நவ வித பக்தி - செயற்பாடு

முன்னுரை

புராணங்களில் விவரித்துள்ளபடி, அது சபரியாக இருந்தாலும் சரி,மீரா பாய் ,ப்ரஹல்லாதன்,மார்க்கண்டேயன் ,ராதா அல்லது அர்ஜுனன் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் இறைவனிடம் கொண்டிருந்த மேலான பந்தம், நம் இதயத்தைத்தொட்டு, தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.அவர்கள் உண்டாலும் உறங்கினாலும், நடந்தாலும் தங்கள் பிரியமான இறைவனை இதயத்திலேயே வைத்திருந்து,ஒரு கால கட்டத்தில் தம்மையே மறந்து விட்டார்கள். இத்தகைய சிறந்த பின்பற்றத்தக்க பக்தர்களைப்பற்றி அறிவதால் நாமும் நம்முடைய இறைவனுடனான உறவை மேம்படுத்திக்கொள்ள தாக்கம் கொள்கிறோம்

பக்தி (கடவுளிடம் கொள்ளும் அன்பு)

பக்தி என்பது மிகவும் வலிமையான, தீவிரமான ஓர் உணர்வு. இந்த உணர்வைப்பற்றி விவரித்து கவிஞர்கள் பக்கம் பக்கமாக எழுதக்கூடும்
இறைவன் மீதான புனிதமான அன்பு, உள் நோக்கமில்லாத நிபந்தனையற்ற,ஆசைகளற்ற அன்பெனும் உணர்வே பக்தி எனக்கூறலாம். அது, தேனைப் பருகுபவனின் விவரிக்க முடியாத, பரவச, பேரானந்த நிலையைப் போன்றது. பக்தி என்னும் உணர்வு, இதயத்தை எவ்வாறு முழுமையாக நிறைக்கிறது என்றால் அங்கு சுகதுக்கம், விருப்புவெறுப்பு போன்றவற்றிற்கு இடம் கிடையாது. பக்தனானவன் தன்னுடைய அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து தனது அகங்காரத்திலிருந்து விடுபட்டுவிடுவான். அவனது முழுமையான நோக்கம் இறைவனுக்கும் அவரது பக்தர்களுக்கும் சேவை செய்வது மட்டுமே. பக்தி, ஒரு மனிதனை உலகாயத பந்தங்களிலிருந்து விடுவித்து, பற்றறுத்து, இறைவனின் கைகளில் ஒரு கருவியாக மட்டுமே ஆக்குகிறது. மேலும் பக்தி ஒருவனை பிறப்பிறப்பு சுழற்சியிலிருந்து விடுவித்து உதவுகிறது

நாம் மனது வைத்தால், இந்த பக்தி என்னும் பெருமிதத்தை வளர்த்து நம்மை அர்த்தமுள்ள பக்தி செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டு, மெதுவாகவும் உறுதியாகவும் இறைவனின் அருகாமையை அடைந்து அவனது இனிய கருணையை அடையலாம்

ஒன்பது விதமான பக்திகள்
ஒரு பக்தன் எப்பொழுதும் இறைவனின் லீலைகளை கேட்கலாம் (ச்ரவணம்); அவனது புகழைப் பாடலாம்(கீர்த்தனம்); இறைவனது மகிமையை சிந்தித்திருக்கலாம் (ஸ்மரணம்); இறைவனது சேவையில் ஈடுபடலாம்(பாத சேவனம்); வணங்அர்ச்சிக்கலாம் (அர்ச்சனம்);வந்தனை செய்து பணிந்திருக்கலாம்(வந்தனம்); மேலான தலைவனாம் இறைவனின் சேவகனாக இருக்கலாம்(தாஸ்யம்); இறைவனைத் தன் நெருங்கிய தோழனாக கருதலாம்(சக்யம்); அல்லது அப்பரம்பொருளிலேயே கரைந்து விடலாம்(ஆத்ம நிவேதனம்). இதுவே தெய்வீகப்பாதை
பக்தர்கள் இப்பாதையில் தமக்கு உகந்ததைத் தேர்ந்தெடுத்து இறைவனுடன் இணையலாம் பக்தி என்பது அவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிடும், மேலும் அவர்கள் எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே இருந்து விடுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் .ஏதாவது ஒரு வழியைத் தீவிரமாக பின்பற்றுவதால் நம்பிக்கையும்,இறையன்பும் வளர்கிறது

சவால்கள்

தினசரி வாழ்க்கையின் நிப்பந்தங்கள், ஒரே மாதிரியான சீரான வேலை, கவனச்சிதறல்கள் ஆகியவைகளினால் சிரமப்பட்டு, தான் தேர்ந்தெடுத்த ஆன்மீகப் பாதையில் முன்னேற பக்தனுக்கு முதலில் கடினமாகத் தோன்றும். நிறைய பேருக்கு அவர்கள் குடும்பம், நண்பர்கள் அல்லது அலுவலக சக ஊழியர்கள் இவர்களுடன் நேரம் செலவழிப்பதே முக்கியமாகத்தோன்றும்.

எனினும் ஒருமுறை இறைவனுடன் தொடர்பானபின்,இறைவன் மீதே கவனம் உள்ளவராக நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு,சரணாகதி செய்யக் கற்றபின் தெய்வீகப்பாதை, தேனாக மாறுகிறது.

பாலவிகாஸ் செயல்பாடுகள்

இந்த தலைப்பு பிரிவு 2 பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பாலவிகாஸ் குருமார்கள் ஒன்பது விதமான பக்தியை கீழ்க்கண்டவாறு கற்பிக்கலாம்

  1. ஒரு கதை மூலமாக விளக்கலாம்
  2. ஒன்பது வித பக்தியைக்குறித்த மாறுவேடம் புனையச்செய்யலாம்
  3. கையால் செய்யப்பட்ட பொம்மலாட்டம் நடத்தலாம்
  4. நவராத்திரியின் போது பாலவிகாஸ் மையத்தில் ஒன்பது விதமான பக்தியைக்குறித்த கொலு வைக்கலாம்
  5. ஒன்பது வித பக்தியைக்குறித்த குழு நாட்டியம் ஆடலாம்
  6. ஒன்பது வித பக்தி மீதான சேர்ந்திசைப்பாடல் பாடச்செய்யலாம்
  7. பக்தர்களின் பாத்திரமேற்று வேடமிட்டு, எவ்வாறு அந்த பக்தி வளர்ந்தது என்று புரிய வைக்கலாம்
  8. குழந்தைகள். குழு விவாதம் ஏற்படுத்தி, பல்வேறு மதஇலக்கியங்களிலிருந்தும்,சாயிஅருள முதங்களிலிருந்தும் ஒவ்வொரு வித பக்தியைப் பற்றியும் பற்றி உதாரணங்கள் காட்டலாம்
  9. மேலும் விவாதங்களின் போது, ஒருவித பக்தியுடன் மற்றொன்று இணைவதாக அதாவது,உதாரணத்திற்கு-

பின்குறிப்பு
பிரஹலாதன் ஸ்மரணத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தாலும், அன்னையின் கருவில் இருந்தபோது கேட்ட நாரதமுனிவரின் உபதேசமே இதற்கு ஆரம்ப கட்டம் எனவே ஸ்ரவணமும் இதனுடன் சேர்கிறது
மீராவும் ஆண்டாளும், கீர்த்தனத்துக்கு சிறந்த உதாரணங்கள். எனினும் முடிவு என்னவோ, ஆத்ம நிவேதனம்தான்
ஸ்வாமிகூறுகிறார் - உமது கண்களை அவரது சொரூபத்தின் அழகால் நிறையுங்கள் காதுகளை அவனது லீலைகளின் கதைகளால் நிரப்புங்கள். இதயத்தை அவர் காருண்யமென்னும் சுவையால் நிரப்புங்கள். எங்கும் அவரையே கண்டு, அவரால் ஈர்க்கப்பட்டிருங்கள். மலையிலும் மடுவிலும்,மனிதரிலும் ,மிருகங்களிலும், மரங் களிலும், பறவைகளிலும், பூச்சிகளிலும் அவரது சர்வ வியாபகத்தை உணருங்கள் உண்மையிலேயே அவரது தரிசனம் கண்டு புல்லரித்து போவீர்கள். அது உங்கள் வேலையை வ்ழிபாட்டினைப்போல் எளிதாக்கிவிடும்

ஸ்ரவணம்

ஸ்ரவணம் என்பது நவவித பக்தியில் முக்கியமானதும், முதன்மையானதுமாகும். இது இதிகாசங்கள், பொன்மொழிகள், மேலும் இறைவனின் சர்வ வியாபகத்தையும் அன்பையும் விளக்கும் சிறு சம்பவங்களைக்கூட செவிமடுத்தல் ஆகும்.இது இறைவனை நினைவுகூற எளிய வழியாகும். பக்தி என்பது இத்தகைய கதைகளை கேட்கும்போது இயற்கையான ஒன்றாக ஆகிவிடுகிறது.

