வகுப்பு 10 – அறிவு/ஞானம்

வகுப்பு 10 – அறிவு/ஞானம்
ஸ்லோகம்

யா குந்தேந்து துஷாராஹார தவளா யாஸூப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணாவர தண்டமண்டிதகரா யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரம்மாச்யுத ஸங்கரப்ரப்ருதிபிர் தேவை ஸதா வந்திதா
ஸா மாம் பாது ஸரஸ்வதி பகவதீ நிஸ்ஸேஷ ஜாட்யா பஹா

சரஸ்வதி தேவி வாக் சக்தி. அதாவது இவ்வுலகப் படைப்புகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை அழகு மற்றும் நயத்தை, மொழி, இசை, நாட்டியம் அல்லது சிற்பக்கலை வாயிலாக வெளிப்படுத்தத் தூண்டும் சக்தி. அவளே வித்யா சக்தி, அதாவது ஒரு மனிதனின் உள்ளே மற்றும் வெளியே உள்ளப் பிரபஞ்சத்திற்கு ஒளியூட்டும் சக்தி.

மனிதன் வாழ்க்கையில் முழுமை அடைய இரண்டு விதமான  அறிவு தேவை. ஒன்று  இப்பிரபஞ்சப் படைப்புகளைப் பற்றிய அறிவு. மற்றொன்று, பிரபஞ்சத்தைப் பாதிக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் அறிவு. ஒரு அறிவு அவனுக்கு இவ்வுலக வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான  தொழில் நடத்துவதற்கு வேண்டிய உரிமையும் தகுதியும் அளிக்கிறது. மற்றொரு அறிவு, இவ்வுலகில் வாழும் முறையைக் கற்பிக்கிறது. ஒரு அறிவு மனிதனுக்கு செல்வம் மற்றும் அந்தஸ்து பெற உதவுகிறது. மற்றொரு அறிவு, பெற்ற செல்வத்தைப் பிறர் வளர்ச்சிக்காகச் செலவிடத் தூண்டுகிறது. இதனால் நமக்குத் தெரிவது என்னவென்றால், சரஸ்வதி தேவி ஒரு மனிதனின் சத்வ குணத்தை வளர்க்கிறாள். படிப்பறிவு உள்ளவனுக்கு, சரஸ்வதி தேவி நன்மை எது, தீமை எது எனப் பிரித்துப் பார்க்கும் சக்தியை அளிக்கிறாள். அவள் நம் எண்ணங்களையும் சொற்களையும் உரையாக மாற்றுகிறாள். இதனால் அக்குழந்தைக்குத் தம் கல்வி, பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மேல் ஒரு ஆரோக்கியமான மரியாதையும் வளர்கிறது. அதனால் அவனுக்கு, சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் தேவையும் புரிய வருகிறது.

ஆங்கிலப் பாடல்
மெட்டு – Old McDonald had a farm.

Goddess Sarawathy has a school E I E I O
In her school there’s lot of books E I E I O
English books here, Hindi books there,
Here a book, there a book, everywhere books and books E I E I O
Goddess Sarawathy has a school E I E I O
In her school there’s musical tools E I E I O
Tin Tin Veena, Dhim Dhim Tabla
Here a veena, There a Tabla, everywhere veena tabla E I E I O

செயற்பாடு
சரஸ்வதி தேவியின் 1௦ திருநாமங்களைத் தேர்ந்தெடுத்து வார்த்தை தேடும் புதிர் தயாரிக்கலாம்.

சாரதா, வாக்தேவி, மேதா, பிராஹ்மி, வாணி, ஸ்வேதா, கலாவதி, மாலினி, பாரதி, வித்யா.