நவராத்ரி - செயற்பாடு

நவராத்ரி தத்துவம்

நவராத்திரி நாயகியர் - நவராத்திரி குழு செயற்பாடு:

( துர்கா, லஷ்மி, சரஸ்வதி )

 • துர்கை என்றால் – வீரம், தீமையை அழிப்பவன்
 • லஷ்மி என்றால் – செல்வம், நற்குணங்களை வளர்ப்பவள்.
 • சரஸ்வதி – படிப்பு, அறிவு, அறியாமையை நீக்குபவள்
கற்பிக்கப்படும் நற்குணங்கள் :
 • கூட்டு முயற்சி
 • நவராத்திரி நாயகியரைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
 • குழந்தைகளின் நினைவாற்றலை மேப்படுத்துதல்
தேவையான பொருட்கள் :
 • சார்ட் பேப்பர்
 • ஸ்கெட்ச் பேனா
 • ஒரு அட்டை பெட்டி
 • சில படங்கள்(கட்டாயமில்லை)
ஆயத்தமாகுதல்:

குருமார்கள் அவர்கள் வகுப்பில் இதற்கு முன் கற்பிக்கப்பட்ட துர்கா , லக்ஷ்மி , சரஸ்வதி ஸ்லோகத்தை நினைவு கூறவும். முதலில் துர்கையின் சிறப்பு அவரின் தோற்றம் பற்றி கூறவும். அதே போல லக்ஷ்மி, சரஸ்வதி பற்றியும் கூறவும்.

வகுப்பிலுள்ளக் குழந்தைகளின் எண்ணிக்கையை பொருத்துக் முன்று குழுக்களாகப் பிரிக்கவும் அக்குழுக்களுக்கு துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று பெயரிடவும்.

தயாரித்து வைக்க வேண்டியவை:

ஒரு சார்ட் பேப்பரை சம அளவு துண்டுகளாக வெட்டவும். துர்கையின் உருவம், அவளின் வாகனம், அவள் வைத்துள்ள ஆயுதம் போன்றவற்றை துண்டு சார்ட் பேப்பரில் எழுதியோ அல்லது வரைந்தோ வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய கடவுளின் உருவம், வாகனம், ஆயுதம் போன்றவற்றையும் எழுதிக் கொள்ளவும்.

அவற்றோடு மூன்று தெய்வகளுக்கும் சமந்தப்படாத சிலவற்றையும் உதாரணம் எலி, கைப்பேசி, சூரியன் போன்றவற்றை எழுதி போடவும். மேலும் அந்தந்த தேவியரின் ஸ்லோகத்தையும் பிரித்து எழுதி அட்டைகளாகப் போடலாம். இவற்றையெல்லாம் ஒரு அட்டைப் பெட்டியிலிட்டுக் குலுக்கி விடவும்.

செயல்படுத்தும் முறை:-

மூன்று குழுக்களையும் அவரவர்க்குரிய தேவிக்கு சம்பந்த்ப்பட்ட அட்டைகளைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் எடுக்கச் சொல்லவும். எந்த குழு முதலில் அட்டைகளை சேகரிக்கின்றனரோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்படும். மேலும் தெய்வகளின் சிறப்பைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். அட்டைகள் தயாரிக்க சில குறிப்புகள்.

விஷ்ணுவின் தங்கை துளசி வெள்ளைஆடை
கெளரி கஜம் அறிவு
ஐங்கரன் அன்னை செல்வம்ஜபமாலை
சூலம் ஆந்தை அன்ன பக்ஷி
சிங்கம் விஷ்ணு புஸ்தகம்
சிவன் நகை பிரம்மா
வீரம் சக்கரம் வீணை
சங்கு வெள்ளைத்தாமரை
உதாரணத்திற்கு சில வரைந்த படங்கள்:


சில ஒட்டப்பட்ட படங்கள்:


பசுமையை நாடு, தெய்வீகத்தைத் தேடு

(பழைய செய்தித்தாளில் தாம்பூலப்பை தயாரித்தல்)