ஸ்ரவணம் என்பதை கிரமமான சத்சங்கங்கள் மூலமாகவும் அறிஞர்களின் உபதேசங்கள் மற்றும் புனித நூல்களை சிரத்தையுடன் கேட்பதன் மூலமும் வளர்த்துக் கொள்ளலாம் இறைவனின் திருவிளையாடல்களைக் கேட்பதன் மூலம் பக்தனின் மனது தூய்மையடை கிறது

ஸ்ரவணம் என்னும் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு ஸ்ரீமத்பாகவதத்தில் சொல்லப்பட்ட பரிக்ஷித்து மஹாராஜாவின் கதை ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்

பரி‌க்ஷித்து ராஜா முக்தியடைதல்

மஹாராஜா பரிக்ஷித் ஒரு பக்திமான். ஆனால் ஒரு ப்ராம்மண சிறுவனின் சாபம் ஏற்பட்டதால் அவனது வாழ்நாள் ஏழு தினங்களாக சுருங்கி விட்ட்து. தான் இன்னும் ஒரு வாரத்தில் இறந்து விடுவோம் என்பதை உணர்ந்த பரிக்ஷித் அதற்காக தயாராகத்தொடங்கினான்

நாட்டை மகனிடம் ஒப்படைத்துவிட்டு கங்கைக்கரைக்குச் சென்றான். அங்கு குழுமியிருந்த முனிவர்களிடம் வினவினான், “என் கடமை என்ன? நான் இன்னும் ஏழு தினங்களில் மடியப்போகிறேன். நான் என்ன செய்யவேண்டும்? நீங்கள் எல்லாம் கற்றறிந்த முனிவர்கள். தயவு செய்து கூறுங்கள்.”

சில பேர் யோகப் பயிற்சி செய்யக் கூறினர், சிலர் ஞானமார்க்கம் பற்றிப் பேசினார்கள் . சுக. முனிவர் காட்டுக்குள் நுழைந்தார் .அவர் மிகவும் கற்றறிந்தவர் ஆகையால் அனைவரும் அவரது வழிகாட்டுதல்களை கடைபிடிக்க ஒப்புதல் அளித்தனர் .,பரிக்ஷித் மிகுந்த மரியாதையுடன் அவரிடம் கேட்டார், “ஓ,மேன்மை மிக்க ஆசானே!,இந்த பிறப்பு,இறப்பு சுழற்சியிலிருந்து எனக்கு விடுதலை பெறும் வழியினை கற்பியுங்கள்” இந்த வேண்டுகோளைக் கேட்டவுடன் சுகமுனிவர் பதிலிறுத்தார், “நீ அடுத்த வாரம் உனது மரணத்தை பயமின்றி எதிர்கொள்ள விரும்பினால் உடனே இறைவனின் புகழைக் கேட்கத்துவங்க வேண்டும் பிறகு அவர் இறைவனின் பிரபஞ்ச லீலைகளை விவரிக்கத்தொடங்கினார். பரிக்ஷித் அதைத் தவறாது கேட்டு முக்தியடைந்தார். ஸ்ரவணமாகப்பட்டது அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தது.

இதுபோல் ராஜா சுரதர் மற்றும் சமாதி என்னும் வைசியர் ஆகியோர்,தெய்வீக அன்னையின் புகழை மகரிஷி சுமேதஸ்ஸிடம் கேட்டு முக்தியடைந்தனர்.

கீர்த்தனம்

ஸ்வாமி கூறுகிறார், “உன்னை இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும் அனைத்தையும் கேள்.. பிறகு அமைதியாக அவற்றை என்ணிப்பார்த்து உனது மனசாட்சியின் பகுதியாக மாற்றிக்கொள், அதுவே ஸ்ரவணத்தை பயனுள்ளதாக்கும் ஸ்வாமி, பகவான் ராமர், கிருஷ்ணர் இவர்களின் கதைகள் பற்றி கோடை முகாம் போது கூறுவார். வகுப்புகள் முடிவில் பரிட்சைகள் நடத்துவார். ஆகவே மாணவர்கள் வகுப்பில் கவனம் செலுத்துவார்கள். மேலும் தங்கள் நண்பர்கள் ,வகுப்புத் தோழர்களுடன் விவாதித்து கதைகளைப் படிப்பார்கள். இவ்வாறு ஸ்வாமி மாணவர்கள் ஸ்ரவணத்தை பயனுள்ளதாக்க மறைமுகமாக உதவி செய்தார்.

கீர்த்தனம் நவவிதபக்தியில் இரண்டாவதாகக் காணப்படுகிறது.அதாவது இறைவனது பிரம்மாண்டத்தையும் சர்வ வியாபகத்தையும் புகழ்ந்து பாடுதல் இறைவனது நாமம், அவனது உருவத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்த்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதனை வலியுறுத்தியே தனதுதெய்வீக இயக்கத்தை ஒரு பாடலுடன் மேற்கொண்டார். (மானசபஜரே குரு சரணம்),
ஒரு தூய இதயத்தின் பக்தி, அற்புதங்களை நடத்திகாட்டும் என்பதற்கான எண்ணற்ற கதைகள் உண்டு.

மீராபாயியின் கதை

துறவி கோஸ்வாமி மாளிகைக்குள் நுழைந்தவுடன் அவர் கையிலிருந்தகிருஷ்ண விக்ரஹத்தால், இளவரசி மீரா ஈர்க்கப்பட்டாள். அவர் திரும்பச்செல்லும்போது அதை மீராவிடமே விட்டுவிட்டு சென்றார். மீரா அச்சிலையுடன் விளையாடுவாள் நடனம் ஆடுவாள்; கிருஷ்ணனை வழிபடுவாள். அவரது சிறுவயது கதைகளை கேட்பதை விரும்புவாள்- இவ்வாறாக நாளுக்கு நாள் இறைவன் மீதான அவள் அன்பு வளர்ந்து கொண்டே வந்தது

மீரா வளர்ந்தவுடன் அவள் குடும்பத்தினர் அவளை மிகவும் விரும்பிய ராஜா போஜ ராஜ னுக்கு மணம் செய்வித்தனர்.அவள் கடமை தவறாத மனைவி மற்றும் மருமகளாக இருந் தாள். ஆனால் வீட்டுவேலை முடிந்தவுடன் அவள் கவனம் தன் கிருஷ்ணனிடம் திரும்பி விடும். கிருஷ்ணனுக்கான அவள் பக்தி தூய்மையானதாகவும், எளிமையானதாகவும் முழுமையானதாகவும் இருந்ததால், வாழ்வில் அவள் எதிர் கொண்ட எந்த துன்பமும் அவளை பாதிக்க வில்லை. அவள் அவருடைய புகழை மனதை உருக்கும் அழகான பாடல்களாக இயற்றி எந்நேரமும் நேரமும் பாடிக்கொண்டேயிருப்பாள்
மீரா தன்னுடைய பக்தியிலேயே மூழ்கியிருந்தாலும் அவள் தன் கீர்த்தனைகளை நிறுத்தவில்லை இதுவே பக்தர்களுக்கு கீர்த்தனைகளில் மூழ்குவது எப்படி என்னும் வழியைக் காண்பித்தது, துருவன் ஆண்டாள் ,திருப்பாணாழ்வார், தியாகராஜர் மற்றும் புரந்தரதாஸர் ஆகிய பக்தர்கள் சதா சர்வ காலமும் இறை நாமத்தை உச்சரித்தே இறை அனுபவத்தைப் பெற்றார்கள்

