (இறைவன்) குறிக்கின்றன. நிலையான முழுமை, சத்-சித்-ஆனந்தா நிலை (இருத்தல்-அறிவுணர்வு-ஆனந்தம்) தீபெத்திய நூல்களில் ஏசு சில வருடங்கள் அந்த மடாலயத்தில் இருந்த காலத்தில், அவரது பெயர் ஈஷா என எழுதப்பட்டிருந்தது, அதன் பொருள் அனைத்து உயிரினங்களின் இறைவன் என்பதாகும்.

ஏசு தன்னை இறைவனது தூதுவனாக அறிவித்துக் கொண்ட பொழுது, ஒவ்வொருவருமே இறைத் தூதுவர் அவர்கள் பேசுவது, செயல்படுவது, எண்ணவது என வலியுறுத்த விரும்பினார். இதுவே வேகத்தின் உண்மையான கர்ம காண்டம். (செயல் மற்றும் விளைவுகளுடன் தொடர்புடைய கிளை) கர்ம, சாதனா (ஒழுங்கு), ஜபம் (பிரார்த்தனை), சேவை மற்றும் தியானம், வளர்ச்சி மேலும் விரிவாகும் பொழுது, ஏசு ஒவ்வொருவரும், அனைவரையும் இறைவனது புதல்வர்களாக, இறைவனது குழந்தைகளாக, ஒருவரது சகோதர சகோதரிகளாக உணர முடியும். அதன் வாயிலாக வழிபாட்டிற்கு தகுதிபெற்றதாகும். உபாஸன காண்டம் (சிந்தனையுடன் தொடர்புடைய வேதத்தின் ஒரு கிளை) ஸனாதன தர்மத்தின் (நிலையான சர்வவியாபகமதம்) நூலாகும். இந்த நிலைக்கு உரியது. முடிவில், அறிவானது ஞானமாக பழுத்து, ஞான காண்டத்தின் இலக்கானது (ஆன்மீக ஞானத்துடன் தொடர்புடைய வேதத்தின் கிளை) அடையப்படுகிறது, “நானும் எனது தந்தையும் ஒன்றே” என ஒருவர் உணரும் பொழுது இந்த நிலை அடையப்படுகிறது.

[“ஈசா” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 14, டிசம்பர் 25, 1978, பிரசாந்தி நிலையம்]

ஏசுவால் உருவாக்கப்பட்ட மூன்று வாக்கியங்களின் பொருள்

நதியில் ஓடிச்செல்லும் நீர் தனது ஆழத்தில் நிலாவைக் கொண்டுள்ளது. ஏரியில் நிலைத்து நிற்கும் நீரும் கூட அதனுள் நிலாவைக் கொண்டுள்ளது. வானும் மேலே நிலாவினைக் கொண்டுள்ளது. பாய்ந்து செல்லும் நதியில் காணப்படும் நிலா சிதைந்து, உடைந்து இருக்கும். அது வேகமாகப் பாய்ந்து, வெள்ளத்துடன் செல்கின்றது. ஏரியில் உள்ள நிலா அமைதியாக, அசைவுறாது, சிதைவுறாது இருக்கிறது. இந்த இரண்டுமே, விண்ணில் உள்ள உண்மையான நிலாவின் பிரதிபலிப்புகளே. வெள்ளத்தில் பிரதிபலிக்கப்படும் நிலவே, தனிமனித ஆத்மா. செயல்களில் ஈடுப்பட்டு, மாயையில் சிக்குண்டு, காரண, காரியங்களின் இலக்காகிறது. ஏரியின் தெளிவான பரப்பில் பிரதிபலிக்கப்படும் நிலவு, யோகி, ஞானி, சமநிலை, அமைதி, மன கட்டுப்பாடு, ஒன்றினையே சிந்தனையில் கொள்ளுதல் எனும் தன்மையை உடையது. விண்ணில் உள்ள உண்மையான நிலவு, நிரந்தரமான சாட்சி, முழுமையானது, பிரதான தத்துவம்.

ஏசு, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று வாக்கியங்களை அளித்த பொழுது, இந்த மூன்றையும் பேசினார். பரபரப்பான தனிப்பட்ட ஆத்மாவாகிய, அலைபாயும் நிலவினைக் குறிப்பிடும் பொழுது “நான் இறைவனது தூதுவன்”, தன்னை யோகியாக விளக்கிக் கொண்டாடு, இந்த இருநிலைப்பாட்டிற்கு அப்பால் உயர்ந்தது, சமநிலையை அடைந்திட்ட நிலையில் அவர் கூறினார், “நான் இறைவனது மகன்”. இவை இரண்டுமே பிரதிபலிப்புக்கள் என்பதனை உணர்ந்து பின்னர், உண்மையான நிலவே ஆகாயத்தில் சாட்சி எனவும், தானும் கூட வடிவமற்ற, நாம் மற்ற முழுமை என்பதனை உணர்ந்து, தனது வாழ் நாளின் முடிவில் இவ்வாறு அறிவித்தார். “நானும் எனது தந்தையும் ஒன்றே”.

