மார்ச் நிகழ்வுகள்

இந்தியாவில் ஹோலிப் பண்டிகை

வண்ண விழா என்று அழைக்கப்படும் ஹோலிப் பண்டிகையானது ‘பழமையான புராணக் கதைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்தப் பண்டிகை வசந்த காலத்தில் பயிர்களின் அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குதூகலமாகக் கொண்டாடப்படுகிறது. வண்ணங்கள், மகிழ்ச்சி, மற்றும் நன்றி கலந்த பிரார்த்தனைகள் போன்றவை இந்த விழாவின் சிறப்பம்சம் ஆகும். இயற்கை அன்னையிடமிருந்து கிடைப்பதை நாம் பயன்படுத்திக் கொண்டு நம்முள் உள்ள பண்புகளை மலரச் செய்வதற்கும், நம்மை நாமே மாற்றிக் கொள்ளவும் நமக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக ஹோலியானது அமைந்துள்ளது.

இந்தியாவின் பல இடங்களில் ஹோலியானது அவர்களுக்கேற்ற தனிப்பட்ட முறையில் கொண்டாடப்படுகிறது.

குஜராத்


குஜராத்தில் ஹோலியானது இரண்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் மாலை வேளையில் மக்கள் நெருப்பை மூட்டி தீபோற்சவம் போன்று கொண்டாடுவார்கள். அன்று தேங்காய் மற்றும் சோளத்தை நெருப்பில் இட்டுக் கொண்டாடுவார்கள்.


இரண்டாம் நாளன்று வண்ண விழா அல்லது துளேத்தி என்னும் வண்ண நீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும், வண்ணபொடிகளைத் தூவியும் கொண்டாடுவர்.

துவாரகை

கடற்கரை நகரமாகிய துவாரகாவில் ஹோலியானது துவாரகதீசர் என்னும் கோயிலில் பல கேளிக்கைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளோடுக் கொண்டாடப்படுகிறது.


மேற்கு இந்தியாவைச் சேர்ந்த குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் என்னும் நகரத்தில் உள்ள வீதிகளில் தயிர் நிறைந்த பானை ஒன்று மிக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும். இளைய சிறார்கள் ஒன்றாகக் கூடி கோபுரம் போன்று அமைத்து, அதன் மீது ஏறி அந்த தயிர் பானையை உடைக்க முற்படுவார்கள். அப்பொழுது அங்கே கூடி உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அச் சிறார்கள் மீது வண்ண நீரைத் தெளித்து அதைத் தடுப்பர். இந்த நிகழ்ச்சி துவாபர யுகத்தில் கோபிகைகள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் மற்றும் மாடு மேய்க்கும் சிறுவர்களையும் தடுக்கும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுவதாகும். தடைகள் யாவையும் தாண்டி பானையை உடைக்கும் சிறுவனை ஹோலியின் ராஜா என்று முடிசூட்டுவர்.

கான்பூர்


இங்கு ஹோலியானது வண்ணத் திருவிழாவாக ஏழு நாட்களுக்கு நீடிக்கும். நிறைவு நாளான ஏழாவது நாள் கங்கை மேளா அல்லது ஹோலி மேளா என்று மிகப் பெரியத் திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். இந்த விழாவின் தனிச் சிறப்பு என்னவென்றால், நானாசாஹேப் தலைமையில், வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிராக போராடிய விடுதலை வீரர்களால் இது துவக்கப்பட்டது. மேலும், இது வெள்ளைக்காரர்களுக்கு எதிராக ஒன்றாக போராடிய இந்து மற்றும் முஸ்லீம்களின் ஒற்றுமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

கோரக்பூர்


வடகிழக்கு மாவட்டமான உத்தரப்ரதேசத்தில், ஹோலியானது, மிகச் சிறப்பான விசேஷ பூஜைகளுடன் துவங்கப்படுகிறது. வருடத்தின் மிகவும் வண்ணமாயமான நாளாகக் கொண்டாடப்படும் இந்த நாள் மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க பெரும் பங்கு வகிக்கிறது. இந்நாளில், மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர் வீட்டிற்குச் சென்று பாடல்களைப் பாடி அவர்கள் மீது வண்ணங்களைத் தூவியும், பூசியும் அவர்களது நன்றியைத் தெரிவிப்பர்.

உத்தரகண்ட்


உத்தரகண்டில் ஹோலி என்பது இன்னிசைத் திருவிழாவாகும். இங்கு பாடப்படும் பாடல்களில் இன்னிசை, பக்தி மற்றும் கேளிக்கை நிறைந்து இருக்கும். பாரம்பரிய ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும். இங்குப் பயன்படுத்தப்படும் பொடிகள் யாவும் இயற்கை முறையில் சாம்பல், பூச்சாறு, மற்றும் தண்ணீரால் தயாரிக்கப்பட்டவையாகும்.

பீஹார் / ஜார்கண்ட்


ஹோலிப்பண்டிகை போஜ்பூரி என்னும் வட்டார மொழியில் பகுவா என்று அழைக்கப்படுகிறது.பாடல்கள் மிகவும் உயர்ந்த சுருதியில் பாடப்படுகிறது. மக்கள் டோலக் வாத்திய தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவர்.

