ஜனவரி நிகழ்வுகள்

பாரத கலாசாரத்தைக் காப்பதன் இன்றியமையாமை பற்றிய பகவான் சத்ய சாயி பாபாவின் அருளுரை

1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 முதல் 31 முடிய ஐந்து நாட்கள் நடைபெற்ற பாலவிகாஸ் மாநாட்டை நமது பேரன்புக்குரிய பகவான் காலை 9.30 மணிக்கு பூர்ணசந்திரா அருளரங்கத்தில் துவக்கி வைத்தார். தமிழ் நாடு ஸத்ய ஸாயி சேவா நிறுவனங்களின் மாநிலத் தலைவர் மேஜர் ஜெனரல் S.P.மகாதேவன் அவர்கள் பகவான் அவர்களையும் மாநாட்டின் ப்ரதிநிதிகளையும் வரவேற்று இன்று பாலவிகாஸ் இயக்கத்தின் புனிதமான திருவிழா தினம் எனக் குறிப்பிட்டார்.

பகவான் தன் துவக்க உரையில் உலக வாழ்க்கையின் பல நூற்றாண்டு கால மாறுபாடுகளுக்கு இடையில் பல்வேறுபட்ட புராதனமான கலாசாரங்கள் மறைந்துவிட்ட நிலையில் பாரத கலாசாரம் எவ்வாறு வாழ்ந்து வருகிறது என விளக்கினார். இக்கலாசாரத்தில் உணர்த்தப்பட்டு வந்த மேம்பாடுகளின் படி வாழ்வதன் வாயிலாக இத்தகைய மரபுரிமையை பாரத நாட்டினர் காப்பாற்றி பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பிறகு முந்தைய நாள் புட்டபர்த்தியைக் கடும் புயல் தாக்கிய நிகழ்வைக் கூறினார்.

பாலவிகாஸ் குழந்தைகள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது பலமான காற்று வீசவே, சேதமடைந்த கூடாரங்களுக்குள் குழந்தைகள் அகப்பட்டுக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் வாயினின்றும் வெளிவந்தவை ஸாயிராம் எனும்  ஒரே சொல் ஆகும். உடனே அவர்கள் பஜனை பாடல்களைப் பாட ஆரம்பித்தனர். பகவான், பாலவிகாஸ் வகுப்புகளில் அக்குழந்தைகள் யாவரும் இத்தகைய கடும் சோதனைகளை துணிவு மற்றும் நம்பிக்கையுடன் சந்திக்கப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்.

பகவான் 30ஆம் நாள் காலை பூர்ணச்சந்திரா அருளரங்கில் பாலவிகாஸ் மற்றும் இளம் சேவாதள மாணவர்களைப் பற்றி சிறப்பான சந்தர்ப்பமளித்து உரையாற்றினார். தமது தெய்வீக அருளுரையில் ஸ்வாமி, நீங்கள் எல்லையற்ற பரம்பொருளின் குழந்தைகளே! நீங்கள் வெறும் சதைப் பிண்டங்களல்ல!

நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் திருவுருவங்கள் ஆவீர்!

நீங்கள் ஆனந்தத்தின் பொக்கிஷங்களாவீர்! உங்கள் இருதயங்களோ தெய்வத்தின் திருக்கோயில்களாகும். இயற்கையின் அனைத்தும் உங்கள் விளையாட்டுத் திடலாகும். அதனுள் உறையும் அனைத்துப் படைப்புகளுமே - இந்த பிரபஞ்சத்தின் தலைவர்களாகிய நீங்களே தவிர அதன் கொத்தடிமைகளல்ல! நீங்கள் உங்கள் இச்சைகளுள் கட்டுண்டு இருக்கும் வரையில் பொருளியல் உலகின் பிடியினின்று தப்பிக்க இயலாதவராகவே இருப்பீர்கள். இராவணன் தாம் மிக்க சக்தி கொண்டிருந்தும் கூட தீவிரமான உணர்வுகளுக்கு அடிமைப்பட்டிருந்ததன் காரணத்தால் தனக்கு நேர்ந்த கேடுகளில் இருந்து தப்பிக்க இயலாதவன் ஆனான். நீங்கள் இறைவனிடம் சரணடையும் பட்சத்தில் இயற்கை முழுவதும் உங்களுக்குப் பணிபுரியும் சேவகனாகிவிடும்.