[“ஏற்பாடு செய்வதேன்” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 13, மார்ச் 29, 1976, ஹைதராபாத்]

மனிதனின் உண்மையான மையக்கருவான ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் (வடிவம்) என்று மறை நூல்கள் முழங்குகின்றன. ஆனால் இந்த உண்மையை அறியாத மனிதன் துக்கமும் கவலையும் தன்னை ஆட்கொள்ள இடம்கொடுத்து, தனக்காகக் காத்திருக்கும் ஆனந்தத்தினை ஒதுக்குகிறான். ஒவ்வொரு மனிதனும், சகமனிதருக்கு கை நழுவவிடப்படுகின்ற ஆனந்தத்தை பற்றிய அறிவைப் பரப்பும் கடமைப்பணி தரப்பட்டுள்ள ஒரு தூதுவன். இந்த லட்சியப்பணியை அவன் தவறாகப் பயன்படுத்தி, தன் புலன்களைத் திருப்தி செய்தால், அவன் நல்ல வாய்ப்பினை இழப்பது மட்டுமல்ல, காட்டு விலங்குகளின் தரத்துக்கு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். தன்னை கடவுளின் தூதர் என்று சொல்லிக் கொண்ட இயேசு, தெய்வத்துள் அவரிடம் மகிழ்ச்சி மலர்ந்து, அவருள் இருந்த கருணையுனர்வும் சேவையுணா்வும் விரிவடைந்து, ஒரு குறிப்பிட்ட நிலையில் அவர் தன்னை கடவுளின் மகன் என்று அறிவித்தார். முடிவில் நானும் இறைவனும் ஒருவரே என்ற நிலைக்கு உயர்ந்தார்.

ஏசு தன்னைக் கடவுளின் திருமகன் என்று கூறிக்கொண்டபோது, தந்தையின் காம்பீர்யத்தையும் ஆற்றலையும் அடையப் பெற உரிமை பெறுகிறார். தன் தந்தையிடம் உள்ள இயல்புகள் அவரிடம் வளரும் போது தான் அவர் இறைவனது உடைமைகளுக்கு உரிமை கோர இயலும். அதன் விளைவாக அவர் சாயுஜ்யம் (ஐக்கியம்) அடையப்பெறுகின்றார். அப்போது நானும் என் தந்தையும் ஒன்றே என்று உறுதியாக அவரால் கூற இயலுகிறது. மறைநூல்கள் 'பிரம்மவித் பிரம்மைவ பவதி' பிரம்மனை அறிந்தவன் பிரம்மனாக ஆகிறான்.

ஏசு தனது முன்மாதிரி மூலமாக மனிதசமுதாயம் அனைத்தையும் ஊக்குவித்தார்.

வேதத்தின் கோட்பாடுகளில் இந்த மூன்று நிலைகளும் த்வைதம், விசிஷ்டாத்வைதம் அத்வைதம் என்று குறிப்பிடப்படுகின்றன. தூதனும் தலைவரும் அடிப்படையில் வேறானவர். அந்த நிலை துவைத நிலை. மகனும் தந்தையும் வெவ்வேறானவர் என்றாலும் பாசத்தாலும், ஒரே வித உணர்வுகளாலும் மனோ பாவங்களாலும் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் முழுமையும் அம்சமும் போன்று, உடலும் உறுப்பும் போன்று இருப்பவர். இந்த நிலை விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. மகனும் தந்தையும் ஒன்றாகும் போது அத்வைத நிலை.

குழந்தை கூட ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்குச் செல்ல ஆர்வமுடன் இருப்பான். ஒரே வகுப்பில் அசையாத தாவரம் போல பல்லாண்டுகள் இருப்பது அவனுக்கு வெறுப்புத்தட்டும். புத்திக் கூர்மையும் விவேகமும் உள்ள மனிதர்கள் கீழ்ப்படிகளைப் பெற்றதுமே திருப்தியுடன் இருந்தால் அவர்களை என்ன சொல்வது? இயேசு சாதனா முறைகள் அனைத்தையும் பயின்று கடந்து, தனது முன் மாதரி மூலமாகவும் உபதேசங்கள் மூலமாகவும் தாராளத்துடனும், பரிவுடனும் பற்றில்லாமலும் விவேகத்துடனும் இருப்பதற்கும் அனனவருக்கும் ஒளியும் அன்பும் கொண்டு வருவதற்கும் மனித சமுதாயத்தை ஊக்குவித்தார். தமது அற்புதங்கள் மூலம் மக்களைக் கவர்ந்து அவர் அப்போஸ்தலர்களாகவும் (நற்செய்தி பரப்பும் போதர்களாகவும்) மனிதனுக்கு முன் மாதிரியான தொண்டர்களாகவும் அவர்களை உயர்மாற்றம் செய்தார்.

[“ஜீசஸ்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு13,டிசம்பர் 25, 1976, பிருந்தாவனம்]

ஏசு கிறிஸ்து தன்னை முதலில் இறைவனின் தூதர் எனக் கூறினார். யார் இந்த தூதர்கள், இவைகளில் இரண்டு வகை உண்டு. யமதூதர் மற்றும் அவதூதர். யமதூதர்கள் மனிதர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தூதர்கள். அவதூதர்கள் காப்பாற்றும் தூதர்கள். ஏசு கிறிஸ்து இரண்டாவது வகையைச் சார்ந்தவர். நாளா வட்டத்தில் அவர் தன் உள்ளுரை இறை தன்மையை உணர்ந்தார் அப்போது அவர் “நான் இறைவனின் மகன்” எனப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் கடவுளுக்குரிய அனைத்து குணங்களிலும் தனக்கு உரிய பங்குண்டு என வெளிப்படுத்தினார். பின் இறைவனின் அனைத்து குணங்களையும் பெற்ற பின்னர் “நானும் எனது தந்தையும் ஒன்று” என பிரகடனம் செய்தார்.