ஒரிசா


ஒரிசா மாநில மக்கள் ஹோலியை டோலா என்று கொண்டாடுகின்றனர். பகவான் ஜகன்னாதரின் திரு உருவ பொம்மைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதை டோலா மேலன்னா என்று குறிப்பிடுகின்றனர்.

டோலா யாத்திரை என்பது ஒரிசா மாநிலத்தில் ஹோலி பண்டிகையின் வழக்கத்திற்கு முன்பாகவே 1560-ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பகவான் ஜகன்னாதர், பலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோரின் உருவ பொம்மைகள் டோலா மண்டபத்திற்கு கொண்டு செல்வர். மக்கள் இறைவனுக்கு வண்ணப் பொடிகளைப் படைப்பர். டோலா யாத்திரை என்பது ஒரிசா மாநிலத்தில் ஹோலி பண்டிகையின் வழக்கத்திற்கு முன்பாகவே 1560-ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பகவான் ஜகன்னாதர், பலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோரின் உருவ பொம்மைகள் டோலா மண்டபத்திற்கு கொண்டு செல்வர். மக்கள் இறைவனுக்கு வண்ணப் பொடிகளைப் படைப்பர்.

மேற்கு வங்காளம்


இங்கு ஹோலி டோல் ஜோத்ரா என்ற பெயரிலும் டோல் பூர்ணிமா அல்லது ஊஞ்சல் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.


பகவான் கிருஷ்ணர் மற்றும் ராதாவின் திரு உருவச் சிலைகளை சப்பரத்தில் ஏற்றி முக்கிய வீதிகள் அல்லது கிராமங்களின் வழியாக ஊர்வலம் கொண்டு வருவர். காவி நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ மாணவர்கள் உடையணிந்து பூக்களால் ஆன மாலைகளைச் சூடிக் கொள்வார்கள். ஏக்தாரா, வீணை போன்ற கருவிகளோடு பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வருவார்கள். பக்தர்கள் அவர்களுக்குள் முறை அமைத்து இசை மீட்டுவார்கள். அப்பொழுது பெண்கள் பாடல்களைப் பாடி நடனமாடுவார்கள். ஆண்கள் வண்ண நீரையும், பொடியையும் தூவுவர்,

கோவா


ஹோலியை உக்குளி என்று உள்ளூரில் அழைப்பர். கோஷரிபுரம் கோவிலின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இது கொண்டாடப்படுகிறது. இது பெரும்பாலும் வசந்த கால விழாவான ‘சிஃமோ’ என்று கொங்குனிப் பகுதியில் அழைக்கப்படுகிறது. ஹோலிப் பண்டிகை அன்று வண்ணங்களும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

மகாராஷ்ட்ரா


இங்கு ஹோலி பூர்ணிமாவை ‘சிம்கா’ என்று கொண்டாடுவர். இது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். இளைஞர்கள் பணத்தையும், விறகு களையும் சேகரிப்பர். சிம்கா நாளன்று விறகுகள் எல்லா வீதிகளிலும் பெரும் குவியல்களாக அடுக்கி வைக்கப்படும். மாலை வேளையில் அதில் நெருப்பு மூட்டப்படும். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் உணவும் அதன் பின் சாப்பிடும் பண்டங்களும் அக்னி பகவானுக்கு படைப்பர். பூரண போளி என்னும் உணவுப் பொருள் அக்னி பகவானுக்கு படைக்கும் மிகச் சிறப்பான உணவுப் பொருள் ஆகும். இதை போற்றும் விதமாக குழந்தைகள் "ஹோலி ரே ஹோலி பூர்ணாசப் போலி" என்று கூவி மகிழ்வர். சிம்கா எல்லா தீமைகளையும் நீக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிம்கா முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு ரங் பஞ்சமி என்னும் வண்ண விழாக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது மக்கள் எவ்வித கருத்து வேறுபாடு இன்றி எல்லோரையும் மறந்து மன்னித்து புதிய உறவினைத் தொடங்க வேண்டும் என்பது மரபு.

மணிப்பூர்


இங்கு இளைஞர்கள் ‘லாம்டா பால்குந்த்’ என்ற முழு நிலவு அல்லது ‘பௌர்ணமி’ என்னும் இரவு நேரத்தில் ‘தஃபால் சோங்க்பா’ எனும் நாட்டுப்புற நடனம் ஆடுவர். பண்டைய கால நாட்டுப்புற இசைக் கருவிகள் மற்றும் தாளத்துடன் கூடிய உள்நாட்டு இசைக்கருவிகள் வாசிக்கப்படும்.