ஸ்வாமியின் வழியே

ஸ்வாமி கூறுகிறார்-பக்தி என்பது நமது அன்பு எண்ணங்களை இறைவனிடம் தெரிவிக்கும் ஒரு ஸ்டாம்ப் .ஒரு பாடல்,அதன் அர்த்தம் தெரியாமல் அல்லது இறைவனிடம் அன்பு இல்லாமல் பாடப்படுமானால் அது ஒரு அர்த்த மற்றதே ..ஸ்வாமி எப்போதும் கூறுவார்” நான் உங்கள் பாடலை எப்போது அங்கீகரிக்கிறேன் என்றால் அதனுள் அன்பு பொதிந்திருக்கும்போதுதான்

ஸ்மரணம்

ஸ்மரணம் என்பது இடையறாது இறைவனின் அழகு, பெருமை,கருணை இவற்றை நினைவு கூர்ந்திருப்பதாகும். ஸ்மரணம் என்பது இன்பத்திலும், துன்பத்திலும், நல்லதிலும் கெட்டதிலும், ஆரோக்கியத்திலும், நோயிலும், இரவிலும் பகலிலும் ,விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும், ஆழ்ந்த தூக்கத்திலும் இறைவனின் நாமத்தை நினைத்திருப்பதாகும் ஆறு வயது சிறுவனான பக்தன் பிரஹலாதன் ஸ்மரணத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்

பிரஹலாதனின் தந்தை ஹிரண்யகசிபு, இறைவனை வெறுத்தபோது, பிரஹலாதன் இறைவன் மீது பைத்தியமாகவே இருந்தான். ஹிரண்யகசிபு, படைப்புக் கடவுளான ப்ரம்மா விடம் ஒரு வரம் பெற்றிருந்தான். ஒரு மனிதனோ அல்லது மிருகமோ அவனைக் கொல்லக் கூடாது. இரவிலோ, பகலிலோ அவன் இறக்கக்கூடாது. உள்ளேயோ,அல்லது வெளியிலோ .அஸ்திரமோ(கையில் வைத்திருக்கும் ஆயுதம்)அல்லது ஸஸ்திரமோ (வெகு தூரத்திலிருந்து ஏவக்கூடியது) அவனைக் கொல்லக்கூடாது. அவன் வானத்திலோ அல்லது பூமியிலோ மரணிக்கக்கூடாது
இப்படிப்பட்ட ஒரு வரம் அவன் நிரந்தரமானவன் என்ற எண்ணத்தை அவனிடம் தோற்று வித்து, அவனை அராஜகமானவனாக மாற்றி விட்டது. தன் ராஜ்ஜியத்தில் உள்ள மக்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டான். கடவுளரின் கோவில்கள் அனைத்தையும் இடித்து விட்டான். இறைவனை வணங்கியவர்கள் சிறையிடப்பட்டு இம்சிக்கப்பட்டனர்.
பிரஹலாதன் பக்தி என்னும் படிப்பை தாயின் கருவிலிருக்கும்போதே கற்றுக் கொண்டான் .அது வேறு யாரிடமிருந்தும் அல்ல.. நாரதமுனிவரிடமிருந்தே தான். ஹிரண்யகசிபு. ,சிறுவனான பிரஹலாதன் இறைவனைப்பற்றி பேசுவதைக்குறித்து ஆச்சர்யமடைந்தான்

ஆத்திரப்பட்டான்.அவன் இறைவனைப்பற்றி பேசுவதே குற்றமாகக்கருதினான். ஹிரண்யகசிபு, பிரஹலாதனிடம் தன்னையே கடவுளாக பாவிக்கும் படியும் , தன் சொந்தக் கருத்துக்களை உபதேசமாக ஏற்கும்படியும் கூறினான் . பிரஹலாதன் எதற்கும் மசியவில்லை.மாறாக தன் தந்தையாரை திருத்த முயன்றான். இது அவனை கோபப்படுத்தியது. பிரஹலாதன் திடமான மனதுடன் தன் மனசாட்சி சொல்படி தன் இறைபக்தியைத் தொடர தீர்மானித்தான்

சொந்த புதல்வனைத் தவிர அனைத்துலகும் ஹிரண்யகசிபுவுக்கு. பயந்து பணிந்தது, ஹிரண்யகசிபு, நகைப்பிற்கிடமாகும் இவ்விஷயத்தைக் குறித்து பயந்தான். தன் பிரஜைகள் தன்னைக்கண்டு பயப்படுவதை நிறுத்திவிடுவார்களோ என நினைத்தான்

ஆகவே, தன் சொந்த மகனையே கொல்ல தீர்மானித்தான். கள் குடித்த யானையால் மகனை இடறச்செய்தான். ஆனாலும் பிரஹலாதன், அது பற்றி கவலை கொள்ளாமல் தியானத்தில் இருந்தான். அதிசயத்திலும் அதிசயம்! தாக்க வந்த யானைகள் அவனருகில் வந்ததும் அமைதியடைந்து அவன் காலடியில் அமர்ந்தன. இறைவன் தனக்குப் பிரியமானவர்களை இப்படித்தான் காப்பாற்றுகிறார்.

பிரஹலாதன் அருந்துவதற்கு விஷம் கொடுக்கப்பட்டான். ஆனால் அது அமுதமாக மாறியது! மலை உச்சியிலிருந்து வீசியெறியப்பட்டான். ஆனால் பிரஹலாதன் எதையும் தன் தியானத்திற்கு இடையூறாக எண்ணவில்லை. இறைவன் மலை அடி வாரத்தில் தோன்றி அவனைப் பிடித்தார். ப்ரஹலாதனை, தீயினால் சுடப்படாதவரம் வாங்கியிருந்த அவனது அத்தை ஹோலிகா மடியில் அமரச்செய்து தீயில் அமர்த்தினர். ஆனால்,ஐய்யகோ! ஹோலிகா தீக்கிரையானாள்,பிரஹலாதன் பிழைத்தான்

கோபத்திலும்,வெறுப்பிலும் இருந்த அரசன், தன் அரசவையில் இருந்த ஒரு தூணை இடித் தான். இடிபாடுகளிலிருந்து அதி பயங்கரமான ஒரு உருவம் கிளம்பியது.பாதி மனிதன் ,பாதி சிங்கம் .இறைவன் ஹிரண்யகசிபுவின் அதி புத்திசாலித்தனத்தை வென்று அவனை அழிக்க எண்ணங்கொண்டு இந்த வடிவத்தை எடுத்தார்.

இறைவன் அவனை இழுத்துச்சென்று மாளிகையின் வாசல்நிலைப்படிக்குச் சென்றார்.அது உள்ளும் அல்ல,புறமும் அல்ல.அவனை இழுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டார். அது வானமும் அல்ல,பூமியும் அல்ல..அப்போது பொழுது சாயும் நேரம். இரவுமல்ல, பகலுமல்ல அவனைக்கொல்ல .தன் நகங்களையே பயன்படுத்தினார், அது அஸ்திரமும் அல்ல,ஸஸ்திரமுமல்ல.இவ்வாறாக தன் வார்த்தையையும் காப்பாற்றினார், தன்னையே எப்போதும் நினைத்திருந்த அருமை பக்தனையும் காப்பற்றினார்.