[ “சங்கரரின் ஒளி மிகுந்த காலகட்டம்”ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 29, செப்டம்பர் 7,1996]

மேலும் படிக்க...
கிறிஸ்துமஸ் மரம் - கை வேலைப்பாடு
(உபயோகமற்றதை உருப்படியாக்கல்)

கற்பிக்கப்படும் பண்புகள்:
 • விழாக்கள் கொண்டாடுதலை பாராட்டுதல்
 • ஒரு குழுவாக பணியாற்ற கற்றல்
 • உபயோகமற்றதை உருப்படியாக்கல்
தயாராகுக:

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி விவாதிக்கவும். கொண்டாட்டங்கள் எவ்வாறு குடும்பத்தினரை அன்பினால் ஒன்று சேர்க்கிறது என விவரிக்கவும். பரிசுகள் கொடுப்பதும் பெறுவதும் அன்பின் வெளிப்பாடே என விவரிக்கவும். வீட்டில் கேக்குகள் அல்லது குக்கீஸ் செய்வதும் குடும்பத்தில் உள்ளோர் மீதான அன்பின் வெளிப்பாடே. உபயோகப்படுத்திய நல்ல நிலையிலுள்ள பொம்மைகள், துணிகள் இவற்றை வறுமை யில் உள்ள குழந்தைகளுக்கு தருவதும் அன்பின் ஒரு செயலே. கைவேலைத்திறனால் உபயோகமற்றதை உருப்படியாக்குவதும் சுற்றுச்சூழல் மீது நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே.

தேவைப்படும் பொருட்கள்:
 • ஐஸ்கிரீம் குச்சிகள்
 • துணி/ அக்ரிலிக் பெயிண்ட்கள்
 • நட்சத்திர சரங்கள்
 • ஒட்டும் பசை, கத்திரிக்கோல்
 • சுமைசுமையாய் கற்பனை வளம்

கிறிஸ்துமஸ் மரம் - முதல் விதம் (பிரிவு 1 குழந்தைகளுக்கு ஏற்றது) 1. மூன்று குச்சிகளை உங்களுக்கு பிடித்த விதத்தில் வண்ணமிடவும் அவற்றை ஒரு முக்கோண வடிவமைப்பில் ஒட்டவும். இந்த வடிவம் கிறிஸ்துமஸ் மரத்திற்கான வடிவம்.
 2. மரங்கள் பளபளப்பாகத் தெரிய மணிகளை குச்சிகள் மீது ஒட்டவும்.
 3. ஐஸ்கிரீம் குச்சியில் ஒரு பாதியை அடி குச்சியின் நடுவில் பட்டையாக தெரியும் படி ஒட்டவும்.
 4. பரிசுப் பொருள் மீது சுற்றுவதற்கு பயன்படுத்திய பழைய கலர் பேப்பரில் நட்சத்திரம் வெட்டி மரத்திற்கு மேல் ,ஒட்டவும்.
 5. உங்களுக்கு பிரியமானவர்களுக்கு இதனை பரிசுப்பொருளாக வழங்கலாம். பண்டிகை காலத்தைக் குறிக்க ஒரு கேக் மீது கூட வைக்கலாம். அல்லது கிறிஸ்துமஸ் மரம் மீது தொங்க விடலாம்.

கிறிஸ்துமஸ் மரம் - இரண்டாவது விதம் (பிரிவு 2 குழந்தைகளுக்கானது) 1. வண்ணமிடப்பட்ட ஐஸ்கிரீம் குச்சிகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லது விருப்பத்திற்கேற்றாற் போல வண்ணமிடலாம். 2. படத்தில் காட்டியதுபோல் ஐஸ்கிரீம் குச்சிகளை பல்வேறு அளவுகளில் வெட்டி 3. ஐஸ்கிரீம் குச்சிகளை சிறியதிலிருந்து பெரியது வரை மேலிருந்து கீழாக ஒட்டவும் அதாவது கீழிருந்து மேலாக சரிவாக தெரியவேண்டும்.
 4. மேலிருக்கும் மிகச்சிறிய (பச்சைகலர்) ஐஸ்குச்சி மற்றும் வயலெட் குச்சி இவற்றிற்கிடையே ட்வைன் நூல் அல்லது கயிறு கொண்டு படத்தில் காண்பது போல் சுருக்கு போல் அமைக்க வேண்டும்.

 5. `


 6. குச்சிகளை மணிமாலைகள், கற்கள் கொண்டு அலங்கரிக்கவும்
 7. பாலவிகாஸ் வகுப்பில் ஒரு குழந்தைக்கு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை செய்ய வைத்து, பெரிய கிறிஸ்துமஸ் மரம் மீது தொங்கவிடலாம் அல்லது வகுப்பு அறையில் அங்கும் இங்கும் அலங்காரமாகத் தொங்க விட்டு, பண்டிகையை மேலும் சிறப்பாக்கலாம்.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கைவேலைப்பாடு
(உபயோகமற்றதை உருப்படியாக்கல்)கற்பிக்கப்படும் நற்பண்புகள்:
 • பண்டிகை கொண்டாட்டங்களை பாராட்டல்
 • குழுவாக பணியாற்றக் கற்றல்
 • உபயோகமற்றதை உருப்படியாக்கல்
தயாராகுக:

குழந்தைகளிடம் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி விவாதிக்கவும் பண்டிகை கொண்டாட்டங்கள் எவ்வாறு குடும்பத்தை அன்பால் பிணைக்கிறது என்பது பற்றி விவரிக்கவும். பரிசுகள் கொடுப்பதும் பெறுவதும் அன்பின் செய்கையே என விளக்கவும். வீட்டில் கேக்குகள் அல்லது குக்கீஸ் செய்வதும் குடும்பத்தில் உள்ளோர் மீதான அன்பின் வெளிப்பாடே. உபயோகப்படுத்திய நல்ல நிலையிலுள்ள பொம்மைகள், துணிகள் இவற்றை வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு தருவதும் அன்பின் ஒரு செயலே. கைவேலைத்திறனால் உபயோகமற்றதை உருப்படியாக்குவதும் சுற்றுச்சூழல் மீது நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே.