நவராத்திரியின்போது தாம்பூலம் கொடுப்பது நமது கலாச்சாரம், இதற்கு ஒரு சிறிய பை - மஞ்சள், குங்குமம், வெற்றிலைப் பாக்கு, பரிசுப்பொருள் இவற்றை வைத்துக் கொள்ள - தேவைப்படுகிறது. சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு ப்ளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக தற்போது மக்கும் பொருட்களால் ஆன பைகள் தரலாம். பழைய செய்தித்தாள்களைக் கொண்டு எவ்வாறு பைகள் தயாரிக்க முடியும் என்பதை இந்த காணொளிக்காட்சி மூலம் காணலாம்

ஒரு நல்ல படம் ஆயிரம் சொற்கள் பேசுவதை விட நன்கு விளக்கும். அதுமட்டுமின்றி சொல்பவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும். கைகளால் செய்யப்பட்ட பைகள் நேர்த்தியுடனும் அழகாகவும் இருக்கும். இதில் அன்னை சாயியின் படத்தை நடுவில் ஒட்டுவதால், அது அன்பை போதிப்பதுடன், குழந்தைகள் கவனமாக கையாளவும் செய்வார்கள்.

இந்த நவராத்திரியில் உபயோகமற்றதை உருப்படி செய்து நமது பூமித்தாயிடம் நமக்கு உள்ள அன்பை வெளிப்படுத்துவோம்.

வெண் தாமரை ஆசனம்

(உபயோகம் அற்றதை உருப்படி ஆக்கல் - பாலவிகாஸ் வகுப்பறை செயல்பாடுகள்)


வெண் தாமரைகள் சேற்றில் உயர்ந்து நிற்கின்றன. அவை அழுக்கால் தீண்டப்படாமலும் அழகாகவும், கம்பீரமாகவும் விளங்குகின்றன. இவ்வாறு தாமரை மலர் தூய்மையின் பிரதி நிதியாய் மனிதன் எவ்வாறு எதிர்மறை எண்ணங்கள் நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இங்கு ஒரு ஒளிக்காட்சி தெர்மோக்கோல் தட்டினால் சரஸ்வதி தேவிக்கு வெள்ளைத்தாமரை எவ்வாறு செய்ய வேண்டும் என்று காட்டப்படுகிறது.

இந்த நவராத்திரியில் ஒரு புதுமையான வெண் தாமரை செய்து நமது கொலுவில் ஒரு மாயம் செய்யலாம்.

கொட்டாங்கச்சியில் கொள்கலன்
உபயோகமற்றதில் உருப்படி செய்தல்

கற்பிக்கும் பண்பு நலன்கள் :
 • உபயோகமற்றதில் கலைத்திறன்
 • சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சி
 • பொறுமை
தேவையான பொருட்கள் :
 1. கொட்டாங்கச்சி
 2. உப்புகாகிதம்
 3. அக்ரிலிக் பெயிண்ட் மற்றும் வார்னிஷ்
 4. ஒட்டும்பசை பெவிகால்/பெவிஸ்டிக்
 5. பழைய நாளேடு
 6. ரோலிங் பின்
செய்முறை :

 1. தேங்காயின் அரை மூடி(சிரட்டை அல்லது கொட்டாங்கச்சி) எடுத்து வெளிப்புறத்தை நன்கு சுரண்டவும்
 2. உப்புக்காகிதம்(எமிரி பேப்பர்) கொண்டு நன்கு பாலிஷ் செய்யவும்
 3. உட்புறமும் வெளிப்புறமும் வார்னிஷ் பூசவும்
 4. தங்க நிறம் அல்லது ஏதாவது பூக்கள் வரையலாம்
 5. உட்புறமும் வெளிப்புறமும் பெயிண்ட் அடிக்கலாம்
 6. இரண்டு மூடிகளையும் ஒன்றாக இணைக்கலாம் (படத்தில் காட்டியுள்ளது போல்). இதனைக்ளிப்புகள், குண்டூசி ஆகியவை வைக்க பயன்படுத்தலாம்
குந்தன் ரங்கோலி

