பகவத் கீதை - கர்மண்யேவாதிகாரஸ்தே

அத்தியாயம் 02 - வசனம் 47

வரிகள்

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன
மா கர்ம பல ஹேதுர்பூ: மாதே ஸங்கோஸ்த்வ கர்மணி


பொழிப்புரை

உனக்கு வினையாற்றுவதற்கு, ஒரு காரியம் செய்வதற்கு மட்டும் அதிகாரம் உண்டு. அதன் விளைவுகளின் மேல் ஒரு போதும் இல்லை. (எனவே) கர்மபலனை நோக்கமாகக்கொண்டு அதன் பொருட்டு மட்டும் காரியம் செய்பவனாக ஆகி விடாதே.காரியம் செய்யாமல் வெறுமனே இருப்பதில் விருப்புக் கொள்ளாதே.

பதவுரை

கர்மணி கர்மத்தில்,காரியம் செய்வதில்
ஏவ மட்டும்
தே உனக்கு
அதிகார: அதிகாரம் ,தகுதி (உண்டு )
பலேஷு பலன்களில், காரியத்தின் விளைவுகளில்
கதாசன ஒரு பொழு தும்
மா இல்லை
கர்ம பல ஹேது: கர்ம பலனை குறியாகக் கொண்டவனாய்
மா பூ: ஆகி விடாதே
அகர்மணி காரியம் செய்யாதிருப்பதில்
தே உன்னுடைய
ஸங்க: பற்றுதல்
மா அஸ்து இருக்கலாகாது