தேவைப்படும் பொருட்கள்:
 • ஐஸ்கிரீம் குச்சிகள்
 • அக்ரிலிக் பெயிண்ட்கள்
 • ஸ்டார், மணிமாலைகள்
 • ஒட்டும் பசை
 • கத்திரிக்கோல்
 • நூல்
 • சுமைசுமையாய் கற்பனைவளம்

செய்முறை:
 1. 6 குச்சிகளை உங்கள் விருப்பத்திற்கேற்றார் போல் வண்ணம் பூசவும்.
 2. ஸ்டார் வடிவத்தில் அவற்றை ஒட்டவும்.
 3. காயவிடவும்.
 4. ஸ்டார் ஒளிர்வதற்காக மணிமாலைகளை ஒட்டவும்.
 5. ஒரு சிறிய நூல் துண்டை படத்தில் காட்டியபடி ஒட்டவும்.
 6. இதனை உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசளிக்கலாம்.
 7. பண்டிகை காலத்தைக் குறிக்க ஒரு கேக் மீது கூட வைக்கலாம். அல்லது கிறிஸ்துமஸ் மரம் மீது தொங்க விடலாம்
கிறுஸ்துமஸ் தோரணங்கள்
(காகித கைவேல பிரிவு 1& 2 மாணவர்களுக்கு )


கற்பிக்கப்படும் நற்பண்புகள்:
 • விழாக்கொண்டாட்டங்களை ஆதரித்தல்
 • குழுவாக பணியாற்றல்
 • வரையும் திறன்
 • குழு அமைத்தல்

தயாராகுக:

குழந்தைகளுடன் கிறுஸ்துமஸ் பண்டிகை பற்றி விவாதிக்கவும். கொண்டாட்டங்கள் எவ்வாறு குடும்பத்தினரை அன்பினால் ஒன்று சேர்க்கிறது என விவரிக்கவும். பரிசுகள் கொடுப்பதும் பெறுவதும் அன்பின் வெளிப்பாடே என விவரிக்கவும். வீட்டில் கேக்குகள் அல்லது குக்கீஸ் செய்வதும் குடும்பத்தில் உள்ளோர் மீதான அன்பின் வெளிப்பாடே. உபயோகப்படுத்திய நல்ல நிலையிலுள்ள பொம்மைகள்,துணிகள் இவற்றை வறுமை யில் உள்ள குழந்தைகளுக்கு தருவதும் அன்பின் ஒரு செயலே. கைவேலைத்திறனால் குழந்தைகளிடம் உள்ள கலைத்திறன் மேம்படுகிறது.

தேவையான பொருட்கள்:
 • ஒட்டும் பசை
 • கத்திரிக்கோல்
 • கலர் காகிதங்கள் ஏ4 அளவு – ஒவ்வொரு குழந்தைக்கும் பாதி அளவு

செய்முறை:

  1. பேப்பரை மேற்கண்ட வீடியோவில் காட்டியவாறு மடிக்கவும்


  2. சரி பாதியாக கத்தரிக்கவும்
  3. குழந்தைகளை குழுக்களாக பிரிக்கவும்
  4. குழந்தைகளுக்கு கலர் பேப்பரை வினியோகம் செய்யவும்
  5. வீடியோவில் காட்டியபடி மடித்துக் கொள்ளவும்.
  6. அவர்களுக்கு பிடித்த மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் (ஸ்டார், இதய வடிவம், பனி மனிதன், அல்லது கிறுஸ்துமஸ் மரம்
  7. உங்களுக்கு பிடித்த வடிவத்தை வரைக  8. உங்களுக்கு பிடித்த வடிவத்தை வரைக


  9. வடிவத்தை தனியாக கத்தரிக்கவும் .


  10. இப்போது தோரணம் தயார்


  11. குழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்.


  12. பாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக


  கிருஸ்துமஸ் தோரணங்கள் (பனி மனிதன்)
   வழிமுறை 1 முதல் 6 ஆறுவரை பின்பற்றவும்


  1. வெளி வரி வடிவம் நகல் அல்லது பனி மனிதன் படம் வரைந்து கொள்க.


  2. பனி மனிதன் வடிவத்தை கத்தரித்துக் கொள்ளவும் .


  3. பனிமனிதன் தோரணம் தயார்.


  4. பாகங்களை ஸ்கெட்சினால் வரைக .
  5. குழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்
  6. பாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக

  கிறுஸ்துமஸ் நட்சத்தர தோரணம்
  வழிமுறை 1 முதல் 6 வரை பின்பற்றவும்


  1. ஸ்டார் வடிவத்தை எடுத்துக் கொள்ளவும்.


  2. வெளிக்கோடு அல்லது ஸ்டார் படம் நகலெடுக்கவும்.


  3. ஸ்டாரை வெட்டியெடுக்கவும்.


  4. ஸ்டார் தோரணம் தயார் .
  5. குழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்.
  6. பாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக

  கிறுஸ்துமஸ் தோரணம் (கிறுஸ்துமஸ் மரம்)
   வழிமுறை 1 முதல் 6 வரை பின்பற்றவும்


  1. மர வடிவத்தை எடுத்துக்கொள்ளவும்


  2. பென்சிலால் நகலெடுக்கவும்


  3. தனியாக வெட்டி எடுக்கவும்


  4. தோரணம் தயார்
  5. குழுவின் தலைவர்/குரு தோரணங்களை சேகரித்து நுனிகளை பசை போட்டு ஒட்ட வேண்டும்
  6. பாலவிகாஸ் மையம் அல்லது வகுப்பறையை அழகு படுத்துக
இயேசு கிறிஸ்து பற்றி சத்ய சாய் பாபாவின் அருளமுதம் - பிரிவு -III