கற்பிக்கப்படும்நற்குணங்கள் :
 • பொறுமை
 • செயல் திறன்
தேவையான பொருட்கள் :
 1. OHP தாள், கண்ணாடித் தாள்.
 2. எழுதுகோல்.
 3. ஸெலோடேப்.
 4. வண்ண முத்துகள், முத்து மணிகள்.
 5. கலர் பென்சில் / fabric பெயின்ட்.
 6. கத்திரிக்கோல்.
 7. பசை.
செய்முறை :
 1. குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல் 3 அல்லது 4 குழுக்களாகப் பிரிக்கவும்.
 2. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு OHP தாள் கொடுக்கவும்.
 3. குழுவில் ஒருவரை சர்வ தர்ம சின்னத்தையோ அல்லது வேறு ஒரு வடிவத்தை வரையச் சொல்லவும்.
 4. பிறகு வரைந்த சின்னத்தைக் கத்திரிக்கோல் மூலம் அதே வடிவத்தில் வெட்டவும்.
 5. பிறகு அதையெடுத்துக் கண்ணாடித் தாளில் ஒட்டவும்.
 6. வெவ்வேறு வண்ணங்கள் பயன்படுத்தி சின்னத்தில் தீட்டவும்.
 7. முத்து மணிகள், வண்ண முத்துகள் போன்றவற்றை ஒட்டவும்
நாடெங்கிலும் நவராத்திரி
1.மேற்கு வங்கம்,அஸ்ஸாம் பீஹார்


சப்தமி,அஷ்டமி, நவமி மற்றும் தசமி— நமது நட்டின் கிழக்கு பகுதியில்நவராத்திரியின் இந்த கடைசி நான்கு நாட்கள் துர்க்கை பூஜை என்று கொண்டாடப்படுகின்றன .துர்க்கை பூஜை மேற்கு வங்கம்,அஸ்ஸாம்,பிஹார் ஆகிய இடங்களில் மிகுந்த பிரபலமான பண்டிகை. மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது இது மஹிஷாசுரன் என்னும் எருமை அரக்கனின் மீதான துர்க்கையின் வெற்றியாகக்கொண்டாடப்படுகிறது

2. குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா


பாட்டின் மெட்டிற்கேற்ப்ப, ஆண்களும்,பெண்களும் சுழன்றாடும் நடனம் கர்பா மற்றும் தாண்டியாராஸ். அஸ்வின் மாதத்தின் முதல் 9 நாட்களும் கோலாட்டக்கழிகள் மற்றும் மத்தளத்தின் ஒலியும் குஜராத்தில் எங்கும் நிறைந்திருக்கும் பக்தர்கள் அன்னை சக்தியைக் குறித்து விரதமிருந்து வழிபடுவர். மாலையில் வாழ்க்கையின் ஆதாரத்தைக் குறிக்கும் வகையில் கார்பி எனப்படும் மண்பாண்டத்தில் விளக்குகள் ஏற்றி ஆரத்தி ஏற்றுவர்


மராட்டியர்களுக்கு இது புதிய ஒரு துவக்க நாளாக கருதப்படுவதால்,புதிய சொத்துக்கள் வாங்குதல், வியாபாரம் பேசி முடித்தல் ஆகியவற்றுக்கு சிறந்த காலமாக கருதப் படுகிறதுதிருமணமான மகளிர் ,தங்கள் மணமான தோழிகளை அழைத்து மருதானி யிட்டு,முன் வகிட்டில் குங்குமம் வைத்து,பரிசுகளை பறிமாறிக்கொள்வர். குஜராத்தைப் போலவே, இவர்களுக்கும் கார்பா மற்றும் கோலாட்ட இரவுகள்தான்

3. தமிழ்நாடு 


இதர மானிலங்களைப்போலவே இந்த ஒன்பது நாட்களுக்கும் ,தமிழ் நாட்டிலும் தனியான கொண்டாட்டம் உண்டு. துர்க்கைலட்சுமி,சரஸ்வதி ஆகிய தேவதைகள்வழிபடப்படுகிறாரகள். மும்மூன்று நாட்கள் தனித்தனியாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாலையில்நண்பர்களையும் ,உறவினர்களையும்.அழைத்து பரிசுகள் பறிமாறிக்கொள்ளப்படுகிறது. மணமான பெண் களுக்கு வளையல்,பொட்டு மற்றும் ஆபரணங்கள் கொடுக்கிறார்கள். மிக முக்கியமானது என்னவென்றால் கழற்றி மாட்டக்கூடிய படிக்கட்டுகள் அமைத்து பொம்மைகளை அடுக்கி கொலு வைப்பதுதான். இப்பழக்கம் தலைமுறை தலைமுறையாக வருவதாக கூறப்படுகிறது