நாமஸ்மரணையின் அருமையை உணர்ந்து சுவைத்தவர்கள் உதாரணமாக, நாரதர், சபரி, அம்பரீஷன் ,பிரஹலாதன் ,சூர்தாசர், துளசிதாசர்,கபீர், பத்ராசல ராமதாசர், திரௌபதி ஜயதேவர் ,கௌரங்கர் ,துக்கா ராம் பூசலார் நாயனார் போன்றோர். எத்தனையோ பேர், நாமத்தின் சுவையை அருந்தி நாமாமிருதத்தினைப் பருகி வீடுபேறு பெற்றவர்களாவார்கள்

ஸ்வாமியின் வழியே

நீ கடவுள் என்று நினைத்தால் கடவுள்.தூசு என்று நினைத்தால் தூசு எனவே நாம் எப்போதும் பகவானை,அவரது லீலைகளை நினைத்து” நமது நேரத்தை செலவிடவேண்டும். அவரது வாக்கினை எண்ணி தியானம் செய்யவேண்டும்.

ஸ்மரணமாகப்பட்ட்து அனைத்து எதிர்மறைகளையும் உருக்கி நமது மனதை அழகால் நிரப்புகிறது.அதுவே சாயி

பாத சேவனம்

பாதசேவனம் என்பது இறைவனின் திருவடிகளை அல்லது பாதுகைகளை (புனித பாதுகைகள்) வணங்கி சேவை செய்தல்

ஒருவரின் காலடிகளைத் தொடுதல் என்பது மரியாதையைக் குறிக்கும் எனவே தான் இந்திய கலாச்சாரப்படி நாம் நமது பெற்றோர்,பெரியோர் பாதங்களை மரியாதையைக் குறிக்கும் விதத்தில் தொடுகிறோம்

ஒருவரின் காலடிகளைத் தொடுதல் என்பது மரியாதையைக் குறிக்கும் எனவே தான் இந்திய கலாச்சாரப்படி நாம் நமது பெற்றோர்,பெரியோர் பாதங்களை மரியாதையைக் குறிக்கும் விதத்தில் தொடுகிறோம்

இறைவனின் பாதங்கள் மிக மென்மையானவை,அழகானவை,அதனால் தான் அவை “பாத பங்கஜம்”, “பாத தாமரைகள்” என்றும் அறியப்படுகின்றன . இறைவனின் திருவடிகளை வெறுமனே நினைத்துக்கொண்டிருத்தலே பக்தர்களை ஆழ்ந்த அன்பிற்கும் இறையனுபவத்திற்கும் ஏங்கவும் செய்துவிடும் மேன்மையான தேவர்களும்கூட குட்டிகிருஷ்ணன் பிருந்தாவனத்தின் காடுகளில் அலைந்து திரிந்து தனது பாதச்சுவடுகளை மண்ணில் பதித்தது கண்டு பரவசப் பட்டனர். மேலும் கிருஷ்ணனின் ஆப்த நண்பர்களான கோபிகள், அந்த பாததூளிகளை தங்கள் தலையிலும் இதயத்திலும் பூசிக்கொண்டு பரவசத்தில் தங்களையிழந்தனர்.
பாதசேவனத்தில் பக்தியைப் படம் பிடிக்கும் ஒரு அழகான கதை.வேறு யாரைப் பற்றியும் அல்ல.பகவான் விஷ்ணுவின் தேவி ,லக்ஷ்மியைப்பற்றித்தான் இறைவனின் பாதங்கள் மிக மென்மையானவை,அழகானவை,அதனால் தான் அவை “பாத பங்கஜம்”, “பாத தாமரைகள்” என்றும் அறியப்படுகின்றன . இறைவனின் திருவடிகளை வெறுமனே நினைத்துக்கொண்டிருத்தலே பக்தர்களை ஆழ்ந்த அன்பிற்கும் இறையனுபவத்திற்கும் ஏங்கவும் செய்துவிடும் மேன்மையான தேவர்களும்கூட குட்டிகிருஷ்ணன் பிருந்தாவனத்தின் காடுகளில் அலைந்து திரிந்து தனது பாதச்சுவடுகளை மண்ணில் பதித்தது கண்டு பரவசப் பட்டனர். மேலும் கிருஷ்ணனின் ஆப்த நண்பர்களான கோபிகள், அந்த பாததூளிகளை தங்கள் தலையிலும் இதயத்திலும் பூசிக்கொண்டு பரவசத்தில் தங்களையிழந்தனர்.
பாதசேவனத்தில் பக்தியைப் படம் பிடிக்கும் ஒரு அழகான கதை.வேறு யாரைப் பற்றியும் அல்ல.பகவான் விஷ்ணுவின் தேவி ,லக்ஷ்மியைப்பற்றித்தான்

லக்ஷ்மி தேவி

தேவர்களும் அசுரர்களும் தாங்கள் அழியாதிருப்பதற்காக, அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தபோது பதினான்கு விதமான செல்வங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. இன்னும் அவர்கள் கடைந்து கொண்டேயிருந்தபோது லட்சுமிதேவி தோன்றினாள் சமுத்திரத்தின் மகளான லட்சுமி தேவி சௌந்தர்யவதி. அழகான ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவள்,. அவள் கையில் ஒரு வைஜயந்தி மாலை –வைஜயந்தி பூக்களால் (ஒருவிதமான தாமரை) மாலை கட்டப்பட்டது இருந்தது. அவளைப்பார்த்த உடனேயே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அவளை மணந்துகொள்ளும் ஆசை வந்தது ஆவல் ததும்ப அவளைப் பார்த்துக் கொண்டே யிருந்தனர், அவள் யாரைத் தன் மணாளனாக தேர்ந்தெடுக்கப்போகிறாள் என்று.. தேவி சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆனால் அவள் மனம் எவரிடமும் பதியவில்லை.. பிறகு, உலகவிஷயங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவைப் பார்த்தாள் அவளைப்பார்க்கக் கூட, முயலவில்லையெனில் வேறு என்னதான் ஆசை இருக்கப்போகிறது?அதனால் என்ன? தன்னுள்ளேயே எப்பொழுதும் சந்துஷ்டியுடனும்,பேரானந்தத்துடனும் இருப்பவர் அவர்.. உலக விஷயங்களில் பற்றற்று இருந்த அவரே தனக்கு உரிய மணாளன் என எண்ணினாள் எனவே அவரருகில் சென்று மாலையிட்டு மணானாக ஏற்றுக்கொண்டாள்.

லக்ஷ்மி தேவி எப்போதும் பரமாத்மாவின் திருவடிசேவை செய்வதையே பார்க்கிறோம் .ஸ்ரீமத்பாகவதத்தில்(1.11.33) குறிப்பிடப்பட்டது போல் அதிர்ஷ்ட தேவதையானவள் அமைதி யற்ற,அசைந்துக்கொண்டேயிருக்கும் இயல்பைப் பெற்றவளாயினும் பரமாத்மாவின் திருவடி களை விட்டு நீங்குவதேயில்லை- “
லக்ஷ்மி தேவி செல்வம் மற்றும் நல்லதிர்ஷ்டம் இவற்றின் வடிவமானவள்.சலனசித்தம் கொண்டவள் இவை இரண்டும் மிகவும் நிலையற்றவை, தற்காலிகமானவை. அழியக் கூடியவர் லக்ஷ்மி தேவியைக் கட்டுப்படுத்தமுடியாது.அனேகர் இதை முயற்சித்து தன் வாழ்நாளை வீணாக்கினர். பரமனின் பக்தியுள்ள சேவகரான,அதிர்ஷ்ட தேவதை ,அவரு டைய ஆசிகள் இல்லாமல் தன்னுடைய பொக்கிஷத்தை வழங்க முடியாது.