சுமார் 2௦௦௦ வருடங்களுக்கு முன்னால், அகந்தையும், ஆணவமுமே மனிதனின் இயற்கை குணமாக இருந்தபோது, அறியாமை ஆட்சி செய்தபோது, மனிதனின் மிருகக்குனம் உச்சத்தில் இருந்த சமயத்தில், இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்தார். அவர்தம் அன்பும் கருணையும் நிறைந்த போதனைகளால் தர்மத்தின் வழியில் வாழ்ந்து காட்டினார். இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் மிக முக்கிய அம்சத்தை நீங்கள் இன்று அறிந்து கொள்ளவேண்டும். அவர் முதலில், “ நான் இறைவனின் தூதுவன் “ என்றுதான் அறிவித்தார். அவர், அனைவருமே மனித உருவில் உள்ள தெய்வீக ஸ்வரூபம் என்றும் அனைவருமே இறைவனின் தூதுவர்கள்தான் என்றும் பறை சாற்றினார். இந்த மனித உடலின் ஒவ்வொரு சொட்டு இரத்தமும், இறுதி சொட்டு வரை மனிதகுல சேவைக்காகவே அர்பணிக்கப் படவேண்டும் என்று கூறினார். “ அன்பும் கருணையும் நிறைந்த இதயமே இறைவன் குடிகொள்ளும் உண்மையான கோயில்” என்று இயேசு உணர்த்தினார். கடிகாரம் சரியான நேரத்தில் மணியடித்து நம்மை எழுப்புகிறது. பண்டைய காலத்து மகரிஷிகள், சரியான சமயத்தில், சரியான விதத்தில் எச்சரித்து, அறியாமையில் மூழ்கியிருக்கும் மனிதனை எழுப்புகின்றனர். அவர்கள், எங்கும் வியாபித்துள்ள தெய்வீகத்தன்மையை உணரக் கோரி மனிதனை எச்சரித்தனர். ஒருவன் அந்த போதனைகளை நினைவில் கொண்டுத் தம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் அதனைக் கடைபிடிக்க வேண்டும். அந்த உயர்ந்த ஆத்மாக்களின் பிறந்த நாளை நாம் சம்ப்ராதய்த்திற்குக் கொண்டாடக்கூடாது. நீ என்று இயேசுவின் போதனைகளை முழுமையாகப் புரிந்துகொண்ட, அவற்றை உன் வாழ்வில் பின்பற்றுகிறாயோ, அன்று தான் அவருடைய உண்மையானப் பிறந்த நாளாகும். இப்படிப்பட்ட உயர்ந்தவர்களின் வார்த்தைகள் எப்பொழுதும் உன் இதயத்தில் ரீங்காரமாக ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும். இத்தகு போதனைகளைக் கடைபிடிப்பதில் உன் வாழ்க்கையை நீ அர்ப்பணித்தால், அதுவே நீ கடவுளுக்கு சமர்பிக்கும் உண்மையான பிரசாதமாகும்.

“மனிதனை உயர்த்த இறைவனின் அவதாரம்” –அருளுரை ௦1, என் அன்பு மாணவர்களே, பிரிவு ௦5

நீங்கள் பகவானின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் அவரது உபதேசங்களை பின்பற்றுகிறீர்களா? நீங்கள் உபதேசங்களைப் பின்பற்றினால் தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பழங்களை அனுபவிப்பீர்கள். ஏசு சொன்னார், “ஒவ்வொருவரையும் நேசியுங்கள். கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் அன்பை செலுத்துகிறார்கள். சிறிது கூட இல்லை.

ஒவ்வொருவனின் இதயத்தினுள்ளும் அன்பு உள்ளது. அதனை ஒவ்வொரு நாளும் ஓரிரு நபர்களோடாவது பகிர்ந்து கொள்ளுங்கள். இது செய்யப்படுவதில்லை. மனிதர்கள் பெறுவதற்கு தான் நோக்கம் கொள்கிறார்களே தவிர கொடுப்பதற்கு அல்ல. தங்களுக்குப் பிடிக்காததை கொடுக்கத் தயாராக உள்ளனர். இதில் தியாகம் இல்லை.

“தூய்மை, பொறுமை, விடாமுயற்சி தெய்வீகத்திற்கு படிகள்”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 26, நவம்பர் 23, 1993, பிரசாந்தி நிலையம்

ஆகவே மனிதகுலத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதனை அடையவும் பாடுபட்ட இயேசுவின் பிறந்த நாளானது கொண்டாடப்படுவது பொருத்தமானதே. ஆனால் அந்த கொண்டாட்டமானது அவர் எழுப்ப விழைந்த போதைனைகள், கொள்கைகளைப் பின்பற்றுதல், ஒழுக்கங்களைப் பயிற்சி செய்தல் மற்றும் தெய்வீகத்தின் அறிவுணர்வினை அனுபவித்தல் ஆகிய வழி முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்களில் உலகமானது, வெறும் வார்த்தைகளாலும், ஒருவருடைய தவறுகளை மறைத்திட வடிவமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான விதிகளுக்கு சாட்சியாக இருப்பதன் மூலமாகவும் நிறைவு பெற்றுவிடுகிறது. சிறந்த மனிதர்களது பிறந்த நாட்கள் இத்தகைய போலித்தனத்துதடனும், வெளிப்பகட்டுடனும் கொண்டப்படுகின்றன. அவர்கள் தந்த செய்தியின் சாரத்தினை ஆராய்தலோ அல்லது அதனைப் பயிற்சி செய்வதற்கான எந்த ஒரு முயற்சியோ, அது உறுதி தரும் பேரானந்தத்தினைப் பெறுவதோ என எவ்வித முயற்சியும் காணப்படுவது இல்லை.

