விநாயக சதுர்த்தி - செயற்பாடு


மூளைக்கு வேலை !
(கீழ்காணும் விநாயகர் பெயர்களைத் திருத்தி சரியாக எழுதவும்)
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
 1. விநாயகரின் பல்வேறு நாமங்களை அறிதல்
 2. அப்பெயர்களின் பொருளையும் அறிதல்
 3. பக்தியை வளர்த்தல்
 4. புதிர் கண்டுபிடிக்கும் திறன்

விளையாட்டு :
 1. பாலவிகாஸ் குரு, போர்ட்டில் விநாயகரின் பல்வேறு பெயர்களை சற்றே கலைத்து எழுதவும்
 2. பின்னர், குழந்தைகளை அப்பெயர்களை சீர் படுத்திக் கண்டுபிடிக்கச் சொல்லவும்.
  1. தாஏதகந்
  2. திணகப
  3. யகாநாவி
  4. வராவிஷ்னேக்
  5. தம்ராலபோ
  6. டாதுண்ரவக்
  7. கமுசு
  8. ராந்த்சலபா
  9. கமதிஹாணப
  10. பாரம்ஹேபிள்ளையார்பட்டி இரகசியம்

(வாய்வழிச்செய்தி பரவுதல்)

கற்பிக்கப்படும் நற்குணங்கள் :

கவனிக்கும் திறன், உண்மை பேசுதல், குழு ஒற்றுமை.

ஆயத்தமாகுதல் :

அனைவரும் வட்டமாக நிற்கவோ உட்காரவோ வேண்டும்.

விளையாடும் முறை :

குரு வட்டத்தில் அமர்ந்தபடி தனக்கு இடப்பக்கம் அமர்ந்திருப்பவரின் காதோடு “பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் பெரிய கோவில். அங்கு கொடுக்கும் கொழுக்கட்டைப் பிரசாதம் மிகவும் ருசியாக இருக்கும். நான் நான்கு கொழுக்கட்டைகள் கொண்டுவந்திருக்கிறேன்” என்று மற்றவர்களுக்கு கேட்காமல் முணுமுணுக்க வேண்டும். அதை அப்படியே அடுத்தவரின் காதில் இரகசியமாகச் சொல்லச் சொல்லுங்கள். அதைக் கேட்டு அடுத்தவர் அதற்கடுத்தவரின் காதில் இரகசியமாகச் சொல்ல வேண்டும். அது அடுத்தவர் காதில் . . . . அதற்கடுத்தவர் காதில். . . . என்று எல்லோரும் தனக்கு அடுத்து இருப்பவர்களின் காதுகளில் இரகசியமாகச் சொன்ன பிறகுக் கடைசி நபரைக் கூப்பிட்டு அவருக்குக் கிடைத்தத் தகவலை எல்லோரும் கேட்கும்படி சொல்லச் சொல்ல வேண்டும்.

இவ்விளையாட்டு விளையாடும் பொழுது, கடைசி நபர் சொன்ன தகவலுக்கும் முதல் நபருக்கு சொல்லப்பட்ட செய்திக்கும் நிறையவே வேறுபாடு இருக்கும். செய்திகள் ஒருவரிடமிருந்து பலருக்குப் போகும் போது, இப்படித் திரிந்து போவது இயல்பே! மாறாக குரு சொன்ன செய்தி கொஞ்சமும் மாறாமல் அப்படியே கடைசி நபரிடம் சென்றிருந்தால் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் கவனமாகச் செய்தியைக் கேட்டு அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அடுத்தவரிம் சொல்லி இருக்கிறார்கள் என்று அறியலாம்.

எண்களை வைத்து விநாயகனை வரைதல்

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் புத்திரராகப் பிறந்த விநாயகப் பெருமானின் பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தி என்று 1௦ நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. நம் வாழ்வில் வரும் விக்னங்களைக் களைந்து சர்வ மங்களங்களையும் அள்ளிக் கொடுப்பவர் அந்த விக்ன விநாயகர். களிமண்ணாலான விநாயகர் சிலையை, சிலர் வீட்டில் வைத்துப் பூஜை செய்வர். சிலர் பொது இடங்களில் பந்தல் அமைத்து, அங்கு வைத்து வணங்குவர். லட்டு, கொழுக்கட்டை, அதிரசம், அவல், பொரி எனப் பல வகைப் பலகாரங்கள் தயார் செய்துப் பிரசாதமாக விநியோகம் செய்வர்.