இவ்வாறு பாத சேவனம் ஒரு ஆழ்ந்த ஆன்மீகபடிப்பினையை வழங்குகிறது. லட்சுமி செல்வத்தின் அதிபதியாக இருந்தாலும்,அனைத்து வளங்களின் முதன்மையானவளாக இருந்தாலும், இறைவனின் பாதசேவனம் செய்வதே அனைத்து செல்வங்களிலும் உயர் வானது என்பதை உலகத்துக்குக் காட்டுகிறாள்..தற்காலத்தில் நாம் ஹரியை(மேலானவர்)விட ஸ்ரீ(செல்வம்)யைத் தான் வழிபடுகிறோம்,. இறைவனின் பாதங்களை வழிபட்டால், செல்வம் தானாகவே வந்து சேரும் என்பதை நாம் உணரவில்லை

பரதன், கோபிகைகள்,(சீடர்)ஆகியோரின் பக்தி பாதசேவனம் என்பதற்கு தகுந்த உதாரணமாகும்

ஸ்வாமியின் வழியே

பாதசேவனம் என்பது இந்த ஸ்தூல உடல் மூலம் இறைவனுக்கு செய்யும் நமஸ்காரம் என்று தவறுதலாக புரிந்துக் கொள்ளக்கூடாது.இது சற்று விரிவானதாகும்.பருஉடல் மற்றும் மனதினை இறைவன் திருவடிகளில் சரணாகதி செய்து முழு மனத்துடன் இறைவனின் பாத கமலங்களுக்கு, நேரம் காலம் இவற்றை அனுசரித்து தன்னை சேவையில் ஈடுபடுத்திக்கொள்வதாகும் ஸ்வாமி கூறுகிறார்
ஏழை எளியோர்க்கு பாமரர்க்கு நோயுற்றோர்க்கு ஆதரவற்றோர்க்கு சேவை செய்தலே பாத பூஜை. கடவுள் அதனை,வரவேற்கிறார்

அர்ச்சனம்

எவனனொருவன் எனக்கு பக்தியுடனும் தூய மனதுடனும்., ஒரு இலை, பூ, பழம் அல்லது சிறிதளவு தண்ணீர் இவற்றை சமர்ப்பிக்கிறானோ, அதனை பக்தியென ஏற்றுக் கொள்கிறேன் (பகவத் கீலத 9-26)

அர்ச்சனம் என்பது முமுமையான பிரசாதம், அது பிரார்த்தனையாகவோ, ஆராத்தியாகவோ, உணவு, பூக்கள், அல்லது ஆடைகளாகக்கூட இருக்கலாம். அன்பு என்பது அளிப்பதால் தான் வெளிக்காட்டப்படுகிறது. பக்தனின் இதயத்தில் ஆண்டவன் மீதான அன்பு வளரும்போது, அவன் இயற்கையாகவே, மிகச்சிறந்த்த்தையே அளிக்க விரும்புவான். அதனால் பக்தன் மனநிறைவும், உந் துதலும் அடையாப் பெறுகிறான். அவ்வகையில், ராஜா ப்ரிதுவால் அளிக்கப்பட்ட அர்ச்சனம், மிகுந்த உயர்ந்த்தாக கருதப்படுகிறது

ராஜா ப்ரிது
அவன் ஏறக்குறைய நூறு அஸ்வமேத யாகங்கள் செய்துவிட்டான், ஒரு இந்திரனாகவும் ஷதக்ரதுவாகவுமே ஆகிவிட்டான். பகவான் அவர் முன்னிலையில் ப்ரசன்னமானபோது, நூதனமான வரம் ஒன்று கேட்டான்." விதத்ஸ்வகர்ணயுதாமேஷா மே வராஹ:" தங்களுடைய உத்தம ஸ்லோகங்கள் மற்றும் குணானுகீர்த்தனங்களையும் (புகழ்) ஸ்ரவனம் செய்ய எனக்கு 500 ஆண்டுகள் கொடுங்கள்" என்று கேட்டு வரம் பெற்றான். பிறகு தன்னுடைய ராஜ்ஜிய பரிபாலனத்தைத் தன் புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டு, ப்ரிது மஹராஜ் தபோவனம் சென்று தனியாக தபஸ் செய்ய ஆரம்பித்தார். தபஸ் என்பது அர்ச்சனா பக்தியின் வடிவமே, இந்த வழிபாட்டு முறையில் ப்ரிது ஒரு வித்தியாசமான அங்காரச்ச்னையை செய்தார்" தன் ஒருவொரு கர்மேந்திரியத்தையும் உபயோகித்து வழிபட்டார். நேத்ரகமலம் சமர்ப்பயாமி (என் கமல நயனங்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன்). "(என் கர்ண கமலங்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன் இதயகமலம் ஸமர்ப்பயாமி"): இவ்விதமாக பிரித்து தனது ஒவ்வொரு அங்கங்களையும் தாமரையாக பாவித்து இறைவனுக்கு அர்ப்பணித்தார் அர்ச்சனை வித பக்தியின் ஒரு அதிசயமான விஷயம் என்ன வென்றால் அதில் இதுவரை செல்லப்பட்ட; நான்குவிதமான பக்திகளும் சம்பந்தப்படுவதுதான். அதாவது, இறைவனைப் பற்றிகே கேட்டல், அவன் பெயரை உச்சரித்தல், இடையறாது நினைத்தால், மேலும் அவனது பாதகமல சேவை செய்தல். ஆகவே இது , இறைவனின் அருளைப்பெற நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கக்கூடிய மிகக் சிறப்பான பக்திமுறையாகும். கிராமமான அர்ச்சனம் ஓரு தெய்வீக சூழ்நிலையை வீட்டில் உண்டாக்குகிறது. நம் இதயத்தையும், வீட்டையும் அமைதியாக வைக்கிறது.

கண்ணப்ப நாயனார், சாக்ய நாயனார் மற்றும் ருக்மினி (ஸ்ரீ கிருஷ்ணனின் மனைவி) ஆகியோரும் அர்ச்சனை வித பக்திக்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கூறலாம்

ஸ்வாமியின் வழியே

பகவான், நம்முடைய தீயகுணங்கள், உணர்வுகள், எண்ணங்கள், சொற்கள், செயல்கள் இவற்றை சமர்ப்பணம் செய்யவே ஊக்கப்படுத்துகிறார்.

இந்த தீய குணங்களை அவரது திருவடிகளில் வைத்தால், நமது மனங்களை, நற்குணங்களால் நிரப்புகிறார். நம் இதயத்தோட்டத்தில் அன்பினால் விளைவிக்கப் பட்ட அழகான மலர்காளாலேயே தன்னை வழிபட விரும்புகிறார். இவையே உண்மையில் அவரை மகிழ்விக்கும் மலர்கள்.

அஹிம்ஸை (துன்புறுத்தாது இருத்தல் என்னும் மலர்), இந்திரிய நிகரஹாஷம்(புலனடக்கம் என்னும் மலர்), க்ஷமா (பொறுமை, மன்னித்தல், சகித்தல் என்னும் மலர்), சாந்தி (அமைதி என்னும் மலர்), தபஸ் (தவம் என்னும் மலர்), தியானம் (தெய்வீக உணர்வு என்னும் மலர்), சத்யம் (உண்மை என்னும் மலர்). இந்த அஷ்ட புஷ்பங்களைத்தான் நாம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்வாமி விரும்புகிறார்

வந்தனம்

வந்தனம் என்பது இறைவனுக்கு செய்யும் மேலான மரியாதை அல்லது பிரார்த்தனை மேலும் மற்றொரு விதமான பக்தி.இவ்வழியில் ஒரு பக்தன் இறைவனின் தனக்கு பிடித்தமான வடிவத்தை எங்கும்,எவ்வுயிரிலும் எப்பொருளிலும் காண ஆரம்பிக்கிறான்

நாம் கூப்பிய கரங்களுடன் இறைவனை வணங்குகிறோம். நாம் இரு கரங்களையும் கூப்பும்போது அது எதைக் குறிக்கிறது? ஸ்வாமி விளக்குகிறார்”உங்கள் கரங்களை மடக்கி ஒன்றாக சேர்க்கும்போது, அவற்றில் உள்ள பத்து விரல்கள் உங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள்,ஞானேந்திரியங்கள் இவற்றின் செயல்கள் அனைத்தையும் இறை வனிடம் சமர்ப்பிப்பதாக உணர வேண்டும்