கர்நாடகா


கர்நாடகத்தில் ‘சிர்சி’ என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை "பெடர வேஷா" என்ற தனித்துவம் வாய்ந்த நாட்டுப்புற நடனத்துடன் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்துக் கொண்டாடப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர்


ஹோலி மிகுந்த உற்சாகத்துடன் கோடைக் கால அறுவடை துவங்குவதைக் குறிப்பதாகக் கொண்டாடப்படுகிறது. வண்ண நீரைத் தெளித்தும், வண்ணப் பொடிகளைத் தூவியும் பாடல்கள் மற்றும் நடனத்துடன் கொண்டாடுவர்,

பஞ்சாப் ஹிமாச்சல் பிரதேசம்


ஹோலி சமயத்தில் பஞ்சாபில் உள்ள வீடுகளின் வாசல்களில் மற்றும் மாளிகைகளின் சுவற்றில் பல வண்ணங்களைக் கொண்டு ஓவியம் வரைவர். இது தென் இந்தியாவில் வரையப்படும் ரங்கோலியைப் போன்று இருக்கும். இந்தக் கலையைப் பஞ்சாபில் ‘சவுக் பூர்ண’ அல்லது ‘சவுக் புராண’ என்று கூறுவர். இதை அங்குள்ள விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் செய்வர்.
பெண்கள் வீட்டு முற்றத்தில் இதைத் துணிகளில் வரைவர். இந்தக் கலையானது மரங்களை மையமாகக் கொண்டு செடிகள், கொடிகள், பூக்கள், மயில், பல்லக்கு மற்றும் வடிவியல் வடிவங்களான செங்குத்து, கிடைமடையாக மற்றும் சாய்ந்த கோடுகள் போன்றவை வரையப்படுகின்றன. இவை வசந்தகாலத்தின் துவக்கத்தைக் குறிப்பிடுவதாகும். ‘நாடங்கி’ என்ற நாட்டுப்புற நாடகக் கலை நடத்தப்படும்.

இயற்கை ஹோலி வண்ணங்கள் தயரிக்கும் முறை
புனித ஹோலி வண்ணங்கள்

 • ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் முதன்மை வண்ணங்களைப் பற்றி எடுத்துரைக்கவும்.
 • சிவப்பு வண்ணமானது அன்பு மற்றும் செழிப்பினைக் குறிக்கின்றது.
 • நீல வண்ணம் பகவான் கிருஷ்ணரின் வண்ணத்தைக் குறிக்கிறது.
 • மஞ்சள் வண்ணமானது மங்களகரமான மஞ்சளைக் குறிக்கிறது.
 • பச்சை வண்ணமானது புதிய துவக்கம் மற்றும் வசந்த காலத்தைக் குறிக்கிறது.
 • வித்திடப்படும் நல்ல பண்புகள்
 • ஹோலி வண்ணங்களைப் பாராட்டுதல்
 • ஹோலியின் முதன்மை வண்ணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல்.
 • சிவப்பு வண்ணமானது அன்பு மற்றும் செழிப்பினைக் குறிக்கின்றது.
 • நீல வண்ணம் பகவான் கிருஷ்ணரின் வண்ணத்தைக் குறிக்கிறது.
 • மஞ்சள் வண்ணமானது மங்களகரமான மஞ்சளைக் குறிக்கிறது.
 • பச்சை வண்ணமானது புதிய துவக்கம் மற்றும் வசந்த காலத்தைக் குறிக்கிறது

தேவையான பொருட்கள்:
 • பல வண்ணங்களாலான தெர்மோக்கோல் பந்துகள் / பல வண்ண முத்துக்கள்.
 • முதன்மை வண்ண பந்துகள் / முக்கிய வண்ண முத்துக்கள்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,பச்சை)
 • குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1 – 10 எண்கள் குறிப்பிடப்பட்ட பல அட்டைகள்.
 • ஒரு கூடை அல்லது கிண்ணம்.

ஆயத்த முயற்சிகள்:
 • முதன்மை ஹோலி நிறங்களை சேகரித்தலுக்கு கூடுதல் ஊக்க புள்ளிகள் வழங்கப்படும்.

விளையாட்டு:
 1. அட்டைகளை நன்றாக குலுக்கியபின், குழந்தைகளால் எவ்வளவு அட்டைகளை எடுத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு அட்டைகளை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுத்து கொள்ள கூறவும்.
 2. கடிகாரத்தை துவக்கவும்/இயக்கவும்
 3. குழந்தை/ குழந்தைகளை அட்டைகளை எடுத்துக் கொள்ளச் சொல்லவும்.
 4. குழந்தைகளை அட்டையில் உள்ள எண்ணிற்கு ஏற்றவாறு அவர்களால் முடிந்த அளவு பந்துகள் அல்லது முத்துக்களை சேகரிக்கச் சொல்லவும்.
 5. இவ்வாறு குறிப்பிட்டுள்ள கால அளவு நிறைவுறும் வரை, குழந்தை/குழந்தைகளை மீண்டும் அட்டையை எடுத்து, அதில் உள்ள எண்ணிற்கு ஏற்றவாறு, பந்துகள் மற்றும் முத்துகள் சேகரிக்கச் சொல்ல வேண்டும்.
 6. சேகரிக்கப்பட்டுள்ள பந்துகள் மற்றும் முத்துக்களை எண்ணவும்.
 7. சேகரிக்கப்பட்டுள்ள ஹோலி பண்டிகையின் முதன்மை நிறத்திற்கு ஊக்க புள்ளிகள் அளிக்கப்படும்.
 8. அதிகமாக புள்ளிகள் எடுத்த குழந்தை/ குழந்தைகள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும்.