விழாவின் பத்தாவது நாள் முடிவில் இந்தக் களிமண் சிலைகள் நீர் நிலைகளில் கொண்டு கரைக்கப்படும். சுற்றுப்புற சூழலைக் காக்கும் பொருட்டு களி மண்ணாலான விநாயகர் சிலையை வாங்குவதே சிறந்தது. இந்தப் பண்டிகை வெகு விமர்சையாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில், கலை நிகழ்சிகள் கூட ஏற்பாடு செய்யப்படும்.

விநாயகப் பெருமானின் திருவுருவத்தில் உள்ள சிறப்பம்சம்என்னவென்றால் அவருக்கே உரித்தான அந்த அழகிய யானை முகம்தான். அவர் உருவத்தை வரைவதிலும், சிற்பமாக்குவதிலும் கலைஞர்களுக்கு ஒரு தனி மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்டாகிறது. அத்திரு உருவத்தை நன்கு திருத்தமாகவும் வரையமுடியும், ஒரு சில கோடுகளைப் பயன்படுத்தி எளிய முறையிலும் வரைய முடியும்.

எண்களைக் கொண்டு விநாயகர் படம் வரைவது எப்படி என்று இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. காணுங்கள்!

அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும் விநாயகப் பெருமானின் பண்டிகையைக் கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் மனமும் புதுப் புதுப் படைப்புகளுடன் புத்துணர்ச்சிப் பெறட்டும்!

பலதானிய வினாயகர்
(கைவினைத் திறன்)


கற்க வேண்டிய பண்புகள் :
 • பொறுமை
 • செயல் திறன்
தேவைப்படும் பொருட்கள்:
 1. கணேசர் அச்சு. (தரவிறக்கம் செய்யக்கூடிய விதத்தில் வலைதளத்தில் உள்ளது
 2. ஒட்டுவதற்கு பசை (பெவிகால்)
 3. பிரஷ்
 4. ராகி, கோதுமை, கொள்ளு, ராஜ்மா, உளுந்து, பெரிய கொண்டை கடலை மற்றும் அரிசி
 5. பென்சில்
 6. ரப்பர்
 7. A4 ஷீட் / சார்ட் பேப்பர்
செயல்பாடு :
 1. வினாயகரின் படம் வெளிக்கோடு வரைந்து கொள்ளவும் அல்லது தரவிறக்கம் செய்து நகல் எடுத்துக்கொள்ளவும் (கணேசா டெம்ப்லேட் என்ற இணைப்பில் காண்க)
 2. பசையை ப்ரஷ்ஷினால் எடுத்து முகம் மற்றும் துப்பிக்கை பகுதியில் தடவவும் கோதுமையை அதன்மீது நன்கு பரத்தி கெட்டியாக இருக்க குச்சிகளைக்கொண்டு கெட்டிபடுத்தவும்
 3. அடுத்தபடியாக,கீழ்க்கண்ட பாகங்களை நிரப்பவும்
  • கொள்ளு - வயிற்றுக்கு
  • பயறு - காதுகள்
  • ராகி - கால்கள்
  • கோதுமை - கைகள்,கால்கள்,வெளிக்கோடு மட்டும் ராகியால்
  • தலையை கொண்டைகடலை மற்றும் உளுந்து
  • கண்கள் - அரிசி மற்றும் ராஜ்மா
  • விபூதிப்பட்டை - உளுந்தினால்
 4. இரண்டு நாட்களுக்கு காய விடவும்
 5. ஏதாவது காலியிடமாக தெரிந்தால் தானியத்தைக்கொண்டு நிரப்பவும்
 6. பூச்சிகளிடமிருந்து நம் பிள்ளையாரை காப்பாற்ற மேலே மெல்லிய பசையை ப்ரஷ்ஷைக்கொண்டு தடவி காயவிடவும்.
 7. சட்டமிட்டு சுவற்றில் மாட்டவும்