4. பஞ்சாப்


நவராத்திரியின் முதல் 7 நாட்களுக்கு பெருபாலான பஞ்சாபிகள் அன்னை சக்தியின் அவதாரமான அனைத்து தெய்வங்களுக்குமாக விரதம் இருக்கிறார்கள்,.ஒவ்வொரு இரவும் ஒரு இடத்தில் பக்தர்கள் கூடி கண் விழித்திருந்து பக்தி பாடல்களை பாடுகிறார்கள். அஷ்டமி அல்லது நவமி தினத்தன்று அக்கம்பக்கத்தில் உள்ள 9 சிறு குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு பரிசுகள், பணம் மற்றும் உணவு வழங்கி விரதத்தை முடிக்கின் றனர் .இந்த கஞ்சக் எனப்படும் கன்னிகைகள் அன்னை சக்தியின் ஒன்பது அவதாரமாகக் கருதப்படுகின்றனர்

5. ஆந்திர ப்ரதேசம்


நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஆந்திர மக்கள் பதுகம்ம பண்டிகை என்று பெண்மை யின் சக்தியாகிய மஹாகவுரிக்கு அர்ப்பணித்து வழிபடுகிறார்கள்..பெண்கள் பாரம்பரிய முறையில் பூக்களைகட்டி வழிபடுகிறார்கள். நவராத்திரியின் முடிவில் அந்த பூமாலைகள் குளம் ஏரி ஆகிய நீர் நிலைகளில் மிதக்கவிடப்படுகின்றன. 

6.கேரளா


கேரளாவில் நவராத்திரி என்பது கல்வி சம்பந்தப்பட்டதாகும். இந்த பண்டிகை தீமையின் மீது நன்மை வெற்றி கொண்டதைக் குறிப்பதால், கேரள மக்கள் புதியன கற்கவும்,புதியதாக ஏதாவது தொடங்கவும் சிறந்த நாட்களாக கருதுகிறார்கள். கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதி தேவியை வழிபட்டு அவளது சிலைக்கருகே புத்தகங்களை வைக்கின்றனர்.

7.கர்னாடக


கர்னாடகத்தில் நவராத்திரி என்பது நடஹப்பா என்று அறியப்படுகிறது. 1610ஆம் ஆண்டு விஜயனகர வம்சத்தினரால் எப்படி கொண்டாடப்பட்டதோ அவ்வாறே கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் பத்தாம் நாள் விஜயதசமியானது, சக்திதேவி சண்டையிட்டு மஹிஷாசுரன் என்னும் அரக்கனை கொன்றதன் மூலம், தீமையை நன்மை வெற்றி கொண்டதாகக் கருதி கொண்டாடப்படுகிறதுஇதில் முரண் என்னவென்றால், மகிஷாசுரன் பெயர் தான் மைசூருக்கு வழங்கப்பட்டது. தசமியன்று மானிலம் முழுதும் நடைபெறும் யானைகள் அணிவகுப்பு கண்காட்சி,இவற்றைக்காண மக்கள் செல்வர்.

8 .தில்லிவானுயர்ந்த உருவம் கொண்ட ராவணன்,மேகனாதன்,கும்பகர்னன் உருவ பொம்மைகளை மைதானங்களில் அல்லது ராம்லீலாமைதானத்தில் எரிப்பதை காணும்போது மனம் மயக்கம் கொள்ளும். எண்ணற்ற உணவுப்பொருட்கள் கடைகள்,ரங்க ராட்டினங்கள் ஆகியவை தீமையின் மீதான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இங்கு தசரா மற்றும் தொடரும் ஒன்பது இரவுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், ராமாயணத்திலிருந்து நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தலே