வண்ணங்கள் தெளித்து விளையாடுதல்

இந்த செயற்பாடு, கிருஷ்ணருக்கும் ராதாவிற்கும் இடையே நடந்த ஹோலி தொடர்புடைய ஒரு புராணக்கதையைக் குழந்தைகளுக்கு நினைவூட்டும்.

ஒரு நாள், கிருஷ்ணன் தன் தாய் யசோதாவிடம் சென்று, “இந்த இயற்கையின் அநியாயத்தைப் பாருங்கள் அம்மா. அந்த ராதா மட்டும் எவ்வளவு வெள்ளையாக இருக்கிறாள். நான் மட்டும் இப்படி கறுப்பாக இருக்கிறேனே.” என்று கூறி அழுதான். அழும் கிருஷ்ணனை சமாதானப் படுத்துவதற்காக யசோதா, “நீ சென்று ராதாவின் முகத்தில் நீ விரும்பிய வண்ணத்தைப் பூசிவிட்டு வா” என்று கூறி அனுப்பினாள்.

அம்மாவின் அறிவுரையைக் கேட்ட குறும்புக் கண்ணன் தன் அன்பு ராதாவின் முகத்தில் வண்ணத்தைப் பூசி அவளையும் தன்னைப் போலவே ஆக்கிவிட்டான்.

ராதா மீதும் மற்ற கோபிகைகள் மேலும் “பிச்காரி” (Water Jet) என்ற ஒரு குழாயைக் கொண்டு வண்ணங்கள் தெளித்த கிருஷ்ணனின் இந்த குறும்புச் செயல் எப்படியோ மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. மேலும் அது ஒரு வழக்கமாக மாறி பின்னர் ஒரு பெரிய திருவிழாவாகவே மாறிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஹோலியின்பொழுது, “பிச்காரி” யும் பலவித வண்ணங்களும் உபயோகப்படுத்துவது நன்கு பரவி வருகிறது.

நாம் இப்பொழுது காலி (use&throw) வாட்டர் பாட்டில் வைத்து எப்படி pichkari செய்வது என்று பார்ப்போம். மேலும் அதை வைத்து வண்ணத் தண்ணீர் தெளித்து நம் நண்பர்களுடன் நன்கு விளையாடுவோம்.

கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
 • தேவையற்ற பொருட்களை எவ்வாறு உபயோகமானதாக மாற்றுவது என்றறிதல்

தயாரித்து வைத்துக்கோள்ள வேண்டியவை:
 • பல வண்ணங்களில் தண்ணீர் தயாரிக்கவும் ( வீட்டிலேயே இயற்கை முறையில் வண்ண நீர் தயாரிப்பது என்றறிய எங்களது காணொளியைப் பாருங்கள்)

தேவையான பொருட்கள்:
 • உபயோகித்த பழைய வாட்டர் பாட்டில்
 • துளைகள் போட ஒரு காம்பஸ்
 • பாட்டிலின் வெளிப்புறம் அழகு படுத்த பல வண்ண அலங்காரத் தாள்கள்.
 • பாட்டிலில் நிரப்பப் பல வண்ணங்களில் தண்ணீர்

செய்முறை:
 1. பழைய வாட்டர் பாட்டில்களை எடுத்துக்கொள்ளவும்
 2. காம்பஸைக் கொண்டு பாட்டில் மூடியில் துளைகள் போடவும்
 3. பாட்டிலை நன்கு அழகு படுத்தவும்.
 4. வண்ணத் தண்ணீரை நிரப்பி பாட்டிலை மூடவும்.
 5. உங்கள் நண்பர்களுடன் ஒரு திறந்த வெளிக்குச் சென்று வண்ண நீரை மேலே தெளித்து விளையாடவும்.

ஹோலிகா தகனம்

இந்த கொலெஜ்(காகிதகூண்டு) செயல்பாடானது குழந்தைகளுக்கு ஹோலியை ஒட்டிய புராணக்கதைகளை சொல்வதற்கு ஒரு சுவாரசியமான வழிமுறையாகும்.