மேலும் இது முழுமையான சரணாகதியை குறிக்கிறது. கூப்பிய கரங்கள் நமக்கு நம்மு டைய உண்மையான இயல்பையும் நினைவூட்டுகிறது. எவ்வாறு? வலது உள்ளங்கை, எங்கும், நிறை மேலான பரம்பொருளாம்அந்தராத்மாவை- நாம் கடவுள் என்பவரைக் குறிக்கிறது. “தத்” அல்லது “அது” என்கிறது உப நிஷத்துக்கள். இடது உள்ளங்கை “த்வம்” என்பதைக் குறிக்கிறது.அதாவது நான் –வரையறைக்குட்பட்ட ஜீவாத்மா. நம்முடைய ஆன்மீக பயிற்சிகள் அனைத்தின் நோக்கமும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைவதே என்பதை நினைவூட்டுகிறது. தத்வமஸி, நீயே அது. அல்லது நானும் அவரும் ஒன்றே

உண்மையான பிரார்த்தனைகளால் அக்ரூரர் போன்றோர் இறைவனைக் கண்டு கொண்டனர். அக்ரூரரின் பிரார்த்தனை பற்றி ஸ்ரீமத்பாகவதத்தில் விரிவாக சொல்லப் பட்டுள்ளது

ஸ்காந்தம் பத்தில் ஒன்று கீழே வழங்கப்பட்டுள்ளது. “ஓ.வசுதேவரின் புதல்வரே (கிருஷ்ணா). எவருள் அனைத்துயிர்களும் உறைகின்றனவோ அத்தகைய உமக்கு என் வணக்கங்கள் உரித்தாகுக. ஓ, மனத்திற்கும் புலன்களுக்கும் ,முதன்மையானவரே, மீண்டும் என் மரியாதைகளை உரித்தாக்குகின்றேன். ஓ தலைவா,உன்னிடம் சரண் புகுந்தஎன்னை காப்பாயாக!”-அக்ரூர்ர்)ஸ்ரீமத் பாகவதம் 10.40.30
அக்ரூரர்- பகவான் கிருஷ்ணனின் தாய் மாமன்

.

பகவான் கிருஷ்ணனின் தாய் மாமனான அக்ரூரர், கம்சனின் அரசவையில் இருந்தார். கிருஷ்ணனைக் கொல்லும் பொருட்டு அழைத்துவர, மதுராவிற்கு தூதுவராக அனுப்பப் பட்டார். அக்ரூரர் பகவான் கிருஷ்ணரைச் சந்திக்க இதை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதி பிருந்தாவனத்தில் அவரை சந்திக்கும் அந்த ஏக்கத்திலேயும் பக்தியிலும் மூழ்கிக் கிடந்தார் பிருந்தாவனத்தை அடைந்த உடனேயே இறைவனது திருவடிச் சுவடுகளை கண்டவுடன் தேரிலிருந்து குதித்து இறங்கினார். அந்த புனித மண்ணை வணங்கினார். பாதச்சுவடுகளை கண்டதற்கே அவரது இதயம் திருப்தியால் நிரம்பியது .கம்ஸனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்துவிதமான பயம் மற்றும் துன்பத்திலிருந்தும் விடுதலை அளிக்கும்படி அவர் மனமுருக வேண்டினார். இவ்வாறு வந்தனம் என்னும் பக்தி வழியிலே அவர் இறைவனை அடைந்தார்.
குந்தி,திரௌபதி, கஜேந்திரன் என்னும் யானை ஆகியோர் இத்தகைய பக்தியை இறைவனிடம் சமர்ப்பித்தனர்

ஸ்வாமியின் வழியே

2001 ஆம் வருடம் பிரசாந்தி நிலயத்தில் நடைபெற்ற பாலவிகாஸ் மாநாட்டில் ஸ்வாமி கூறுகிறார்” என்னை உங்கள் இதயத்தில் காண்பீர்களாக,மேலும் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் காண்பீர்களாக. உங்கள் அனைத்து ஆன்மீகப் பயிற்சி களின் இறுதி இலக்கானது,அனைத்து படைப்பிலும் இறைவனைக்கண்டு சேவை செய் வதாக இருக்கட்டும்.அனைவரிடத்தும் இறைவனைக்காண்பதும் நேசிப்பதுமே உண்மை யான பக்தியாகும். நாம் நமது வாழ்க்கையை ஸ்வாமி கூறுவது போல்” சேவையில் கரங்களும்,கானகத்தில் எண்ணங்களுமாக” வாழ்வோமாக

தாஸ்யம்

தாஸ்யம் – தாஸ்ய வகை பக்தியில் பக்தன் தான் இறைவனுக்கு மட்டுமன்றி அவனுடைய அடியார்களுக்கும் சேவகனாகத் தன்னைக் கருதுகிறான். தாஸ்யம் என்பது இதய பூர்வமாக இறைவனுக்கு சேவை செய்ய விழைவதாகும்
ஸ்வாமி கூறுகிறார்” பக்தி, தாசோஹத்திலிருந்து ஆரம்பிக்கிறது, தாசோஹம் .தான் கடவுளின் சேவகன் என்று நீ எண்ண ஆரம்பிப்பதிலிருந்து முன்னேறி ஸோஹம் நிலைக்கு உயர்ந்து நீ கடவுளுடன் ஒன்றி விடுகிறாய்

தாஸோஹம், பிரியமானவருக்கு சேவை செய்வதன் மூலம் வெளிப்படுத்தப் படுகிறது .ஏனெனில் இதுவே அதிகபட்ச மகிழ்ச்சியை பக்தனுக்குத் தருகிறது.ஆனால்,அதுவே சேவை யல்ல.அது ஒரு எண்ணம். அது பக்தர்களின் சேவைக்கான விருப்பமாகும். பக்தன் தான் இறைவனின் கைகளில் ஒரு கருவி என்றே கருதுகிறான். அவன் எல்லா சூழ்நிலைகளும் நேரடியாக இறைவனிடமிருந்தே வருவதாக நினைக்கிறான். தன் உடலிலிருந்தும் மனதிலிருந்தும் வரும் செயல்பாடுகள் அனைத்தும் இறைவனின் பணியே, அவனது அருளே என்று கருதுகிறான்

ராமாயணம், சொந்த சேவைக்கு ஒரு அசாதாரண உவமையைக் காட்டுகிறது. ராமன் அனுமனுக்கு எந்த அறிவுறுத்தல்களும் சொல்லவேண்டியதிருக்கவில்லை அல்லது முடி வில்லாத ஊக்குவிப்பையும் கொடுக்கவில்லை. அனுமனின் தூய அன்பால் ஈர்க்கப்பட்டார் அனுமன் எப்போதெல்லாம் ராமனுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததோ,அதை ஒரு போதும் தவற விட்டதில்லை.அனுமனின் பக்தியை இந்த இரண்டு பத்திகளில் சுருக்குவது என்பது இயலாத காரியம்.சில முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன

அனுமனின் பக்தி

ஒருசமயம்,அனுமான் அப்போது இலங்கை சென்றிருக்கவில்லை. அனைவரும் நில வொளியில் படுத்துக்கிடந்தனர், ஸ்ரீ ராமரும் சயனத்திலிருந்தார்.எப்படி? அங்கு மெத்தை யில்லை.மண்ணே இருந்தது. ராமர் ஜடாமுடியுடன் ஒரு யாத்ரீகரைப்போல் இருந்தார். லக்குமணன் அமர்ந்திருக்க ராமனின் தலை அவன் மடியில் இருந்தது .சம்பாஷணை நடந்துக்கொண்டேயிருந்த போது சுற்றியிருந்தவர்களிடம் ராமர் ஒரு கேள்வி கேட்டார். சுக்ரீவனிடம் கேட்டார், “சுக்ரீவா, நிலவொளியில் கரும்புள்ளியைப் பார்த்தாயா அதுபற்றி என்ன நிணைக்கிறாய்?” சுக்ரீவன் அது தனக்கு தெரியாது என்று பதிலிருத்தான்.அடுத்து ராமர் ஜாம்பவானைக்கேட்டார். ஜோதிடம்,சூழலியல்,பூகோளம் ஆகியவற்றில் தேர்ந்திருந்த ஜாம்பவான், அது நிலவின் மேற்பரப்பில் உள்ள மலைகளின் நிழல் என்று பதில் கூறினார். அனைவரிடமும் ராமர் இக்கேள்விக்கணையை வீசினார். லக்ஷ்மணனின் முறை வந்தபோது, அவர், “அண்ணா அது ஒரு மான் போலும்,அல்லது ஏதோ ஒரு மிருகம் போலும் தோன்றுகிறது” என்றார். ராமரின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்த அனுமனின் முறை வந்த போது அவர் கூறினார். “ராமா, நான் எதுவும் புதியதாக பார்க்கவில்லை. நீங்கள் படுத்துக்கொண்டிருப்பதால்,உங்கள் முகமே,தெளிந்த நிலவில் பிரதிபலிக்கிறது.எனவே தங்களின் முகமே நிலவு என்னும் கண்ணாடியில் பிரதிபலிக்கக் காண்கிறேன். இவ்வாறு அனுமான் அனைத்திலும் ஸ்ரீ ராமரது பெயரையும் ,உருவத்தையுமே கண்டார். எந்நேரமும் ராமசேவையிலேயே இடையூறின்றி ஈடுபட்டிருந்தார்

அனுமான் இலங்கையை அடைந்தபோதும், பிடிபட்டு அரக்க அரசன் ராவணனின் சபைக்கு அழைத்து வரப்பட்டபோதும், தன்னை ராமனின் சேவகன் என்றே அடையாளப் படுத்திக் கொண்டார்., ராவணன் அவரிடம் இவ்வாறு கேள்வி கேட்டான், “மரியாதையற்ற மந்தியே ,சொல்,யார் நீ?” கண்ணிமைக்காமல் அனுமான் பதில் கூறினார் .தாஸோஹம் கோஸலேந்த் ரஸ்ய, “ நான் ராமனின் சேவகனாவேன்” நான் கௌசல்யாமாதாவின் உன்னத புதல்வன் ஸ்ரீ ராமனின் சேவகன். அனுமனுக்கு இன்னும் எவ்வளவோ அடையாளங்கள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.அவர் காற்றின் கடவுளான வாயுதேவனின் புதல்வன். அவர் சூரியனின் சீடர். கிஷ்கிந்தை மன்னன் சுக்ரீவனின் முதன் மந்திரி, ஆனால் ராவண னால் கேள்வி கேட்கப்பட்டவுடன் இதில் எதையும் அவர் சொல்லவில்லை. மாறாக ஸ்ரீராமனின் சேவகன் என்பதையே பெருமையுடன் கூறிக்கொண்டார்.அவருக்கு ஸ்ரீராமரிடம் இருந்த பக்தியே தாஸ்யம் என்பதை விளக்குகிறது.உலகத்தில்; அவருக்கிருந்த அனைத்து உறவுகளை விடவும் ராமரிடம் அவருக்கிருந்த பந்தமே மிக அன்பானதாக அவர் கருதி னார். ஆகவே இப்படிகூறினார்

அயோத்திக்கு திரும்பியவுடன் ராமரின் சகோதரர்கள் அனைவரும், ராமருக்கு செய்ய வேண்டிய பணிகளை தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர், அனுமாருக்கு எந்த பணியையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் எப்போதும் சேவைக்குத் தயாராக இருக்கும் அனுமான் தன் அருமை இறைவன் ராமனுக்குசேவை செய்ய ஒரு வழியைக்கண்டார். அவர், ராமர் கொட்டாவி விடும்போது விரலை சொடுக்கு போடும்வேலையை எடுத்துக் கொண்டார். சேவையில் இடையறாத அவரது உற்சாகத்தைக் கண்டு மகிழ்ந்த ராமர் அவருக்கு மோக்ஷத்தைக்கூட வழங்கினார். ஆனால் அதனை அனுமன் மறுத்துவிட்டார். அவருக்கு,தன் இறைவனது அருகாமையே உடலை புனிதப்படுத்தும். சீதா மாதாவின் தரிசனமே மோக்ஷத்தை விட மேலானது என்பதாகும் அவர் கூறினார் “என் அன்பான இறைவா, நீங்கள் விரும்பினால் இந்த உலகியல் இருப்பிலிருந்து என்னை விடுவிக்க முடியும் அல்லது உங்களிடம் இரண்டறக் கலக்கும் கௌரவத்தை நல்க முடியும். ஆனால் இவை எதையும் நான் விரும்பவில்லை தங்களுடனான என்னுடைய பந்தத்தை, அதாவது தலைவர்-சேவகன் என்ற உறவை குறைக்கும் எதையும் என் விடுதலைக்குப்பிறகும் கூட நான் விரும்ப வில்லை .அன்னை சீதா அனுமனை சிரஞ்சீவி என்றழைத்து நித்தியத்துவத்தை வழங்கினார்.. ராமாயண தியானஸ்லோகத்தில், “எங்கெல்லாம் ராமாயணம் சொல்லப் படுகிறதோ அங்கெல்லாம் ராட்சசர்களை அழித்த மாருதி தன் கூப்பியகரங்களுடன், கண்கள் ஆனந்த கண்ணீர் சொரிய அமர்ந்திருப்பார்” என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ராம பக்தியும்,அதன் விளைவால் ஏற்படும் அமைதி, மற்றும் சந்தோஷம் இவற்றை அனுமனை வணங்குவதால் அடையலாம்

லக்ஷ்மணனும் அங்கதனும் இத்தகைய தாஸ்ய பக்தியை வளர்த்தனர்

ஸ்வாமியின் வழியே

ஸ்வாமி கூறுகிறார்” நீ என்னுடைய கருவியானபடியால் உன்மீது என் அன்பைப் பொழிவேன்.எப்பொழுதும் கவனமாக இரு.எந்த நொடியில் உன்னுடைய அகங்காரம் உன்மீது இறங்குகிறதோ அப்போது என் வேலை முடிந்து விடும். உனது எதிர்மறை எண்ணங்களை தாண்டி வந்து விட்டாயானால்,மீண்டும் நான் உனக்கு மூலாதாரம் ஆவேன் மனதை கவனிப்பதே மிகுந்த பயந்தரக்கூடிய ஒரு ஆன்மீகப்பயிற்சி. அது பக்தனை பக்குவப்படுத்தி எதிமறை எண்ணங்களை எதிர்கொள்ள உதவுகிறது

சக்யம்

சக்யம் என்பது பக்தி நெறிகளில் பக்தன் தன்னை இறைவனின் நண்பனாகக் கருதிக் கொள்ளுதல்

நல்ல நண்பர்கள் கிடைத்தல் மிக அரிது. கடவுளே நமது நண்பனாக இருந்தால் அது நமக்கு ஒரு ஆசிர்வாதமே . நேரத்திற்கு நாம் நாடிச் செல்ல நமக்கு ஒருவர் அவசியமே. நம் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளவும் தான் நமக்கு நண்பர் தேவை. கடவுளை பல்வேறு வழிகளில் உபாசிக்கும் போது, இறைவனை தன் நெருங்கிய நண்பனாகக் கருதுபவர் வெகு சிலரே.

ஸ்வாமி இளமைப்பருவத்தைப்பற்றி கூறும்போது ரமேஷ்,சுரேஷ் என்னும் இரண்டு பள்ளித்தோழர்களைப்பற்றி தன் அருளுரையில் அடிக்கடி கூறுவார் மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணன் உற்ற தோழனாக விளங்கினார். கிருஷ்ணனும் அர்ஜுனனும் தங்களுக்குள் மிகுந்த பிணைப்பில் இருந்தனர். அர்ஜுனன் சக்யம் என்னும் நிலையில் கிருஷ்ணனிடம் பக்தி கொண்டிருந்ததால் அது எப்படிப்பட்ட உறவாக இருந்தது என்றால் தன் செயல்களைப்பற்றிய ரகசியத்தையும் கிருஷ்ணன் அவரிடம் கூறிவிடுவார்.