9. இமாச்சல் பிரதேசம்


ஹிமாசலப்பிரதேசத்தில் நவராத்திரி கொண்டாட்டம் அதன் பத்தாவது நாளில்தான் நடைபெறுகிறது. மற்ர மானிலங்களைப்போலன்றி. மீதி பேருக்கு முடியும்போது இங்கு தொடங்குகிறது.குல்லு தசரா என்று அழைக்கப்பட்டு,ராமபிரான் அயோத்தியா திரும்பியதை குறிக்கிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் உள்ளூர் இந்து மக்கள் ஒன்று கூடி துர்க்கை தேவி வழிபாடு ஆற்றுகின்றனர்

நாட்டிலெங்கும் நவராத்திரி

(பிரிவு 2-குழந்தைகளுக்கான செயல்பாடுகள்)

நவராத்திரி, எவ்வாறுவெவ்வேறு விதமாக அனைத்து மானிலங்களிலும், கொண்டாடப்படுகிறது என்று அறிந்து கொள்ளும் பொருட்டு

அறியப்படும் பண்பு நலன்கள் :
 • நாடு முழுதும் நவராத்திரி கொண்டாடப்படுவதை அறிந்துகொள்ளுதல்
 • நவராத்திரியின் வண்ணமயமான காட்சிகளை மனக்கற்பனையில் காணல்
தேவையான பொருட்கள் :
 1. இந்திய வரைபடத்தின் வண்ண நகலெடுக்கவும் அல்லது வரைந்து சார்ட் பேப்பரில் கொள்ளவும் (பிரிண்ட் எடுக்க்க்கூடிய வரைபடம் கீழே உள்ளது)
 2. விதவிதமான துணிகளின் படம்,இனிப்புக்கள்,உருவ பொம்மைகள் முதலியன: நாளிதழ்,பேப்பர் இவற்றில் கிடைக்கும்-தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
 3. ஒட்டும் பசை, பெவிகால்
 4. கத்திரிக்கோல்
தயாராகுங்கள்
 • குருமார்கள் நவராத்திரி கொண்டாட்டம் பற்றி படிக்கவேண்டும்
செயல்பாடுகள் :
 1. குழந்தைகள் படங்கள் சேகரிக்கலாம் அல்லது அச்சு எடுக்கலாம்
 2. அவற்றை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / இடங்கள் மீது ஒட்டலாம்


நாடெங்கும் கொண்டாடப்படும் நவராத்திரி
(க்ரூப் 1 குழந்தைகளுக்கான வெட்டி ஓட்டும் செயற்பாடு)
(4 முதல் 8 வயது வரை)

நவராத்திரிப் பண்டிகை, இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் எப்படி வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது என்றறியலாம்.

கற்பிக்கப்படும் நற்பண்புகள் :


 • நாடு முழுவதும் நடக்கும் நவராத்திரி கொண்டாட்டங்களைப் பற்றி அறியலாம்
 • வண்ணமயமான நவராத்திரிக் காட்சிகள் நம் கண் முன்னே வரும்.

தேவையான பொருட்கள் :


 1. இந்திய வரைபடம். (கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அச்சு எடுத்துக் கொள்ளலாம்)
 2. பழைய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டப் பல்வேறு விதமான ஆடைகள், இனிப்புகள், சிலைகள் போன்றவற்றின் படங்கள் (சில படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அச்சு எடுத்துக்கொள்ளலாம்)
 3. கைவினைக்கு உபயோகிக்கும் பசை/ ஃபெவிகால்
 4. கத்தரிக்கோல்

ஆயத்தமாகுதல்


நாடெங்கும் கொண்டாடப்படும் நவராத்திரி விழாக்கள் பற்றிய கீழ் காணும் விவரங்களைக் குருமார்கள் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும்.