ஹோலியைப்பற்றி, பல்வேறு விதமான புராணக்கதைகள் இந்தியாவின் பல்வேறு பாகங் களிலும் நிலவி வருகிறது. இதில் மிக ப்ரசித்தமானது அசுர அரக்கன் ஹிரண்ய கசிபுவைப் பற்றியதாகும். அவன் ஒரு குரூரமான கொடுங்கோல் அரசன் அவனது மகன் பிரஹல்லாதன் பகவான் விஷ்ணுவின் ஆழ்ந்த பக்தன். இதனால் ஆத்திரமடைந்த அவன் தந்தை மஹா விஷ்ணுவை வழிபடுவதை தடுக்க பல வகைகளில் கடுமையாக முயன்றார். அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்றதால், அவனை கொல்ல தீர்மானித்தார். குன்றிலிருந்து தூக்கியெறிதல், யானை காலடியில் போட்டு நசுக்குதல் போன்ற பல முயற்சிகள் செய்தார். ஆனால் பகவான் விஷ்ணு ஒவ்வொரு முறையும் அவனை காப்பாற்றினார். இறுதியில், தீயினால் பொசுக்கப்படாதிருக்கும் வரத்தை வாங்கியுள்ள தன் சகோதரி ஹோலிகாவை அழைத்தான். ஹோலிகா, ப்ரஹல்லாதனை தன் மடியிலிருத்தியவண்ணம் தீயில் இறங்கினாள். ஆனால் பகவான் விஷ்ணுவின் கருணையினால், இந்த முறை தீயில் ஹோலிகா எரிந்தாள். பிரஹல்லாதன காப்பாற்றப்பட்டான்.

வலியுறுத்தப்படும் பண்புகள்:
 • ப்ரஹல்லாதனின் தீவிர பக்தியை மனதில் கொள்ளல்
 • தீமையை நன்மை வெர்றி கொள்ளல்
 • பொறுமை
 • படைப்பாற்றல்

தேவைப்படும் பொருட்கள்:
 • பழைய செய்திதாள் (தரையில் விரித்துக்கொள்ள)
 • அட்டை காகிதம்
 • ஒட்டுவதற்கு பசை-க்ளூ ஸ்டிக்
 • மஞ்சள்,சிவப்பு,ஆரஞ் டிஸ்யு அல்லது க்ரேப் தாள்
 • ப்ரவுன் பேப்பர்
 • ஒட்டுவதற்கு டேப்
 • Sticky tape
 • ஹோலிகா மற்றும் ப்ரஹல்லாதன் படம் (ஏதாவது பழைய புத்தகத்திலிருந்து கிழிக்கலாம் அல்லது கையாலேயே வரையலாம்).

செய்முறை:
 1. அட்டையை எடுத்து எரியும் நெருப்பு வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
 2. பிறகு சிவப்பு டிஷ்யு பேப்பரில் எரியும் நெருப்பு கதிர்கள் போல் வெட்டிக்கொள்ளவும்.
 3. பசையை எடுத்து, டிஷ்யு பேப்பரின் அடியில்(கீழ்ப்பக்கம்) மட்டும் தடவவும் (நிஜம் போல தோன்ற) பிரவுன் பேப்பரில் செவ்வக வடிவத்தில் விறகு போல் வெட்டிக்கொள்ள வேண்டும். இவற்றை நெருப்புக்கு கீழ் ஒட்டவும். நிஜம் போல் தோற்றமளிக்க நிஜமான கிளைகளையும் உபயோகிக்கலாம்
 4. படத்தில் காட்டியுள்ளது போல் ஹோலிகா, ப்ரஹல்லாதன் படத்தை ஒட்டவும்

வசந்த காலமே வருக

ஹோலி ஹிந்துக்களின் வண்ணத் திருவிழா, வசந்த காலத்தின் வருகையை வரவேற்பதும், குளிர் காலத்தின் நிறைவைக் கொண்டாடுவதாகும். மேலும் தீமையை அழித்து, நன்மையை வென்றதைக் குறிக்கிறது.

வித்திடப்படும் நல்ல பண்புகள் :
 • கலைத்திறன்
 • ஹோலியின் முக்கியத்துவத்தை உணர்தல்
 • பொறுமை
 • படைப்பாற்றல்

தேவையான பொருட்கள் :
 • மிருதுவான வண்ணக் காகிதம் (மலர்களின் நிறங்களில் பச்சை, வெள்ளை) ஐஸ்கிரீம் குச்சிகள்
 • சாட்டின் நாடா
 • பசை
 • கத்திரி

ஆயத்த முயற்சிகள் :
 • ஹோலி, வசந்தகால விழாவைப் பற்றி விவாதித்தல்.

செய்முறை :

1. படத்தில் உள்ளது போல் ஐஸ்கிரீம் குச்சிகளை பசையால் ஒட்டிக்கொள்ளவும்.


2. மூன்று வண்ணங்களை தேர்வு செய்து பூக்களின் வடிவத்தில் நுரைகாகிதங்களை வெட்டிக் கொள்ளவும்.

3. வெவ்வேறு அளவுகளில் மூன்று தண்டுகள், மூன்று வட்டங்கள் மற்றும் புற்கள் படத்தில் காண்பித்துள்ளது போல் வெட்டிக் கொள்ளவும்.


4. அவற்றை ஐஸ்கிரீம் குச்சிகளின் மீது ஒட்டவும்.


5. சாட்டின் நாடாவை வெட்டி படத்தில் காண்பித்துள்ளது போல் ஒட்டிக்கொள்ளவும்.


6. சிறிய நுரை காகிதத்தை எடுத்து அதில் நல்வரவு என்று எழுதி அதை வெட்டி வைத்துக் கொள்ளவும்.


7. குறிப்பான்களைக் கொண்டு சுவடு உண்டாக்கிக் கொள்ளவும்.