அர்ஜுன்னின் சக்ய பக்தி

இறைவனை விட மேலானவராக யார் நமது நண்பனாக இருக்க முடியும்?? இறைவனை நண்பனாகக் கொண்டு முழுமையை அடைந்த அர்ஜுனனே இதற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எவ்வளவு உற்றவனாக இருந்தான் என்றால் குருக்ஷேத்ர போரின்போது தன் ரதத்தையே கிருஷ்ணனை ஓட்டச்சொன்னான். இருப்பினும யுத்தகளத்தில் தன் உறவினரைப்பார்த்து குழப்பமடைந்தவனாய் தன் நண்பனும், ரதசாரதியுமான கிருஷ்ணனிடமே உதவி கோரினான். ஏனெனில் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் பரஸ்பரம் நட்புடனான இயைபு இருந்தது. எனவேதான் தக்க அறிவுரைக்காக கிருஷ்ணனை நாடினான் கிருஷ்ணன் தன் விஸ்வரூப தரிசனத்தை வெளிப்படுத்தியவுடன் திகிலடைந்த அர்ஜுனன் மன்னிப்பு கோரி உளறதொடங்கினான். நானுன்னை ஓ கிருஷ்ணா, ஓ யாதவா. ஓ என் நண்பா என்றெல்லாம் விளித்திருக்கிறேனே உன் பெருமை தெரியாமல்“ ‘நான் அறியாமை யினாலோ அல்லது அன்பினாலோ செய்த பிழைகளை மன்னித்து விடு (பகவத்கீதா அத்.11-41)

தன் உயரிய நிலையைக் காட்டியபின்பும் கிருஷ்ணன் கருணையுடனும் இரக்கத்துடனும் அவனை நண்பனாகவே கருதினான் இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையேயுள்ள ஆழ் நிலை அன்பு இத்தன்மையதே அர்ஜுனன் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டபின்பும் கிருஷ்ணனுடனான நட்பை அவனால் மறக்க இயலவில்லை.இதுவே இறைவனுடனான நட்பின் நிரந்தர தன்மை

முழுமையான சுத்த ஆத்மாக்கள் ஆன்மீக உலகில் இறைவனுடனான தங்கள் நட்பை அனு பவிக்கன்றனர்,ஏனெனில் அவர்களுக்கு எந்த ஆசையும் இல்லை..மதுராஷ்டகத்தில்இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது- இறைவனுடனான நட்புதான் எவ்வளவு இனிமையாக உள்ளது- சக்யம் மதுரம்-இறைவனை அடையாளம் காண்பது என்பது ஏற்கனவே நமக்கு அவனாலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நட்புக்கு ப்ரதிசெயலாக செவிசாய்த்தல் என்பது நம்மிடம்தான் உள்ளது

சுதாமா,உத்தவர் மற்றும் கோபாலகர்கள் சுத்த ஆத்மாக்கள்.ஆன்மீக உலகில் இறைவனுடனான நட்பை ஆனந்தித்து அனுபவித்தனர். ஏனெனில் அவர்களுக்கு வேறு ஆசையே இல்லை.

ஸ்வாமியின் வழியே

ஸ்வாமி கூறுகிறார் நட்பு என்பது அசைக்கமுடியாத அன்பின் வெளிப்பாடு .அன்பு, உன்னத மான ,தூயதான ஆசை மற்றும் அகங்காரம் அற்றது நான் யாரையாவது விரும்பினால் ,அவரிடம் நட்பு கொள்ள விரும்பினால் நான் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அவரும் என்னைப்பற்றி அறியச் செய்ய வேண்டும், சக்ய பக்தி நிலையில் பக்தர்கள் இறைவனின் அன்பை அனுபவிக்கிறார்கள்.

ஆத்ம நிவேதனம்

பக்தி வழியில் ஒன்பதாவது நிலையில் உள்ள ஆத்ம நிவேதனம் என்பது முழுமையாக தன்னை அர்ப்பணித்தல் அல்லது இறைவனின் சங்கல்பத்திற்கு விட்டுக்கொடுத்து பக்தனின் இதயத்தில் அகங்காரத்தின் சுவடு சிறிது கூட இன்றி சரணாகதி செய்தலாகும் இறைவனிடம் முழுமையான பக்தி கொண்டு பக்தன் பக்தியின் மூலம் தன்னை, ,தன் சுயத்தைஅறிந்து பக்தனும் இறைவனும் ஒன்றாதலே இவ்வகையான பக்தி

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், எவன் ஒருவன் எப்பொழுதும் என்னையே நினைத்து, உபாசிக்கிறானோ, அவனை காப்பாற்றி, அவனது க்ஷேமமும் எப்பொழுதும் என்னாலேயே வகிக்கப்படுகிறது. ராஜா மஹாபலி ஆத்ம நிவேதனத்துக்கு ஓர் முழுமையான உதாரணமாவார்

மஹாபலி சக்ரவர்த்தி

வாமன அவதாரத்தின்போது சிறு பிராம்மண பாலகனாக வந்த மஹாவிஷ்ணுவை பலிச் சக்ரவர்த்தி திறந்த மனதுடன் வரவேற்று அவர் கோருவதைத் தருவதாக வாக்களித்தான். வாமனரின் பாதங்களைக் கழுவி, அந்நீரை தன் தலையில் தெளித்துக்கொண்டு புனிதமடைய விரும்பினான். பலியின் ஆசான் சுக்ராச்சாரியார் அனைத்துமறிந்த ஆலோசகர். வாமனர் என்பது மஹா விஷ்ணுவின் அவதாரமே என்று உணர்ந்த அவர், வாமனருக்கு அளித்த வாக்கை. மறுக்கச் சொன்னார் ஆனால் அவரது ஆலோசனையை மறுத்ததன் வாயிலாக பலியின் பெருந்தன்மையையும் உயர்வையும் காணலாம். பலி கூறினான். இறைவனே என்னிடம் வந்து கை நீட்டி யாசகம் கேட்கும்போது என் எளிய கரங்களால் கொடுப்பதால் இதைவிட என்ன பெரிய நல்லதிர்ஷ்டத்தை நான் பெறப்போகிறேன். எனக்கு என்ன நடந்தாலும் சரி, நான் எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

பலி மஹா விஷ்ணுவிடம் கூறினான், “என் இறைவா, நான் என்னுடைய செல்வம், உடைமை ஏன் என்னையே தங்களுக்கு சமர்பிக்கிறேன். உங்களிடம் அடைக்க;லம் புகுந்தேன்., என்னை காப்பீராக.(ஸ்ரீமத் பாகவதம் 8வது சர்க்கம்) இதுவே தியாகம் செய்தல்-இந்த உணர்விலேயே பலி தன்னைத்தானே வாமனருக்கு அர்ப்பணித்தான். இவ்வாறு தன்னுடைய தன்னலமற்ற பக்தியாலும்,சரணாகதியாலும் இறைவனை அடைந்தான்

இறைவனின் திருவடிகள் பலியின் தலையைத் தொட்டவுடன் பலி உடனடியாக ஞானமும் இறை அனுபூதியும் அடைந்தான். வேறு விதமாகக்கூறினால், நாம் இறைவனுக்காக கண்ணீர் விட்டு அழ வேண்டும், அந்த கண்ணிரே மேலான பூரணத்துவத்துக்கான விலையாகும் இறைவனுடன் ஒருமித்தல் என்பதாகிய இவ்வுணர்வு ராதாவாலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸராலும் அடையப்பட்டது

ஸ்வாமியின் வழியே

ஸ்வாமி திரிகரண சுத்தியை கோருகிறார் நம் வாழ்வை புனிதமாக்க–எண்ணத்தில் தூய்மை, சொல் செயலில் தூய்மை இவையே வேண்டும். பக்தன் தூய்மையாகவும் முழுமையாகவும் இருக்கும்போது அவனே பரமாத்மாவாகிறான்