இத்தகைய அரிய அடிப்படையான உண்மையை இக்காலச் சிறுவர் சிறுமியர் அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அவர்களே எதிர்கால மானிடத் தன்மையின் பிரதிநிதிகளாவர். நம் தேசத்தின் கலாசாரத்தின் பாதுகாவலர்கள் அவர்களேயாவர். நம் நாட்டின் பெருமையும் நல்லெதிர்காலமும் அவர்களையே அடி பணிந்து  இருக்கிறது. இளம் குழந்தைகளின் வாழ்க்கை உருவாக்கப்படும் முறையைப் பொறுத்தே தேசத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப் படுகின்றது.

இன்றைய நாளில் உலகினர் யாவரும் ஒழுங்கின்மை, கொடுமை மற்றும் தீய செயல்களிலேயே மூழ்கியுள்ளனர். எந்த ஒரு நற்செயல் புரிவதற்கும் இத்தகைய அரக்கத்தனமான சக்திகளை வேரோடு களைவதும் இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருத்தலும் இளைய சமுதாயத்தினர் அறிய வேண்டியது அவசியமாகும்.. க்ரிஷி (தனி மனித முயற்சி) மற்றும் க்ருபா (இறையருள்) இவையிரண்டும் ஒரு காந்தக் கல்லின் நேர் மற்றும் எதிர் முனைகளைப் போன்றவை. இறைவனின் அருள் மட்டும் இருந்து சரியான தனிமனித முயற்சியில்லை எனில் நோக்கம் நிறைவேற்றப்பட இயலாது. இறையருள் என்பது எங்கும் எப்பொழுதும் இருக்கவே இருக்கின்றது. அதற்காக நாம் எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இதனைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளுமே ஸாதனா அல்லது சாதனை (ஆன்மீக முயற்சி) என அழைக்கப்படுகின்றன

குழந்தைகள் தம் தவறுகளை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் நான்கு முக்கிய பண்புகளைக் கொண்டிருத்தல் அவசியமாகும். நமது பேரன்பு மிக்க பகவான் அவர்களும், "நாம் ஒவ்வொருவரும் நான்கு விதமான மேன்மையான பண்புகளைக் கொண்டிருப்பது இன்றியமையாதது" என வலியுறுத்திக் கூறுகிறார்:

"சாந்தி (அமைதி), ஸத்யா (உண்மை), நிரஹங்காரா (தான் எனும் அகந்தையற்று இருத்தல்), அசூயையின்றி இருத்தல் (பொறாமை இன்றியிருத்தல்)  இவை யாவும் ஒருங்கிணைந்ததாகி ப்ரேமை (அன்பு) எனும் பண்பாக நிறைந்து வழிய வேண்டும்&" என உரைக்கின்றார்.

இத்தகைய பண்புகளைக் கல்வி கற்பதன் வாயிலாகவோ, ஆசிரியர் ஒருவர் மூலமாகவோ அல்லது யாராவது ஒருவர் பரிசாக வழங்குவதன் மூலமாகவோ பெற இயலுமா எனில் இயலாத ஒன்றாகும். இத்தகைய உன்னதமான பண்புகள் ஒருவர் தம் இளம் வயதான குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான பயிற்சியை மேற் கொள்வதன் மூலமாக மட்டுமே அடைய இயலும். அதன் பிறகே குழந்தைகள் நல்ல உறுதியான நிலையில் பிற்கால வருடங்களில் இருக்க இயலும்.

