காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி
காந்தி ஜெயந்தி

நீங்கள் மஹாத்மா காந்தியின் பெயரை கேட்டிருப்பீர்கள். அமெரிக்காவிற்கு ஜார்ஜ் வாஷிங்டன் போன்று அவர் நம் இந்திய நாட்டின் தேசப்பிதா ஆவார். மரியாதை நிமித்தம் நாம் அவரை காந்திஜி என்று அழைக்கிறோம். அவர் தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய். அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார்.

ஒரு சமயம் ஒரு நாடகக் குழுவினர், போர்பந்தரில் நாடகம் நடத்த வந்தனர். அது, சத்தியத்தை கடைப்பிடித்த பழங்கால அரசர் ஹரிச்சந்திரனைப் பற்றியது. ஹரிச்சந்திரன் சத்தியத்தைக் காப்பாற்ற எவ்வளவு துன்பப்பட வேண்டியிருந்தது என்பதனை காந்திஜி கண்டார். இது காந்திஜியிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தானும் எப்போதும் உண்மையே பேச தீர்மானம் கொண்டார். விரைவில் சத்தியமே அவரது வாழ்க்கை நெறியாயிற்று. சத்தியம் அவரை துன்பத்தில் ஆழ்த்தினாலும் அதனைக்  கைவிடுவதில்லை என, தன் மனதில் உறுதி கொண்டார். ஒரு நாள் அவரது தந்தையார்  தன் பெற்றோரிடம் மிகுந்த பக்தி கொண்ட ‘ச்ரவண்’ என்பவனைப் பற்றிய புத்தகம் ஒன்றை அளித்தார். காந்திஜி விரைவில் அந்த புத்தகத்தைப்  படித்து முடித்தார். அவர் அதில் ஒரு படத்தைப்  பார்த்தார். சிரவணனின் பெற்றோர் இருவரும் பார்வையுற்றவர். எனினும் புனித தலங்களுக்குச்  செல்ல விரும்பியதால் அவர்களை  அவன் தோள் மேல் சுமந்து செல்லும் படம் அது. காந்திஜி தானும் தன் பெற்றோர்களிடம் அவ்வாறு அக்கரையுடன் இருக்க வேண்டும் என தீர்மானித்தார்.

கதை – கர்வம் கற்ற பாடம்

ஒரு முறை, காந்திஜி இங்கிலாந்தில் ஒரு மாநாட்டில் பங்கு பெரும்  பொருட்டு ஒரு பெரிய அயல் நாட்டுக்  கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒரு நன்கு உடை உடுத்திய ஐரோப்பிய இளைஞனுக்கு கப்பலில் இருந்த அனைவரையும் விட வித்தியாசமாக இருந்த, காந்திஜியை காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது.

வேலையற்ற அந்த ஐரோப்பிய இளைஞன் தன்  அறைக்குச்  சென்று, சில துண்டு காகிதங்களைக் கொணர்ந்து, அதில் கேவலமான வாசகங்களை எழுதியும், வேடிக்கையான படங்களை வரைந்தும் காந்திஜிக்கு  தொல்லை கொடுத்தான்.

“அரை நிர்வாணம்! வழுக்கைத் தலை, பற்கள் கூட இல்லாத இந்தக் கிழவர் எதற்கு இங்கிலாந்து செல்ல வேண்டும்?” என்று வியந்து காந்திஜியை ஏளனமாகப் பார்த்தான். அயல் நாடு செல்லும் மடத்தனத்தைக்  கைவிடுமாறு அவருக்கு அறிவுரையும் கூறினான். பின்னர்,  துண்டுக் காகிதங்களை குண்டூசியால் இணைத்து எடுத்துக் கொண்டு தன் அறையை விட்டு வெளியே வந்தான்.

மேல் தளத்தில் பெருமையுடன்  நடந்து வந்து, அவன் காந்திஜி எழுதிக்கொண்டிருக்கும் மேசையருகே வந்தான் காந்திஜி அவனைப் பார்த்தபோது அவரிடம் சென்று கறுப்பிந்தியர்களை அவமதிக்கும் முகத்தான் இந்த குண்டூசியால் இணைக்கப்பட்ட  துண்டுக் காகிதங்களைக் கொடுத்து, “இவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். படித்துப் பார்த்துவிட்டு நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினான்.

பிறகு, அவன் சற்று தூரம் சென்று, அவனது செய்கைக்கான அவரது எதிர் வினையைக்  காணும் பொருட்டு நின்று கொண்டான். காந்திஜி, அவன் கொடுத்தக் காகிதங்களை ஒவ்வொன்றாக அமைதியாக பிரித்துப் படித்துவிட்டு அவன் இருக்குமிடம் நோக்கி அவனைப்  பார்த்தார். பிறகு மெதுவாக அந்த குண்டூசியை மட்டும் எடுத்துக்கொண்டு, காகிதங்களை மேசையடியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டார்.    மேலும், தமக்கே உரிய வழக்கமான  புன்னைகையுடன் அவனைப் பார்த்து, “நீ கூறியபடியே செய்தேன். நீ கொடுத்தவற்றில் எனக்கு உதவியாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்த பொருள் ஒன்றுதான். காகிதங்களைப் பிடித்துக் கொண்டிருந்த இந்த குண்டூசிதான். அதனால், அதை மட்டும் நான் வைத்துக் கொண்டேன். நன்றி”  என்று கூறினார்.

அந்த ஐரோப்பிய இளைஞன் தன் தவற்றை உணர்ந்தான். தான் எழுதியதைப் பார்த்து  காந்திஜியின் எதிர்வினை காட்சிபடுத்தப்படும், அதனைக்  கப்பலில் உள்ள அனைத்து வெள்ளையர்களும் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்தான். காந்திஜியின் நறுக்கென்ற இந்தப் பதில் நேராக அந்த இளைஞன் மனதைத் தொட்டது. காந்தி எப்படிப்பட்ட அறிவாளி, பண்பானவர், எளிமையானவர் மேலும் உயர்ந்த மனிதர் என்பதைப் புரிந்துகொண்டான். அவமானத்தால் தலை குனிந்து வந்த வழியே திரும்பினான்.  காந்திஜியிடம் அவன் கற்ற இந்த படிப்பினை பின்னர் எப்பொழுதும் அவனது கர்வத்தை  அழித்திருக்கக்கூடும்.