8. சுவற்றில் மாட்டி விடவும்.


By,
Sree Ranjani T R
(Balavikas Group III Student)

ஹோலி வாழ்த்து அட்டை

உங்கள் ஹோலிக் கொண்டாட்டத்தில் இலையில் அச்சடித்த வாழ்த்து அட்டை மூலம் இயற்கையை இணைப்போம் வாருங்கள்!

 • இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம்
 • படைப்பாற்றல்
 • பொறுமை
 • கலை மற்றும் கைவினைத் திறன் மேம்பாடு

தேவையான பொருட்கள் :
 • இலைகள் மற்றும் பூக்கள்
 • அட்டை (நடுத்தர அளவு)
 • வண்ணப் பூச்சு (பிரகாசமான நிறத்தில்)
 • வண்ணப்பூச்சுத் தூரிகை
 • வண்ணத்தட்டு அல்லது தட்டு
 • செய்தித்தாள்

செய்முறை :
 1. இளந்தளிராகவும், புதியதாகவும், வளைந்து கொடுக்கும் வகையிலும் உள்ள இலையை எடுத்துக் கொள்ளவும். உலர்ந்த இலைகள் சரியாக இருக்காது. அவை அழுத்தம் தரும்பொழுது உடைந்தும், உதிர்ந்தும் போய்விடும்.
 2. வேலை செய்யும் இடத்தில் கறைப் படியாமல் இருக்க செய்தித் தாளைப் பரப்பிக் கொள்ளவும்.
 3. சிறிதளவு வண்ணப் பூச்சைத் தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
 4. இலையின் மீது அந்த வர்ணத்தைப் பூசவும்.
 5. வண்ணப் பூச்சு உள்ளப் பகுதியை அட்டையின் மீது மெதுவாக வைக்கவும்.
 6. இலையை வண்ணப் பூச்சுக் கலையாமல் மெதுவாக எடுக்கவும்.
 7. இலையின் அச்சு அட்டையில் பதிந்துள்ளதை உறுதிப் படுத்திக் கொள்ளவும்.
 8. சிறிது நேரம் உலர விடவும்.
 9. துடிப்பான ஹோலி வாழ்த்து அட்டை தயார்.
ஹோலி மரம்

வசந்த காலம் என்பது வண்ணக் காலம். இயற்கைத் துளிர் விடும் காலம். கண்டிப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தருணம்! கடும்பனிக் காலம் முடிந்து கோடை காலத்தின் துவக்கத்தை அறிவிக்கும் காலம்தான் இந்த வசந்த காலம்(அல்லது) இளவேனிற்காலம். அதனால் தான் நாம் பல நூற்றாண்டுகளாக இதைக் கொண்டாடி வருகிறோம்.

இதோ நம் சுட்டிக் குழந்தைகளுக்காக ஒரு அழகிய கைவேலை! வசந்த காலத்தை குறிக்கும் விதமாக பளிச்சிடும் வண்ணங்களைக் கொன்டு ஹோலி மரத்தை அழகு செய்யலாம்.


இதன் மூலம் கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
 • பொறுமை
 • நிறங்களின் அழகை ரசித்தல்

தேவையான பொருட்கள்:
 • டிஷ்யு பேப்பர் (அ) வண்ணக் காகிதங்கள்
 • பசை(gum)
 • வெள்ளை நிற அட்டை
 • ப்ரௌன் நிற, கையால் செய்யப்பட்ட சார்ட் பேப்பர் (hand made paper)

செய்முறை:
 1. ப்ரௌன் பேப்பரைக் கொண்டு மரத்தின் தண்டுப் பகுதியை வரைந்து வெட்டி எடுத்து வெள்ளை அட்டையில் ஒட்டவும்
 2. பல வண்ணக் காகிதங்களையோ அல்லது டிஷ்யு பேப்பரையோ கசக்கி சுருட்டி மரத்தின் கிளைகளைச் சுற்றி ஒட்டவும்.( படத்தில் காட்டியபடி செய்யவும்) .

வளமிகு ஹோலி வண்ண மணி ஹோலி

ஹோலி பண்டிகையில் உபயோகப்படுத்தும் பல வித நிறங்களை பகுத்து அறிதலும், அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதலும்.

தயார் படுத்துதல் :

குழந்தைகளிடம் ஹோலி பண்டிகையின் முதன்மையான வண்ணங்களைப் பற்றி விளக்கி கூற வேண்டும். அதாவது,

 • சிவப்பு நிறம் அன்பையும், செழிப்பையும் குறிக்கும்.
 • நீல நிறம் ஸ்ரீ கிருஷ்ணபகவானை நினைவு கொள்ள செய்யும்.
 • மஞ்சள் நிறம் என்பது மஞ்சள் கிழங்கின் நிறமாகும். அது மங்களகரத்தை குறிக்கிறது. பச்சை நிறம் வசந்த காலத்தையும், புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது.