 • வடக்கே, வீடுகளில் தேவி வழிபாடு செய்தும், கன்னி பூஜை செய்தும் நவராத்திரி கொண்டாடுகிறார்கள்.
 • மேற்கு மாநிலங்களில், ஆண்களும் பெண்களும் ஆடும் ‘கார்பா நடனம்’ தான் மிகப் பிரசித்தி. ஆண்கள் பாரம்பரிய உடையான ‘பைஜாமா குர்தா’ வும், பெண்கள் ‘ பாவாடை சட்டை’யும் அணிந்து ஆடுவார்கள்.
 • கிழக்குப் பகுதிகளில், ஒன்பது நாட்களும் மாலையில், துர்கா தேவிக்குப் பூஜை செய்து வழிபடுவார்கள். பெண்கள் அழகழகாகப் புடவை அணிந்திருப்பார்கள். ஆண்கள் பாரம்பரியமாகப் ‘பைஜாமா குர்தா’ அணிந்திருப்பார்கள்.
 • தென் இந்தியாவில், முக்கியமாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில், படிக்கட்டி பொம்மைகளை அழகாக அடுக்கி வைக்கும் வழக்கம் உள்ளது. அதற்குக் ‘கொலு’ என்று பெயர். அந்த கொலுவைக் காண, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் அனைவரையும் அழைத்து மஞ்சள் , குங்குமம் கொடுப்பார்கள். கேரளாவில், ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும், மக்கள் புத்தகங்களை வைத்து சரஸ்வதிக்குப் பூஜை செய்து வழிபடுவார்கள்.

செயற்பாடு :


 • குழந்தைகளைப் படங்கள் சேகரிக்கச் சொல்லவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டப் படங்களை அச்செடுத்துக்கொள்ளச் சொல்லவும்.
 • இந்திய வரைபடத்தின் அந்தந்தப் பகுதிகளில் இப்படங்களை ஒட்டச் சொல்லவும்.


நாடெங்கும் நவராத்திரி


தேவியை அலங்கரித்தல்

இந்த ப்ரபஞ்சத்தாய், சர்வாலங்கார யுக்தாம், சர்வாலங்கார பூஷிதாம் என்று குறிக்கப் படுகிறாள். பொருள் என்னவெனில் பல்வேறு விதமான ஆபரணங்களை அணிந்தவள், எப்போதும் முழுமையாக மிளிர்பவள். தெய்வீக அன்னையை அலங்கரித்தல் என்பது நமது பக்தியைக் காட்டும் ஒரு வழியாகும். பாரம்பரியம் மிக்க காலங்கடந்த வண்ண மயமான ஆபரணங்கள், முழுமையாக வரைந்தபின், அன்னையின் அழகுக்கு மேலும் மெருகூட்டும். திகைக்க வைக்கும் ஆபரணங்களின் வண்ணங்கள் அவள் உருவத்தை அலங்கரித்து அதனால் எந்த முயற்சியுமின்றியே நமது இதயத்தில் அவள் உருவம் பதிந்து போகும். இந்த ரங்கோலி உருவங்களில் கொடுக்கப்பட்டுள்ள நுணுக்கமான, விரிவான விபரங்கள் கலைஞரின் அர்ப்பணிப்பு உணர்வை பிரதிபலிக்கிறது. இந்த அலங்கரிக்கப்பட்ட ரங்கோலி சித்திரங்கள் தேவியை நம் அகக்காட்சியில் ஒளிரும் அழகு, அன்பு, கருணை, தயை இவற்றுடன் கண்டு உணர கட்டாயம் உதவி புரியும்.

இந்த நவராத்திரியில் ஒளிரும் இந்த ரங்கோலிகளை வரைய முயற்சித்து, நம்முள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வோம்.

கிரீடம்
நெக்லஸ்
காது தோடுகள்
வளையல்கள்
பின்னல் அலங்காரம் மற்றும் குஞ்சலம்
கை கொலுசு
ரங்கோலி by Janani Raghavan
பூமாதாவிற்கு ஆபரணங்களால் ஆன ரங்கோலிகள்

நவராத்ரி நெருங்கிக் கொண்டிருப்பதால் நம் பூமியன்னைக்கு அழகான ஆபரணங்களாலான ரங்கோலி வரையத் தயாராவோம். அன்னை அபிராமியின் தாடங்கம் (காதுகளில் அணியப்படுவது) அவளால் தனது பக்தன் அபிராமிபட்டருக் காகஎறியப்பட்டவுடன் அமாவாசையை பௌர்ணமியாக (முழு நிலவு) மாற்றியதாக சொல்லப்படுகிறது.