சிறந்த ஆசிரியர்கள் மனித குலத்தினையே சார்ந்தவர்கள். ஏசு, கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே சொந்தமானவர் எனவும், கிறிஸ்துமஸ் எனும் புனித பண்டிகை மேனாட்டுக்கு மட்டுமே உரியது என்றும் எண்ணுவது தவறு. ஒருவரை ஒருவரது சொந்தமாக ஏற்றுக்கொள்வதும், மற்றவர்களை, வேறொருவருக்கு உடைமையானவர்கள் என ஒதுக்குவதும், அற்பத்தனத்தின் அடையாளம். ஏசு, ராமன், கிருஷ்ணன் மனிதர்கள் அனைவருக்கும் உரியவர்கள்.

“ஏசு எவரை அறிவித்தாரோ,அவரே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 11, டிசம்பர் 24, 1972, பெங்களூர்

கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். கிறிஸ்துவின் பிறந்தநாளை விருந்துண்டு மகிழ்வதால் மட்டுமே கொண்டாடியதாய் ஆகாது. அன்பை, அவர் காட்டிய வழியைப் பரப்ப வேண்டும். அந்நாளே உண்மையான கிறிஸ்துமஸ் விழா!

இறைவனை அன்பால் நினையுங்கள். அன்பாலேயே வழிபடுங்கள்! உங்கள் வாழ்வை அன்பாலேயே புனிதப்படுத்துங்கள்.

“அன்பு- மனித ஒற்றுமைக்கான திறவுகோல்” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம், தொகுப்பு 21, டிசம்பர் 25, 1988, பிரசாந்தி நிலையம்

பெரியவர்களுக்கு மரியாதை செய்வதை விட மிகப்பயனுள்ள விஷயம் அவர்களிடம் அன்பு செலுத்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுதலே ஆகும். புகழ், போற்றுதல் மற்றும் துதி அவர்களை எட்டாத பீடத்தில் உயர்த்தி வைக்கிறது. அன்பு இதயங்களைக் கட்டுகிறது. பெற்றுக் கொண்ட உள்ளுணர்வுகளுக்கும் மற்றும் அறிவுரைகளுக்கும் காட்டும் நன்றியுணர்வு இதயங்களை அன்பால் கட்டிவிடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சில ஆனந்தப் பாடல்கள், ஜோடிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் சாந்தகிளாஸ் மற்றும் படங்களால் விவரிக்கப்பட்ட சரித்திர நிகழ்ச்சிககள் இவைகளால் முடிந்துவிடக்கூடாது ஏசு கற்றுத்தந்த ஒரு சில பாடங்களையாவது நாம் அனுசரிக்க வேண்டும் என்ற பிரதிக்ஞையில் அது நனைந்திருக்க வேண்டும். முதலாவது தேவை என்பது கடவுளின் மேல் நம்பிக்கை மற்றும் நம்முடைய தெய்வீகத் தன்மையின் மேல் நம்பிக்கை கொள்வதேயாகும்.

“ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தைகளே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 15, டிசம்பர் 25, 1982, பிரசாந்தி நிலையம்

இயேசு ஒரு காரண-ஜன்மா, இலக்குடன் பிறந்த தலைவர். அன்பு தர்மம் மற்றும் காருண்யத்தை மனிதனுடைய இதயத்தில் தக்க வைக்கும் பணிக்காகப் பிறந்தார். தன் மீது எவ்வித பற்றுதலையும் அவர் கொள்ளவில்லை. அதே போன்று மகிழ்ச்சி அல்லது துயரம். இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவிசாயத்திடவில்லை. தவிர்த்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலளிக்ககும் இதயத்தைக் கொண்டிருந்தார். அன்பெனும் பாடத்தினை நாடெங்கும் பிரச்சாரம் அதே போன்று மகிழ்ச்சி அல்லது துயரம், இழப்பு அல்லது இலாபம் என எதற்கும் செவிசாய்த்திடவில்லை, தவித்து கூக்குரலிட்டு அழைத்த அழைப்பிற்கு பதிலாலிக்கும் இதயத்தை கொண்டிருந்தார். அன்பெனும் பாடத்தினை நாடெங்கும் பிரச்சாரம் செய்தபடி செய்தார். மனித குலத்தினை மேலோங்கச் செய்வதற்கான வீடுபேறே அவர் தம் வாழ்வு.

“ஈசா” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 14, டிசம்பர் 25, 1978, பிரசாந்தி நிலையம்


இன்று இயேசுவின் பிறந்ததினம் டிசம்பர் மாதபனிப் பொழிவின் இடையே கொண்டப்படுகிறது. கிறிஸ்துமஸ் மரம், பிரகாசமான விளக்குகள் அலங்கரிக்க, பிரார்தனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஒரு நாள் மட்டும் பிரார்தனை செய்து, வருடத்தின் மற்ற நாட்கள் இறைவனை மறப்பது என்பது பயனற்றது. இது ஒரு வெற்று விழா. அது இதயத்திலிருந்து எழவில்லை. ஏசுவின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, அவற்றை தினசரி வாழ்வில் பயிற்சி செய்தால் மட்டுமே, நாம் உண்மையான கிறிஸ்துவர்கள் ஆகிறோம். அவரது போதனைகளில் நாம் இரண்டைக் கடைப்பிடித்தாலும் கூடப் போதுமானது. ஏசு கூறினார். “அனைத்து வாழ்வும் ஒன்றே, எனதருமை மகனே!அனைவரையும் ஒன்று போல் எண்ணுங்கள்!”