எண்ணம், சொல் மற்றும் செயலில்  உண்மையைக் கடைபிடித்தல்

முதற் பண்பு ஸத்யம் ஆகும். உபநிடதங்கள் "ஸத்யமேவ ஜயதே" (வாய்மையே வெல்லும்) என உரைக்கின்றன. இவ் வாய்மை என்பது யாது? எண்ணம், சொல் மற்றும் செயலில் உண்மையைக் கடைபிடித்தலே வாய்மையாகும். இப் பண்பினில் ஒன்றாமல் இருக்கச் செய்யவே கஷ்டங்களைத் தரும் சாதகமற்ற பல சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகின்றன. உதாரணத்திற்குக் குழந்தைகள் தண்டனைக்கோ, பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் வசவுகளுக்கோ அஞ்சியே பொய் உரைக்கத் தலைப்பட்டு உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்க முற்படுகிறார்கள். இந்த இயல்பே அவர்தம் வாழ்க்கை முழுவதிலும் களங்கமுண்டாக்கி  இரட்டை வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

ஆகவே, அவர்தம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமது தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் எப்போதும் உண்மையையே பேசுவதற்கும் சிறுவர் பிராயத்தில் இருந்தே கற்க வேண்டும். அவர்களது குற்றங்களுக்காக, பெற்றோர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ தண்டிக்கப்படுவது ஒருபோதும் தவறாகாது. இத்தகைய சரியான தீர்வுகளால் அவர்கள் உண்மையைப் பேசுவதற்குப் பயில்வதை எளிதில் காண்பீர்கள். ஆனால் தவறான பாதையில் செல்ல விட்டால், உண்மையைச் சார்ந்த வழிகளுக்குத் திரும்புவது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

ஆகவே, நீங்கள் இளம் பிராயத்தில் இருக்கையிலேயே, உங்கள் மனதும் இருதயமும் எவ்வித சாயல் படியாமல் தூயதாக இருக்கும் போதே உண்மையினின்று வழுவாதிருக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் உண்மையை மட்டும் பேசுவதால் உங்கள் மனதும் நல்லெண்ணங்களால் நிரம்பப் பெற்றிருக்கும். உங்கள் பாதையில் எத்தகைய கஷ்டங்கள் தோன்றினாலும் எத்தகைய இடர்கள் அல்லது சோதனைகள் எதிர்பட்டாலும் நீங்கள் ஸத்யத்தைக் கைவிடலாகாது. ஸத்யத்தைக் காப்பதற்காக, அனைத்தையும் தியாகம் செய்யத் தயாரானதால் அழியாப் புகழ் பெற்ற ஹரிச்சந்திரனின் ஊக்கமளிக்கும் வரலாறு மூலமாக  கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம் இதுவேயாகும்.

உலகியலான செழுமையோ அல்லது அதிகாரம் கொண்ட நிலையோ வருவதும் போவதுமாகவே இருக்கும். ஆனால் உண்மைக்குச் சார்பான நற்பெயரும் மேன்மையும் இறுதிவரை நிலைத்து நிற்கும். நீங்கள் உண்மை மற்றும் தர்மத்தை உங்கள் இதயம்தனில் நிலைத்திருக்கச் செய்தீர்களானால் உங்கள் வாழ்க்கை முழுவதும் உயர்ந்த அர்த்தமுள்ளதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அமையும். பொறாமை உணர்வினின்றும் விடுதலை பெற விழையுங்கள்