பிஸ்கட் பிள்ளையார்

பிஸ்கட் மற்றும் சாக்லேட் பிள்ளையார்


கற்பிக்கப்படும் நற்பண்புகள் :
 • விநாயகசதுர்த்தி கொண்டாடுதலின் முக்கியத்துவம் மற்றும் சந்தோஷத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல்
 • நாராயண சேவையின் முக்கியத்துவம்
 • படைப்பாற்றல்
தயாராவோமா :

குரு, விநாயகசதுர்த்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்க வேண்டும்
குரு ஒரு ஸ்லோகம், பஜனை அல்லது கதை சொல்லலாம்

தேவையான பொருட்கள் :
 • பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகள்
செயற்பாடு :
 1. வகுப்பில் உள்ள குழந்தைகளை எண்ணிக்கைக்கேற்றவாறு இரண்டு குழுக்களாக பிரித்துக்கொள்ளவேண்டும். அக்குழுக்களுக்குப் பெயர் வைக்கவேண்டும்
 2. குழுவில் உள்ள குழந்தைகளுக்கு விதம் விதமான பிஸ்கட்,சாக்லேட்களை வழங்க வேண்டும். குழந்தைகளையும் எடுத்து வருமாறு கூறலாம்
 3. குழந்தைகளிடம் விதம் விதமான விநாயகர் படங்களைக் காண்பித்து அவர்களை அதுபோல் சாக்லேட் பிஸ்கேட்டுகளில் உருவாக்க சொல்லவேண்டும்(இரண்டு குழுக்களும் சேர்ந்தும் செய்யலாம்,தனித்தனியாகவும் செய்யலாம்)
 4. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் செய்த விநாயகருக்குப் பூஜை செய்ய வேண்டும். பஜன் பாட்டும் பாடலாம்
 5. நிறைவாக வருவது விசர்ஜனம். அதாவது நீரில் மூழ்கடித்தல். இங்கு நாம் செய்த விநாயகர் விஷயத்தில், விசர்ஜனம் என்பது பிஸ்கேட்,சாக்லேட்களை குழந்தைகளுக்குப் பிரித்து கொடுத்தலாக இருக்கலாம். அல்லது ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்
தெய்வீகப் பேருரை

ஆனை முகத்தான் கணேசன் :

அறிவாற்றல், விவேகம் எனும் பகுத்துணரும், ஞானம் இவற்றின் சின்னமாகும். யானை எப்போதும் எச்சரிக்கையுடன் தனது சூழலைப் பற்றி மிதமிஞ்சிய உணர்வுடணும் வாழ்கிறது. அதன் ஞாபக சக்தி மிகவும் வலிமையும், ஆழமும் கொண்டது. அடர்ந்த காடுகளில் தனது கால் தடங்களை அழுத்தமாகப் பதிவு செய்து சுற்றித் திரிகிறது. அதனது ஒரு கால் தடமானது பலவிதமான வனவிலங்குகளின் சாதுவான பிராணிகளின் தடங்களை மறைத்துவிடும். அடர்ந்த காடுகளில் கம்பீரமாக அது உலவிவருகிறது. அது நடந்து சென்ற பாதை பல பிற விலங்குகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது. பிறர்க்கு உதவி செய்வதை அறியாமலே அது செல்லும் பாதை நடைபாதையாக மாறுகிறது. அதற்கு அதுவே அதன் இயல்பான ஆகிருதியே காரணம். நட்சத்திரங்களுக்கும், மனித சமுதாயங்களுக்கும், அவர்களது இல்லங்களுக்கும் கணேசர் வழிகாட்டுகிறார். இடையூறுகளை ஏற்படுத்தியும், அவ்விடையூறுகளை வெல்லும்போது அவர்களது வளம் அதிகரிக்குமாறு அருளுதவியும் செய்கிறார்.