“இயேசுவின் வழி” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 14, டிசம்பர் 25, 1979, பிரசாந்தி நிலையம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டதனக் கண்டதன் வாயிலாக இயேசுவின் தியாகம் பற்றி மக்கள் பேசுகின்றனர். ஆனால் அவர் சூழப்பட்டு, தடுக்கப்பட்டு, முட்களால் ஆன கிரீடம் தயாரித்து, அவரது தலையில் அவரை சிறைபிடித்தவர்கள் வைத்தனர். பின்னர், சிலுவையின் மீது அவரை ஆணியால் அறைந்தனர். காவல்காரரால் பிடிக்கப்பட்ட, அ டிக்கப்படுகின்ற மனிதன் சுதந்திர மனிதனாக இல்லையாதலால், தியாகம் செய்ததாகக் கூற இயலாது. ஏசு சுதந்திரமாக இருந்த பொழுது அவருடைய சுய தீர்மானத்தினால் செய்தத் தியாகங்களை கவனிப்போம். அவர் தனது மகிழ்ச்சி, வளமை, சுகம், பாதுகாப்பு, பதவி அனைத்தையும் தியாகம் செய்தார். வளமை மிக்க எதிரியை வீரமுடன் எதிர்கொண்டார். அவர் விட்டுக் கொடுக்கவோ, வேறு எதையேனும் செய்து ஈடுகட்ட வோ மறுத்தார். விட்டொழிக்கக் கடுமையான செருக்கினை துறந்தார். இவற்றிற்காக அவருக்கு மதிப்பு அளித்திடுங்கள். மனிதனைத் துன்புறுத்துகின்ற உடலுடன் கூடிய ஆசைகளை அவர் தானாகவே முன்வந்து தியாகம் செய்தார் . சிறையில் அடைக்கப்பட்டு கிடக்கும் உடல் செய்கின்ற தியாகத்தை விடவும் அதிக சிறப்பு வாய்ந்தது. ஒன்றிரண்டு ஆசைகளை தியாகம் செய்வ தன் வாயிலாகவும், மிகவும் அழிவுக்கு இட்டுச் செல்லும் உந்துதல்களை வெல்வதன் வாயிலாகவும் தான், அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் அமைய வேண்டும். இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் எனும் இந்த நன்னாளில், பலவீனமானவர்கள், ஆதரவற்றோர், துயரத்தில் இருப்பவர்கள், மற்றும் வறுமையில் இருப்போருக்கு உதவி புரிந்திட அன்பான சேவை செய்யும் ஒரு வாழ்க்கையை வாழ முடிவெடுங்கள். சகிப்புத்தன்மை பொறுமை மற்றும் பரந்த மனம் ஆகியவற்றை வளர்த்து கொள்ளுங்கள். அவர் வகுத்துக் காட்டிய நல்வழிகளை உங்கள் தினசரி வாழ்வில் கடைபிடியுங்கள். இப்பொழுதெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் முறையைப் பார்த்தால் மக்கள் எவ்வளவு தூரம் அவர் வகுத்துக் கொடுத்த நல்வழிகளில் இருந்து விலகி இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் பெயருக்கு எவ்வளவு அவதூறு சேர்க்கின்றனர்! அந்த நடு இரவு நேரம் போற்றப்படுகின்றது. ஒளிவிளக்குகள் ஏற்றப்படுகின்றன. கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர் இரவானது குடித்து ஆடி கழிப்பதில் செலவிடப்படுகிறது. அது புனிதமான ஆனந்தத்தின் தினம். ஆனால் அந்த ஆனந்தம், போதையின் விஷம் நிரம்பிய பரவசத்தால் தரம் தாழ்த்த படுகின்றது.

குடிப்பது மிகவும் தீய வழக்கமாகும். மனிதன் அந்த புட்டியை கையில் எடுத்துவிட்டால் அவனே அந்த புட்டியினுள் சென்று தப்பிக்க இயலாது தவிக்கிறான். முதலில் மனிதன் மதுவினை அருந்துகிறான். பின் மதுவானது, அதிக அளவில் மதுவினை அருந்துகிறது. மது மனிதனையே அருந்திவிடுகிறது.அவன் குடியில் ஆழ்ந்து மூழ்கி விடுகிறான். மனிதனில் உள்ள மனிதத்தன்மையை அழிக்கிறது. பின் அது அவனுள் தெய்வீகத்தை எங்கனம் வளர்த்திடும்? ஒருவர் தெய்வீக பேரானந்தத்தில் ஆண்டிட வேண்டும். மாறாக புலனின்பங்களில் ஆடுகிறான். உங்களது இதயங்களை தூய்மையாகவும், உங்களது செயல்களை புனிதமாகவும், உங்களுடைய உணர்வுகளை அனைவருக்கும் பலன் அளிப்பவை யாகவும் மாற்றங்கள் இதுவே இயேசுவின் பிறப்பினை கொண்டாடுவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

“இயேசு எவரை அறிவித்தாரோ, அவரே” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 11, டிசம்பர் 24, 1972, பிரசாந்தி நிலையம்

கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த வழக்கம் ஜெர்மனியில் தொடங்கியது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்சன் என்ற மத போதகர் ஒருமுறை ஜெர்மனிக்குச் சென்றார். ஜெர்மனியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சில ஜெர்மானியர்கள் ஒரு ஓக்மரத்தில் இறைவன் வாழ்வதாகக் கருதி அந்த இறைவனைச் சாந்தப்படுத்துவதற்காக ஒரு குழந்தையை பலி கொடுக்கத் தயாராக இருப்பதைக் கண்டார். மனம் வருந்திய ஜென்சன் ஒரு அறியாத குழந்தையை ஏன் மரத்திற்குப் பலி கொடுக்கீறர்கள். என்று அவர்களைக் கேட்டார். அவர்கள் மரத்தில் இறைவன் வசிப்பதாகச் சொல்லவே, அவர் ஒரு கோடாரியை எடுத்து மரத்தை வெட்டினார். உடனே தலை முதல் கால் வரை விவரிக்க முடியாத ஒரு நடுக்கம் ஏற்பட்டு அவரை ஆட்டியது. அத்துடன் வெட்டிய மரத்தின் இரண்டு துண்டுகளுக்கிடையில் ஒரு குழந்தையின் வடிவத்தைக் கண்டார்.