பொறாமையினின்றும் விடுதலை பெறப் பழக வேண்டும்

உண்மைக்கு அடுத்ததாக, நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறுமை எனும் பண்பு எல்லைகடந்த கொடுமையெனும்  அம்புகளும்கவண்கற்களுமான விதியை எதிர் கொள்ளும் திறனை  அளிக்கும். பொறுமையற்ற மனிதனோ, தோல்வி மற்றும் துன்பங்களால் எளிதில் கட்டுண்டு விடுகிறார். உண்மை மற்றும் பொறுமையை வளர்த்துக் கொண்டு  நீங்கள் பொறாமையினின்றும் விடுதலை பெறப் பழக வேண்டும். பொறாமை என்பது மரத்தின் வேர் வரை சென்று தாக்கும் பூச்சியைப் போன்றதாகும்.அது ஒருவரது வாழ்க்கை முழுவதையுமே அழித்துவிடும். அறிவு, செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் இது போன்ற பலவற்றை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.  ஆனால் பொறாமையெனும் கிருமிகள் உங்கள் மனதை அடைந்து விட்டால் அதுவே ஒவ்வொன்றையும் மாசுபடுத்தி விடும். நீங்கள் சின்னஞ்சிறு விஷயத்தில் கூட பொறாமை உள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

  

உங்களுடன் பயிலும் சக மாணவன் உங்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் நீங்கள் பொறாமை உணர்வை அடைதலாகாது. மற்றவர்கள் உங்களைக் காட்டிலும் நன்றாகப் பணியாற்றினால், பொறாமையால் கவரப் படுவதற்குப் பதிலாக, மகிழ்ச்சியையே அடைய வேண்டும். சிலர் உங்களைக் காட்டிலும் நல்ல உடை உடுத்தி வந்தாலோ அல்லது அதித செல்வச் செழுமை கொண்டாலோ, அவர்கள் தாம் பெற்றுள்ளதை அனுபவிக்கிறார்கள் என்று எண்ணி நீங்கள் பெற்றுள்ளதைக் கொண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்ள வேண்டும். பொறாமை உணர்வில் இருந்து விடுதலை பெற்றிருப்பது என்பது தெய்வீகப் பண்பாகும். அது மற்றவர் பெற்ற மகிழ்ச்சியையும் வெற்றியையும் கண்டு உங்களை  மகிழ்ச்சியடையச்  செய்யும். எத்தகைய சூழ்நிலைகளிலும் உங்கள் குருமார்கள் மற்றும் வயதில் மூத்தவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து கடுமையான ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். தேவைப்படுவோரின் நலனுக்காக தியாகங்கள் புரிய கற்றுக் கொள்ள வேண்டும். தியாகம் என்றால் உங்கள் சக்திக்கேற்ப மற்றவருக்கு உதவ முற்படுதல் ஆகும். 

உங்களால் பிறருக்கு உதவ இயலாதெனில் அவர்களுக்குக்  கெடுதல் விளைவிக்காமலாவது இருத்தல் வேண்டும். அதுவும் கூட ஒரு வகையில் தியாகமாகும் (மற்றவருக்குக் கேடு தரும் சுபாவத்தைக் கைவிடுதல்). இந்நாளில் அதிகாரம் கொண்டிருப்பவர்கள் மக்களுக்குச் சுமையும் துன்பங்களும் உருவாக்கக் கூடிய பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சொற்ப அளவிலேயே செலவு செய்கிறார்கள்.

முன்னேற்றம் அடைந்ததாகக் கூறப்படும் நாடுகளில் கூட எல்லாவிதமான திட்டங்களிலும் கோடிக்கணக்கான பணத்தை வீணடிக்கிறார்கள்; ஆனால் இளம் சமுதாயத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நன்மைக்காக போதிய கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு வழியில் தம் சொந்த சுயநலனைக் கருதி இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர  குழந்தைகளின் நீண்ட  எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் ஏதும் கொள்வதில்லை.  ஆறு நாட்களுக்கான போர்க் கருவித் தளவாடங்களுக்காக செலவிடப்படும் பெருஞ் சக்தி வருடம் முழுவதும் பல லட்சம் குழந்தைகளை நலமாக வைத்திருக்கப் போதுமானதாகும்.