ஆவணி மாதத்தில் சுக்ல பட்ச சதுர்த்தியன்று கொண்டாடப்படும் கணேச சதுர்த்தி வானியல் ரீதியிலும் வலுப்பெறுகிறது. அன்றிரவு யானை முகவடிவுத்தோற்றம் கொண்ட நட்சத்திரக் கூட்டம் பிரகாசமாக வானில் காணப்படுகிறது. கணேசர் புத்தியெனப்படும், சித்தியெனப்படும் சாதனை அறிவுத்திறனும், ஆற்றலும் நிறைந்த வடிவமானவர். மகாபாரத்தில் வியாச மாமுனிவர் பல்லாயிரம் வரிகளை அப்போதைக்கப்போது இயற்றும்போதே எழுதி முடிக்க கணேசரின் உதவியைப் பிரார்த்தித்தபோது அவர் உடனே சம்மத்தை தெரிவித்ததோடு, எழுதுகோலை தேடி எடுக்கத்தேவையான நேரத்தைக்கூட ஏற்காமல் தனது கூரிய தந்தங்களில் ஒன்றை உடைந்த உடனே எழுத தயாரானார்.

கணேசர் மனிதருக்கு கற்பிக்கும் பாடங்கள் :

கணேசரிடமிருந்து மனிதனுக்கு பல பாடங்களை கற்பிக்க இயலும். அதன் காரணமாகவே எல்லா வயதினராலும், அனைத்து துறையிலும் முன்னவர்களாலும் அவர் மதித்து போற்றப்படுகிறார். உணவைப் பற்றிய பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். தியாகராஜா கணேசரை மிகவும் கனிவுடன் அழைத்து சாத்வீகமான இனிப்புப் பதார்த்தங்களான மோதகம், கொழுக்கட்டை, தேங்காய் பருப்பு, பலவிதமான இனிய நற்கனிகளையும் பிரசாதமாக படைத்து மகிழ்கிறார். யானை தனது உணவாக புல்லையும் கரும்பையும், மூங்கில் குருத்துக்களையும், ஆலமரத்தின் இலைகளையும், குச்சிகளையும் உட்கொள்கிறது. கணேசரை வழிபடும் பக்தர்கள் பள்ளத்தாக்குகளிலும், பசும்புல்வெளிகளிலிருந்தும் சேகரிக்கப்படும் இலைகள், அருகம்புல், பலவித மலர்கள் ஆகியவற்றைத்தந்து வணங்குகின்றனர். அன்பு, நம்பிக்கை, அறிவாற்றல், வழிகாட்டுதல், அருளாசி வழங்கல் ஆகியவற்றின் இருப்பிடமாகக் கருதப்படும் யானை முகத்தான் கணேசரை நாம் போற்றி வணங்குகிறோம்.

கணேசருக்கு அளிக்கப்பட்டுள்ள மற்றுமொரு பங்கினையும் கவனத்திற்கொள்ளுங்கள். சிவன் நடராஜராக தனது ஆனந்தத் தாண்டவ நடனத்தை ஆடியபோது, காலத்தையும், தாளத்தையும், தன்வசப்படுத்திய கணேசர் தான் கடவுளர் அனைவருக்கும் தலைமை தாங்கி மிருதங்கம் கொட்டி தாளத்தைக் கணக்கிட்டார். எனவே மற்ற கடவுளர்களை வழிபடுமுன்னர் கணேசரை வழிபடுவது குறித்து கடவுளருமே மகிழ்ச்சி கொள்வதில் வியப்பேதுமில்லை.

மனிதன் மூவித குணப்பாங்குகளால் கட்டுப்படுத்தப்படுகிறான். முதலாவதாக ஆசை அதாவது எல்லாவற்றையும் தமக்கே உரிதாக்கிக் கொள்ள விரும்புதல். அந்த விருப்பம் நிறைவேறாத போது கோபம் தலை தூக்குகிறது.