தேவையான பொருட்கள்:
 • பல வண்ண தெர்மகோல் உருண்டைகள் அல்லது பல வண்ண மணிகள்.
 • இவற்றுள் பிரதான நிறமாகிய சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை ஆகியவை முக்கியமாக இருக்கவேண்டும்.
 • விளையாட்டில் பங்கு பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நிறைய அட்டைகள் (கார்ட்ஸ்) தயார் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று முதல் பத்து எண் வரை ஒவ்வொரு அட்டையிலும் ஒரு எண் என்ற முறையில் தனித்தனியாக எழுத வேண்டும்.
 • ஒரு கிண்ணத்தில் பல நிறமுடைய தெர்மோகோல் (அ ) மணிகளை வைக்கவும் .

விளையாட்டு:
 1. எல்லா அட்டைகளையும் நன்கு குலுக்கி எண்கள் அடியில் இருக்குமாறு குப்புற கவிழ்த்து வைக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், (உ.ம் 3 நிமிடம்)
 2. ஒவ்வொரு குழந்தையையும் 3 அட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுக்க சொல்லவேண்டும்.
 3. ஒவ்வொரு அட்டையையும் எடுத்தபின் அந்த அட்டையில் உள்ள எண்கள் படி ஒரே நிறமுள்ள மணிகளை /தெர்மொகோல் உருண்டைகளை கிண்ணத்தில் இருந்து எடுக்கச்சொல்ல வேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் 3 சிறிய தட்டுகளைக் கொடுத்து அவற்றில் வைக்கச் சொல்ல வேண்டும். உதாரணமாக எண் 3 என்று எழுதப்பட்டுள்ள அட்டையை குழந்தை எடுத்தால ஒரே நிறமுள்ள 3 மணிகளை அக்கிண்ணத்தில் இருந்து எடுக்கச்சொல்லி தட்டில் வைக்க செய்யவும்.
 4. இவ்வாறு 3 அட்டைகளிலும் உள்ள எண்ணுக்கு ஏற்றாற்போல் மணிகளை கிண்ணத்தில் இருந்து எடுக்கச்செய்ய வேண்டும். விருப்பமான நிறங்களை குழந்தைகள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் பிரதான நிறங்களுக்கு (சிவப்பு,நீளம்,மஞ்சள்,பச்சை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் விளையாட்டை முடிக்கக்செய்ய வேண்டும். ஒவ்வொரு நிற மணிகளுக்கும் மதிப்பெண் கொடுக்கப்படவேண்டும். பிரதான நிறங்களுக்கு ஊக்க மதிப்பெண் கொடுக்கவேண்டும். அதிக மதிப்பெண் பெற்ற குழந்தை வெற்றி அடைந்தது என்று பாராட்டப்படவேண்டும் .

விளையாடும் முறை - 2 :
 1. அட்டை தயார் செய்தலில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். எண்களுக்கு பதில் அட்டையில் நிறங்களின் பெயர் (வானவில் நிறங்கள்) எழுதவேண்டும். அதாவது ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், இளம் சிவப்பு, சிவப்பு முதலியன.
 2. நிறைய அட்டைகள் தயாரிக்கவேண்டும்.
 3. அட்டைகளை குலுக்கி நிறங்களின் பெயர் கீழ் பக்கம் இருக்குமாறு அடுக்கவேண்டும்.
 4. ஒவ்வொரு குழந்தையும் ஒரு நிமிடத்தில் ஒரு அட்டையை உருவி எடுத்து அதில் எழுதப்பட்டுள்ள நிறத்தை பார்க்க வேண்டும்.
 5. உடனே அந்த நிறத்திற்கு ஏற்றவாறு மணிகளை கூடையில் இருந்து எடுக்கவேண்டும். எவ்வளவு அதிகமாக எடுக்கமுடியுமோ அவ்வளவு மணிகளை அக்குழந்தை சிந்தாமல் சிதறாமல் கூடையிலிருந்து கொடுக்கப்பட்ட அந்த ஒரு நிமிடத்தில் எடுக்கவேண்டும்.
 6. இவ்வாறு ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று அட்டைகள் உருவவும், மூன்று முறை அட்டையில் குறிக்கப்பட்ட நிற மணிகளை சேகரிக்கவும் மூன்று நிமிட அவகாசம் தரப்பட வேண்டும்.
 7. பொறுக்கும் நிறமணிகள் வெளிர் அல்லது அடர் நிற முடயதாக இருக்கலாம். அனால் ஒரே நிறத்தில் சேகரிக்கப்படவேண்டும்.

விதி : யார் நிற மணிகளை சரியாக அட்டையில் உள்ளவாறு புரிந்து கொண்டு எடுக்கிறார்களோ, மற்றும் அதிக எண்ணிக்கையில் குறிப்பிட்ட நேரத்தில் சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்.

அறிவு : நிறங்களை இனம் கண்டு கொள்ள உதவும். எண்களின் முக்கியத்துவம், செயல் திறமை ஆகியவை மேம்படும்.