குழந்தைகள் மிருதுவான இதயம் கொண்டவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். நல்ல ஆரோக்கியமே வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றின் அடிப்படையானதாகும். பெரும்பாலான பின்தங்கிய நாடுகளில் உள்ள குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. குழந்தைகள் பெரும்பாலோர் சத்தான உணவின்றி, போதிய ஆடைகளின்றி, தங்குவதற்கு கூரையின்றி இருக்கின்றனர். அவர்களுக்கு அரைகுறை உணவே கிடைப்பதால் பலம் குன்றி பல்வேறு நோய்களால் துன்புற்று வருகின்றனர். உலகின்  மூன்றாவது நிலை நாடுகளில் ஒவ்வொரு நாளும் சத்துணவின்றி நாற்பதாயிரம் குழந்தைகள் மடிந்து வருகின்றனர்.

மகிழ்ச்சியற்று வாழ்ந்து வரும் இந்த குழந்தைகளுக்கு உதவ பொருள் வளம் படைத்த கனவான்கள் ஏதாவது செய்தார்களே என வாழ்த்துகிறேன். அவர்கள் தமது சுய உடைமைகள் மற்றும் நன்மையை மட்டுமே நினைந்து திருப்தியடைந்து விடலாகாது. அவர்களை விடவும் அதிர்ஷ்டமற்ற நிலையில் வாடுபவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை ஒன்றுளது. தாம் ஒரு நிலையில் இருந்து கொண்டு இரங்க மனமின்றியோ அல்லது பொருளுதவி செய்கிறோம் எனும் மனோபாவத்தாலோ இல்லாமல் ஏழ்மையில் வாடுபவர்களை அணுக வேண்டும். நியாயமான இரக்க உள்ளத்துடனும் சமமாக தன்னுடன் உறைபவர் எனும் பாவத்துடனும் உதவி புரிதல் வேண்டும். இத்தகைய இரக்கமும் அர்த்தமுள்ள வாழ்க்கையின் முழுமுதலான நோக்கங்களுள் ஒன்று எனும்  உள்ளத்துடன் இருத்தல் வேண்டும்.

அன்பான குருமார்களே! 

நீங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கையில் உங்களது பொறுப்பில் விடப்பட்டுள்ள குழந்தைகளின் நலன் எனும் உன்னதமான ஒரு சாதனையுடன் பிணைந்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குழந்தைகளுக்கு போதிக்கின்றீர்கள் என உணர்தல் வேண்டும். உதாரணமாக, நீங்கள் சிறிது அறிவைப் புகட்டும் பொழுது நீங்கள் புகட்டும் பாடத்தைப் புரிந்து கொண்டுள்ளமை மேலும் வளர்ச்சியடைகிறது.

நீங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த வேண்டி புத்தகங்களைப் படித்தாலும் அதனால் குதூகலத்தையே அடைகிறீர்கள். உண்மையில் நீங்கள் மற்றவருக்காக எப்பணியாற்றினாலும் அது ஒவ்வொருவருள்ளும் உறைகின்ற இறைவனுக்கே ஆற்றப்படுவதாக எப்போதும் உணர்தல் வேண்டும். குருமார்கள் இத்தகைய உணர்வான உலகளாவிய அன்பினால் கடமையாற்றுகையில் குழந்தைகள் மிருதுவான இதயமும் களங்கமற்ற மனதும் கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் குழந்தைகளின் இதயத்தை அன்பினால் நிரப்பினால் மட்டுமே உலகம் யாவும் நியாயமான அமைதியைப் பெறும்.

Read More...
லோகா சமஸ்தா
(பாலவிகாஸ் குழந்தைகளின் குழ நடனம்)

“லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து” என்று தொடங்கும் பாடல், இவ்வுலக உயிர்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிட்டட்டும் என்றுப் பிரார்த்திக்கும் விதமாக அமைந்துள்ளது.

இனப் பாகுபாடற்ற, தன்னலமற்ற இந்த மந்திரம், பிரபஞ்சம் முழுவதும் அமைதியும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறது. நம் ஸ்வாமி எப்பொழுதும் சகல லோக க்ஷேமத்தையே விரும்புவார். மனிதர்கள், மிருகங்கள், செடி, கொடி, மரங்கள், கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள். ஏன்? நதிகள், மலைகள், பாறைகள் கூட. அனைத்து கோள்கள், சர்வலோகங்கள் உட்பட அகிலம் முழுவதும் நன்மை அடைவதையே விரும்புகிறார்.