ஆசை நிறைவேறினால் மூன்றாவதாக பேராசை. தனக்கு அதிகம் கிடைத்தது தான் மட்டுமே அனுபவித்தல் வேண்டும் என ஆசை அவனை ஆட்டுவிக்கிறது. ஒருவரது ஆசை நன்மைபயக்குமாயின் இறையருள் தானகவே கிடைக்கும். கணேசருக்கோ எவ்வித ஆசையோ, கோபமோ, பேராசையோ இல்லை. நல்லதையே நாடுவோருக்கும் இறைத்தன்மையுடைய குறிக்கோள்களை உடையோர்க்கும் அவரது அருள் எப்போதும் கிட்டுகிறது. எலி எனும் அவரது வாகனத்தை கவனியுங்கள். தனது வாசனையை நுகரும் திறனால் எலி அழிவை நோக்கி செல்கிறது. மனிதர்களும் தம் முற்பிறவிகளின் பால் மனதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்புகள், ஒருதலைசார்புகள் போன்ற வாசனைகளுக்கு அடிமைகளாகின்றனர். மனிதர்களை தவறாக வழிநடத்தி துரதிருஷ்ட நிலைக்கு இழுத்துச் செல்லும் வாசனைகளை கணேசர் அடக்கி ஆள்கிறார்.

எலி கணேசரின் வாகனம் என்ற கவுரவம் பெற்றிருப்பதால், கணேசருக்குச் செலுத்தும் வழிபாட்டில் அதற்கும் பங்கு உள்ளது. கடவுளரின் வாகனங்களாகவோ, ஆபரணங்களாகவோ. அணிகலன்களாகவோ, இறைவனின் தாசர்களாகவோ இருப்பது அப்பொருட்களுக்கு விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு விசேக்ஷமான மதிப்பையும், மரியாதையையும் தருகிறது. யானைகள், சிங்கங்கள், பருந்துகள், பாம்புகள், குரங்குகள் இவைகளும் மற்றும் பலவும் இவ்வாறு தெய்வீகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று கணேச சதுர்த்தி நாள். மற்றைய கடவுளர்களை பிரார்த்திக்கும் போதும் பிரதிக்ஷ்டை செய்து வணங்கும் போதும் கணேசரை முன்னிறுத்தி வழிபடுவது போல், இந்த கணேச சதுர்த்தி நன்னாளுக்கு தொடர்ந்து ஏனைய கடவுளர்களை வணங்கி வழிபடும் பண்டிகைகள்- நவராத்திரி, தீபாவளி, சங்கராந்தி, சிவராத்திரி என வரிசையாகப் பின் தொடர்ந்து வருகின்றன. அகிலம் முழுமைக்கும், என்றும் மாறாத உண்மைத்தத்துவத்தின் உருவமான கணேசரை மாறாத சிந்தனையுடன், தியானித்து தூய்மையான மனத்தோடு நம்பிக்கையுடன் வழிபடுவதே இன்றைய நமது கடமையாகும். மேலும் ஒப்பற்ற குறிக்கோளை அடையும் நிமித்தம் நமது தவறுகளை தடுத்து, நமது எல்லா வகையான முயற்சிகளிலும் முன்னேற்றமடைய செய்யவல்ல திருவருளைப் பெற பிரார்த்திப்பதும் நமது கடமையாகும்.

(18.09.1985 அன்று பிரசாந்தி நிலையத்தில் கணேச சதுர்த்தி அன்று பகவான் பாபா அவர்களின் தெய்வீகப் பேருரை).

களிமண் கணபதி செய்முறை

சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத விநாயகர் பொம்மையை வீட்டிலேயே செய்யலாமே!