இந்திய அழகிய பாரம்பரிய தங்க நகைகள் ரங்கோலியில் வரையப்பட்டு நவராத்திரியை மேலும் அழகூட்டுகிறது. பழங்காலத்திய இந்த தெய்வீக தேவிகளின் உருவப்படங்கள் காலங்கடந்த ஆபரணங்கள்- கெம்புக்கல், வைர வகைகள், முத்துக்கள் இவற்றால் செய்யப்பட்டவை- கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மிக்க வைக்கும் விலைமதிப்பற்ற ஆபரணங்களை உருவகித்து வரையப்பட்டிருக்கும் ரங்கோலிகளை இந்த நவராத்திரிக்கு முயற்சி செய்து பார்க்கத் தகுந்ததே என்றால் மிகையில்லை.

நவராத்ரி நாள் – 1
நவராத்ரி நாள் – 2
நவராத்ரி நாள் – 3நவராத்ரி நாள் – 4

நவராத்ரி நாள் – 5

நவராத்ரி நாள் – 6
நவராத்ரி நாள் – 7


நவராத்ரி நாள் – 8நவராத்ரி நாள் – 9


ரங்கோலி by Janani Raghavan
நவராத்திரி கொலு பொம்மைகள் உபயோகமற்றவையை உருப்படி செய்தல் (தேங்காய் கொட்டான்கச்சி)

புகுத்தப்படும் பண்புகள் :

உபயோகமற்ற பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் செய்தல்
 • பொறுமை
 • சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்தல்

தேவைப்படும் பொருட்கள் :

 1. கொட்டாங்கச்சிகள் - 3
 2. உப்பு காகிதம்
 3. அக்ரிலிக் பெயிண்ட்,பிரஷ்
 4. வார்னிஷ்
 5. மணி சரங்கள்
 6. பெவிகால் அல்லது பெவிகுயிக்
 7. துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி உருவங்கள் (ப்ளாஸ்டிக் அல்லது மண் பொம்மை)
 8. செய்தித்தாள்கள்
 9. தைக்கும் ஊசி

தயாராகுக :

குருமார்கள் குழந்தைகளுக்கு நவராத்திரியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். சிறு கதைகள் அல்லது தொடர்புடைய சம்பவங்கள் பற்றி சொல்லலாம்

செயல்பாடு

பொம்மையை செய்வது எப்படி?


 1. ஒரு கொட்டாங்கச்சியை எடுத்து அதன் வெளிப்புறம் நன்றாக தேய்க்கவும் உப்பு பேப்பரால் பாலிஷ் செய்யவும்.
 2. உட்புறமும் வெளிப்புறமும் வார்னிஷ் அடிக்கவும்
 3. இப்போது உட்புறம் சிவப்பு கலர் பெயிண்ட் அடித்து காய விடவும்.
 4. துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி உருவங்களை பொன் கலர் அடிக்கவும். பிறகு காய விடவும். பொம்மைகளை படத்தில் கண்டபடி தேங்காய் கொட்டாங்கச்சிக்குள் பொருத்தவும்.
 5. வெளிப்புறத்தை மணிச்சரங்களால் அலங்கரிக்கவும்.

தாங்கி - (ஸ்டாண்ட்) எவ்வாறு செய்வது ?


 1. செய்தித்தாளை உட்புறம் ஒரு நீண்ட ஊசி (ஸ்வெட்டர் ஊசி) வைத்து மெல்லிய கம்பி போல் கெட்டியாக சுருட்டிக்கொள்ளவும் (படத்தில் கண்டபடி)

 2. கெட்டியான சுருள் போல் செய்துக்கொள்ளவும் (படத்தில் காண்க)
 3. சுருளை பளிச் சென்ற கலரால் பெயிண்ட் செய்துக்கொள்ளவும்
 4. இப்போது பேப்பர் சுருள் ஸ்டாண்ட் தயார்
 5. இப்போது தேங்காய் கொட்டான்கச்சியை பேப்பர் சுருள் மேல் பொருத்தவும்
 6. நவராத்திரி கொலு பொம்மை தயார்.