கடவுள் மனிதர்களில் மட்டுமல்லாமல் செடி கொடிகளிலும் வாழ்கிறார். அந்த நாளிலிருந்து கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். தெய்வத்தைத் தாவரமாகவும், கல்லாகவும் வழிபடும் வழக்கம் பாரதத்தில் தொடங்கியதென்றாலும் மற்ற நாடுகளில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

“தெய்வீகத்தின் அடிப்படையில் ஒற்றுமை” ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 25, டிசம்பர் 25, 1992, பிரசாந்தி நிலையம்

அனைத்துயிர்களையும் நேசிக்கவேண்டும் மேலும் அனைவருக்கும் கருணையுடன் சேவை செய்யவேண்டும் என்று இயேசு மக்களுக்குப் போதித்தார். இக்கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலமாகத்தான் உண்மையில் நாம் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும். நீங்கள் அன்பில் வாழ்ந்து, அன்பு கலந்த, தன்னலமற்ற சேவையோடு இயைந்த வாழ்க்கை வாழவேண்டும். இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாட இதுதான் சரியான வழி.

“தாயன்பின் தன்னிகரற்ற சக்தி”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 39, மே6, 2௦௦6,பிருந்தாவனம்

இயேசு தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து இரத்தம் சிந்தினார். கிறிஸ்துமஸை விருந்துகள் மூலமாகவும், வேடிக்கைகள் மூலமாகவும் கொண்டாடுதல் போதாது. அவர் உபதேசித்த ஒரு இலட்சியத்தையாவது பயிற்சிக்கு கொண்டு வர வேண்டும். அவர் மனிதன் முன்னிலையில் வைத்த குறிக்கோள்களில் ஒன்றையாவது அடைவதற்கு முயறசி செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதன் மூலம் கிறிஸ்துமஸைக் கொண்டாடு.

“இயேசு”,ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்,தொகுப்பு 13, டிசம்பர் 25, 1976, பிருந்தாவனம்


Chirstmas Darshan at Prasanthi Nilayam

ஒவ்வொரு சிறந்த மனிதரின் பிறந்தநாளும், அவரை வணங்கி மற்றும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்களால் தான் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறந்த நாளாகிய இன்று அனைத்து தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கும் விடுமுறை நாளாகும். (Holiday) ஆனால், புனித நாள் (Holy Day) அல்ல. மக்கள் தேவாலயத்திற்குச் சென்று அங்கு நடக்கும் சடங்குகளிலெல்லாம் கலந்து கொள்கிறார்கள். ஆனால், வீட்டிற்குத் திரும்பியதும், குடி, ஆட்டம், கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். கிறிஸ்துமஸ் காலங்களில், சிலுவை முற்றிலுமாக மறக்கப்படுகிறது. இயேசு கடைபிடித்துக் காட்டிய நன்னடத்தைகளையும், நற்குணங்களையும் மனதில் தியானித்து, நம் மன உணர்ச்சிகளைத் தூய்மைப் படுத்துவதற்காகவே இந்நாள் அற்பணிக்கப்படவேண்டும்.

“ஒன்றே கடவுள்: அனைத்து நம்பிக்கைகளின் அடிப்படை உண்மை”, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம் , தொகுப்பு 18, டிசம்பர் 25, 1985, பிருந்தாவனம்

மேலும் படிக்க...
கிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க் (முகமூடி)
தேவையான பொருட்கள்:
 1. பேப்பர் பிளேட்
 2. சிவப்பு வண்ணத்தாள் (A4 size)
 3. மஞ்சள் வண்ண சார்ட் பேப்பர்
 4. பஞ்சு
 5. ஃபெவிகால்
 6. கத்தரிக்கோல்.
 7. Googly eyes ( கூக்லி ஐ)
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
 1. கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய அறிவு
 2. சர்வ மத சம்மதம்
தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டியவை:
 • குருமார்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் விழா பற்றியும் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றியும் விளக்க வேண்டும்.
 • சுத்தமான இலவம் பஞ்சு எடுத்து சிறுசிறு பந்துகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
 1. சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண தாள்களில் தொப்பி வடிவத்தை வரைந்து வெட்டவும்.
 2. பேப்பர் தட்டின் உள்புறம் விளிம்பிலிருந்து 2" அளவிற்கு அரைவட்டத்திற்குப் பசை தடவவும்.
 3. வெட்டி வைத்த இரு வண்ணத் தொப்பி வடிவங்களையும் பசை தடவிய இடத்தில் ஒட்டவும்.
 4. உருட்டி வைத்த பஞ்சு உருண்டைகளைப் படத்தில் உள்ளபடி, தாத்தாவின் முகத்தில் ஒட்டவும். தாத்தாவின் மூக்கிலும், வாயிலும் சிவப்பு வண்ணம் பூசவும்
 5. Googly eyes ஒட்டவும்.
 6. சிறிது பஞ்சை எடுத்து தாத்தாவிற்கு மீசை வைக்கவும்.
 7. இப்பொழுது கிறிஸ்மஸ் தாத்தா முகம் தயார்.
 8. பின்புறத்தில் கயிறு அல்லது ரப்பர் பேண்ட் கட்டவும்.
 9. கிறிஸ்மஸ் தாத்தா முகமூடி தயார்.