வண்ண வண்ணக் கோலங்கள் - 2019
(பொங்கல் பண்டிகைக்கான சிறப்புக் கோலப்போட்டி)

பொங்கலோ பொங்கல்! விழாக் காலம் களைகட்டத் துவங்கி விட்டது! பழையன கழிந்து புதியன புகவேண்டிய காலத்தை மகிழ்ச்சி பொங்க வரவேற்போமாக!

பொங்கல் பண்டிகை என்றதும் நம் நினைவுக்கு வருவது அறுவடை செய்யப்பட்ட புதிய தானியங்கள்! இனிய கரும்புக் கட்டுகள்! பொலிவான மஞ்சள் கொத்துகள். அதற்கு முன்பாக கண் கவரும் வண்ண மிகு கோலங்களும் தான்.

ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் காணவிருக்கும் வண்ண மிகு அலங்காரங்களும், சிக்கலான சித்திரங்களும் கூட இந்த விழாக் காலத்தை வரவேற்கும் அம்சமாகும்.

தங்கள் வீட்டு வாயிலில் அழகான வண்ணக் கோலங்களை யிட்டு தங்களின் படைப்பாற்றலையும், கலைத் திறமையையும் வெளிக் கொணர்ந்து வருகிறீர்கள். வருகின்ற பொங்கல் கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு!

'வண்ண வண்ணக் கோலங்கள் - 2019' போட்டியில் கலந்து கொள்ளுங்கள்! தங்கள் வாயிலை வண்ணக் கோலத்தால் அலங்கரியுங்கள்! கோலத்தின் புகைப்படத்தை ஸ்ரீசத்யசாயி பாலவிகாஸ் செயலி மூலமாகவோ அல்லது இணைய தளத்திலோ இணைத்து சமர்ப்பியுங்கள்.

விதிமுறைகள்:

  • பாலவிகாஸ் முன்னாள் மாணவ /மாணவியர், பாலவிகாஸ் குருமார்கள், பெற்றோர், சேவா பிரிவு உறுப்பினர்கள், ஆன்மீக பிரிவு உறுப்பினர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் ஆவர் .
  • ஒரு போட்டியாளர் ஒரு கோலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
  • கோலத்திற்கு கோலப்பொடி, பூக்கள் அல்லது கோலத்திற்கு சம்பந்தப்பட்ட வேறு பொருட்களையும் பயன்படுத்தலாம்.
  • சுண்ணாம்புக்கட்டி (சாக் பீஸ்) கோலத்தினை தவிர்க்கவும்.
  • கோலம் தரையில் மட்டுமே 3அடி முதல் 5அடி வரையிலான அளவில் போடவும்.
  • சிக்கல் கோலங்களும் போட்டிக்கு தகுதியானவை ஆகும் .
  • போட்டிக்கான காலம் 15-1-2018 முதல் 22-1-2018 வரை ஆகும்.
  • நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
  • கோலத்தின் புகைப்படம் போட்டியாளரின் உண்மையான கைவண்ணமாக இருக்க வேண்டும்.
  • போட்டியாளர் இந்த இணைய தளத்தின் பிரத்யேகமாக குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்த பொங்கல் பண்டிகையை நாம் அனைவரும் சேர்ந்து சந்தோஷமாக, பிரார்த்தனைகள் செய்து வரவேற்றுக் கொண்டாடி மகிழ்வோம்!! வாருங்கள்!

நுழைவு படிவம்
Note: JPG, PNG, PDF. (கோப்பு அளவு: 5MB)