விநாயகப் பெருமான் பிறந்த நாளையே நாம் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு 1௦ நாட்கள் வரை வழிபாடுகள் நடத்தப்படும். பின்னர் அச்சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதற்கு விசர்ஜனம் என்று பெயர். தற்காலத்தில் மக்கள் மத நம்பிக்கையோடு சேர்த்து நம் சுற்றுச் சூழலைக் காப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்திருக்கின்றனர். பல வருடங்களாகப் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உபயோகப்படுத்திப் பிள்ளையார் சிலை செய்து அதில் பல வண்ணங்கள் தீட்டி அழகு செய்வர். ஆனால், இவை நீரில் கரைக்கப் படும்பொழுது நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

மாறாக, இதே விநாயகர் சிலையைக் களிமண் அல்லது காகிதக் கூழ் கொண்டு செய்தோமேயானால், நம் நீர்நிலைகள் மாசுபடாமல் காக்கப்படும். நம் உடலுக்கும் கேடு விளைவிக்காது. அதே சமயத்தில் நீர்வாழ் உயிரினங்களும் செடி கொடிகளும் கூட நன்கு வாழ முடியும்.

இதில் ஒரு நற்செய்தி என்னவென்றால், இந்தக் களிமண் கணபதியை நாம் நம் வீட்டிலேயே செய்யலாம். எப்படி என்று நீங்கள் அறிய விரும்பினால் இதோ இந்த வீடியோவைக் காணுங்கள். நமக்கு இஷ்டமான விநாயகர் பொம்மையைக் களிமண்ணை உபயோகித்து நாமே செய்வது எப்படி என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.


காய்கறியில் கணபதிகற்பிக்கப்படும் நற்குணங்கள் :
 • விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதின் முக்கியத்துவம் மற்றும் மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுதல்
 • நாராயண சேவையின் மஹிமை
 • படைப்புத்திறன்
ஆயத்தமாகுதல் :
 • குரு, குழந்தைகளுக்கு நாராயண சேவை பற்றியும், இந்தக் காய்கறிகள் எவ்வாறு உபயோகப்படுத்தப் போகின்றன என்றும் விளக்கலாம்
 • விநாயகர் பஜனை மற்றும் கதைகளைக் கூறலாம்.
தேவையான பொருட்கள் :
 • பரங்கிக்காய், பூசணிக்காய்,முட்டைகோஸ், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகள்
 • பல் குத்த உதவும் குச்சிகள்
செயற்பாடு :
 • வகுப்பில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருத்து அவர்களை சில குழுக்களாகப் பிரிக்கவும். பின்னர் அக்குழுக்களுக்கு பெயர் கொடுக்கவும்.
 • குருமார்கள் ஒவ்வொரு குழுவில் உள்ள குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான காய்கறியைக் கொடுக்கவும். (குழந்தைகளையே வீட்டிலிருந்தும் எடுத்து வரச் சொல்லலாம்)
 • காய்கறிகள் விநியோகம் முடிந்தவுடன் குழந்தைகளை அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காய்கறிகளை நன்கு பார்க்கச் சொல்லவும்.
 • அவர்களிடம் ஸ்ரீ விநாயகப் பெருமானின் படத்தைக் காண்பித்து, அவர்களிடம் கொடுக்கப்பட்ட காய்கறிகளை வைத்து விநாயகர் உருவம் செய்யச்சொல்லவும். (குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருத்து அனைத்து குழுக்களும் இணைந்து ஒரு விநாயகர் செய்யலாம் அல்லது ஒவ்வொரு குழுவும் ஒரு விநாயகர் செய்யலாம்.)
 • இப்பொழுது குழந்தைகளுக்கு ஒரு விநாயகர் கதையோ அல்லது விநாயகர் மேல் ஒரு ஸ்துதியோ சொல்லிக்கொடுத்து குழந்தைகள் உருவாக்கிய விநாயகரை வைத்து அவர்களையே பூஜை செய்யச்சொல்லவும். (அவர்கள் உருவாக்கிய இறைவனுக்கு அர்ப்பணமாக ஒரு பஜனையும் பாடலாம்.)
 • இறுதியாக நாம் செய்ய இருப்பது விசர்ஜனம். அதாவது விநாயகர் சிலையைக் கரைத்தல். நம் செயற்பாட்டில் விசர்ஜனம் என்பது சிலையிலிருக்கும் அனைத்து காய்கறிகளையும் எடுத்து அவற்றை ஒரு நாராயண சேவை (ஏழை மக்களுக்கு அன்ன தானம்)யில் உபயோகப்படுத்துவது.