மகர சங்கராந்தி 

மகர சங்கராந்தி 
மகர சங்கராந்தி 

பிரகாசிக்கும் சூரியக்கடவுள் வட பகுதிக்கு நகர்ந்து செல்லும் நாளில் மகர சங்கராந்தி கொண்டாடப் படுகிறது. ஆன்மீக அறிவுக்கும் ஞானத்திற்கும் சூரியன் உதாரணமாகத் திகழ்கிறார். மகர சங்கராந்தி அறுவடைத் திருநாள் ஆகும். 

இப் பண்டிகை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பலவிதமாகக் கொண்டாடப் படுகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் இந்த பண்டிகை “கிச்சிரி” என அழைக்கப் படுகிறது. இந் நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்நாளில் அலகாபாத்தில் உள்ள பிரயாகையில் ஒருமாதம் வரை கொண்டாடப் படும் மஹாமேளா துவங்குகிறது. 

வங்காளத்தில் ஆண்டுதோறும் கங்கை நதி தீரத்தில் மஹாமேளா நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் ஏராளமான தீர்த்த யாத்திரிகள் இதில் கலந்து கொள்வர்.

தமிழ் நாட்டில் சங்கராந்த் என்பது “பொங்கல்” எனும் பெயரால் அழைக்கப் படுகிறது. விவசாயிகளிடையே இது மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாகும். சங்கராந்த் என்பது சூரியக் கடவுளை வழிபடுதலாகும்.

ஆந்திரப் பிரதேசத்தில் “பொங்கல்” மூன்று நாள் பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது.

மகாராஷ்ட்ரத்தில் சங்கராந்தி தினத்தன்று மக்கள் தில்குட், தில் லட்டு போன்ற பண்டங்களைப் பரிமாறிக் கொள்வர். நல்லெண்ணத்தின் அடையாளமாக தில் குட்டை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டு வாழ்த்துகையில் கடந்த காலத்து மோசமான நினைவுகளை மறக்கும்படியும் இனிமையாகப் பேசுவதற்கும்  நண்பர்களாக நீடித்திருக்க முடிவெடுக்கவும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வர்.

குஜராத்தில் ஏறக்குறைய மகாராஷ்ட்ரத்தைப் போலவே சங்கராந்தி கொண்டாடப் படுகிறது; ஆனால் உறவினருக்கு பரிசுப் பொருள் அளிக்கும் பழக்கத்தால்  மட்டும் வேறுபடுகிறது. இந்த பண்டிகையின் போது உலகளாவிய நிகழ்ச்சியாக மாறிய பட்டங்களைப் பறக்க விடுதல்  நிகழ்த்தப்படுகிறது.

பஞ்சாபில் “லோஹரி” எனும் பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது.

அய்யப்ப பக்தர்களின் நாற்பது நாள் விரதம் சங்கராந்தி தினத்தன்று சபரிமலையில் ப்ரம்மாண்டமாக நிறைவேற்றப்படுகிறது.

பந்தல்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இப் பண்டிகை “ஸகரத்” எனப்படுகிறது; மிகவும் ஆடம்பரமாக கேளிக்கையுடன் கொண்டாடப் படுகிறது.

ஓடிஸாவின் பழங்குடியினர் இப் பண்டிகை தினத்தில் இருந்து புதிய வருடத்தை ஆரம்பிக்கின்றனர்.

செயல்பாடு 

சூரியனின் முக்கியத்துவம் மற்றும் சூரியனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்பவை.
பட்டங்களைத் தயாரித்தல்.

பாடல் 

ஒவ்வொருவர் மீதும் ஒளியை வழங்கும் சூரியனிடம் கற்பீரே! 
ஒவ்வொரு கடலின் கரையினிலும் பொழிந்திடும் கருணை மழையினைப் போல்!
இனமும் நிறமும் பாராமல் அனைவர் நிலையும்  ஒன்றே போல்!
இருப்பாருக்கும் ஏழைக்கும் இனிதே அளிக்கும் இயற்கை வரம்!
அன்பினைப் பொழிந்திடு பணியினை ஆற்றிடு
அன்பும் அமைதியும் வாழ்வெனப் புரிந்திடு!
எண்ணம் சொல் செயலினிலே அன்பும் பணியுமே ஆள வேண்டும்!
ஏதும் செய்ய வேண்டாமே பொறுத்திடு பொறுத்திடு பொறுத்துக் கொள் !
ஏதும் பேச வேண்டாமே கேட்டிடு கேட்டிடு கேட்டுக்கொள்!
கொடுத்திடு கொடுத்திடு அனைவருக்கும்! மறுத்திடு மறுத்திடு பதிலுக்கு!
கொடுப்பதும் மறப்பதும் அன்பாகும்! பெறுவதும் மறப்பதும் சுய நலமாகும்!
அனைவர் மீதும் நேசத்தைப் பொழிந்திடு  இதுவே அன்பாமாம்.
இதுவே உண்மை அன்பாக
இதுவே உண்மை சேவையென புரிந்திடு புரிந்திடு என் மனமே!
அன்பினால் வாழுங்கள்
கடினத்தை விடவும் கடினமானதைக் கூட கரைக்கும் சக்தி கொண்டது அன்பாகும்.
அன்பு அமைதி, குதூகலம், ஞானத்தை அளிக்கக் கூடியது.
அன்பை வளருங்கள்.
அன்பை வெளிப்படுத்துங்கள்
அன்பே உங்கள் மூச்சாக இருக்க வேண்டும். அன்பு
மானிடர் அனைவர் மீதும் கொள்ளும் பரிவை கூட்டுவிக்கும்.
நீங்கள் அளிக்கும் ஆனந்தம், 
நீங்கள் பகிரும் அன்பு
இவை மட்டுமே நிரந்தரமான உடைமைகளாகும்.
கண்ணீர் உகுப்போரை நேசியுங்கள்.
பொய் இல்லை!கவலை இல்லை!துக்கம் இல்லை!
ஒவ்வொரு கணத்தையும் அன்பினால் நனையுங்கள்!
அன்பைப் பரப்புங்கள்! அன்பினால் வாழுங்கள்!
அனைத்தையும் தாங்கிச் செல்லுங்கள்….