வட்டத்தைச் சுற்றும் வண்ணங்கள்


கற்பிக்கப்படும் குணங்கள்:
 • கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல்
 • ஒற்றுமை

தேவையான பொருட்கள்:
 • சாக்கட்டி
 • ஏதாவது ஒரு இசைக்கருவி (அ) குருவே பஜன் பாடலாம்

தயாரித்துக்கொள்ள வேண்டியவை:
 • தரையில் ஒரு வட்டம் வரையவும்
 • சிறு குழுவாகயிருந்தால் சிறிய வட்டம், குழு பெரியதாக இருந்தால் பெரிய வட்டம்.

விளையாட்டு:
குழுவின் அளவு : குறைந்தபட்சம் 15-20 குழந்தைகள்.
 1. குழந்தைகளை முடிந்தவரை சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரிக்கவும்.
 2. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வண்ணப் பெயரிடவும். (சிகப்பு/நீலம்/பச்சை/மஞ்சள் என்று)
 3. பின்னணியில் இசை (அ) பஜன் ஒலிக்கத் செய்யவும்.
 4. குழந்தைகளை வட்டத்தைச் சுற்றி ஓடச் சசொல்லவும்.
 5. ஒரு சில சுற்றுகளுக்குப் பிறகு குரு இசையை நிறுத்திவிட்டு அதே சமயத்தில் ஒரு வண்ணத்தின் பெயரைக் கூறி அழைக்கவும்.
 6. அழைக்கப்பட்ட வண்ணக் குழுவைச் சேர்ந்த குழந்தைகள் வட்டத்திற்குள்ளே வரவேண்டும். உதாரணமாக, “சிகப்பு” என்றழைத்தால், சிகப்புக் குழுவைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் வட்டத்திற்குள் வந்து நிற்கவேண்டும். ஏதாவது ஒரு சிகப்புக் குழு குழந்தை வட்டத்திற்கு வெளியே இருந்தால் அவன்/அவள்/அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும். சிகப்பு அல்லாத மற்ற வண்ணக் குழுவிலுள்ள குழந்தைகள் எவரேனும் வட்டத்திற்குள் வந்தாலும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .
 7. குரு அடுத்த வண்ணம் அழைக்கும் வரை மீண்டும் விளையாட்டைத் தொடரவும். 6 குழந்தைகளே மீதமாகும் வரை விளையாட்டைத் தொடரவும்.
 8. ஆட்ட இறுதியில் எந்த வண்ணக் குழுவைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் நிற்கிறார்களோ அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
வண்ணம் தீட்டவும் - பிரிவு I
வண்ணம் தீட்டவும் - பிரிவு II
வண்ணம் தீட்டவும் - பிரிவு III

Sketch by
Shriramya (Balvikas Alumna)

வழிதேடல் – பிரிவு I

வழிதேடல் – பிரிவு II

வழிதேடல் – பிரிவு III

புள்ளிகளை இணைக்கவும்

யுகாதியின் முக்கியத்துவம்“என்று மனிதன் தனதுக் கெட்டக் குணங்களைக் களைந்துத் தியாக உணர்வையும் அன்பையும் இதயத்தில் முழுவதுமாக வளர்க்கின்றானோ அன்றுதான் உண்மையான யுகாதியாகும்.”

ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநில மக்களின் புது வருடப் பிறப்பே யுகாதி ஆகும். ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலத்தில் ‘யுகாதி’ என்றும், மகாராஷ்ட்ராத்தில் ‘குடிபத்வா’ என்றும் கொண்டாடப்படுகிறது. பொதுவாக மார்ச் மாதத்தில் இந்தப் பண்டிகை அமையும். இந்துக்களின் நாள்காட்டியின்படி (பஞ்சாங்கம்) யுகாதிப் பண்டிகை, சித்திரை மாதத்தின் வளர்பிறையில் (ஸுக்லபக்ஷத்தில்) வருகின்ற முதல் நாளில், காலங்களில் முதல் காலமான வசந்த காலத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைப் புது வருடத் துவக்க நாளாக ஆந்திர, கர்நாடக, மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸம்ஸ்கிருத மொழியில் உள்ள யுகாதி என்ற சொல்லில் இருந்து உகாதி என்பது மருவி வந்துள்ளது. புதிய யுகத்தின் துவக்கம் அல்லது சகாப்தத்தின் துவக்கம் என்று அதன் பொருள். புராணங்கள் இந்த தினத்தைப் பகவான் கிருஷ்ணர் தமது மனித உடலைத் துறந்து, துவாபர யுகத்தின் நிறைவையும் கலியுகத்தின் பிறப்பையும் பறைச் சாற்றுவதாகக் கூறுகின்றது. இந்த தினத்தில் தான் பிரம்ம தேவர் பிரபஞ்சத்தைப் படைத்ததாகவும் நம்பப்படுகிறது.

யுகாதி தினத்தை பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் உகாதிப் பச்சடியுடன் துவங்குவது முறை. ஆறுப் பொருட்களைச் சேர்த்து செய்யப்படுவதே யுகாதிப் பச்சடி. ஒவ்வொன்றும் ஆறு சுவைகளான இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவைகளைக் குறிப்பதாகும். இவை நமது வாழ்வில் வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே சீராகப் பார்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.