இந்தப் பாடல், அமைதியுடன் சேர்த்து, சகோதரத்துவத்தையும், நட்புணர்வுவையும், எல்லோரும் ஓர் குலம் என்ற ஒற்றுமையுணர்வையும் தூண்டுகிறது. இப்பாடலின் மற்றுமோர் முக்கியத்துவம் என்னவென்றால், பூமித்தாயை மட்டுமல்லாமல், இப்பிரபஞ்சம் முழுவதையும் குறிப்பதால், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் ஒருங்கிணைக்கிறது.

இவ்வளவு சிறப்புமிக்க இப்பாடலுக்கு, நம் தமிழ்நாடு பாலவிகாஸ் குழந்தைகள் வழங்கும் ஒரு குழு நடனம் கண்டு களிப்போமா?

வண்ணம் தீட்டுதல்

வழிதேடல்

தாய் மண்ணே வணக்கம்

உயர்ந்த மனிதர்களும் உன்னத குணங்களும்
Noble Personalities
ஆடுபவர்கள்:
  • க்ரூப் 1 குழந்தைகள்

கற்பிக்கப்படும் நற்குணங்கள்
  • ஒரு மனிதனைப் பணிவும் அடக்கமும் உடையவனாக்கும் சிறந்த குணங்களைப் பற்றி அறிந்துகொள்ளுதல்
  • ஒரு நல்மனிதர் மனிதகுலத்திற்குக் கிடைக்கபெற்ற வரப்ரசாதம் என்ற உண்மை அறிதல்
  • நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க

தேவையான பொருட்கள்:
  1. பல்வேறு ‘மதங்கள் மற்றும் மஹான்கள்’ பற்றிய படங்கள் ஒட்டிய அட்டைகள்
  2. உயர்ந்த மனிதர்கள் மற்றும் அவர்களுடைய உன்னத குணங்கள் அடங்கிய அட்டைகள்

முன்னேற்பாடு:

குருமார்கள், குழந்தைகளிடம் அனைத்து மஹான்கள் மற்றும் உயர்ந்த மனிதர்களின் உன்னத குணங்களைப் பற்றி உரையாடவேண்டும். மேலும், எப்பொழுதும் பிறரிடம் உள்ள நற்குணங்களையேக் கவனிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒரு மனிதன் அடக்கமுடையவன் ஆவதற்கு நல்லொழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

விளையாட்டு:
  1. குழந்தைகள் அரை வட்ட வடிவில் அமரவேண்டும்
  2. தயாரித்து வைத்த இரு வகை அட்டைகளிலிருந்துக் குரு 5 அட்டைகள் மட்டும் எடுத்து ஒவ்வொன்றாகக் குழந்தைகளிடம் காண்பிக்கவேண்டும்
  3. குழந்தைகள் 1 நிமிடம் கண்களை மூடிக்கொண்டுத் தாம் பார்த்த அட்டைகளிலிருந்த படங்களை நினைவு கூற வேண்டும்.
  4. அந்த அட்டைகளைக் கவிழ்த்து வைக்கவேண்டும். அதிலிருந்து, ஒவ்வொரு குழந்தையும் ஒரு அட்டை எடுத்துக்கொள்ளவேண்டும்
  5. குழந்தைகள் அந்த உயர்ந்த மனிதர்களின் படங்களை நினைவு கூர்ந்து, அவர்களை இந்த மனித குலத்திற்கே முன்னுதாரணமாக்கிய அவர்தம் சிறந்த குணங்கள் பற்றிப் பேசச் சொல்லவேண்டும்.
  6. அட்டையில் இருந்த நபரின் பெயரைச் சரியாக சொல்லிவிட்டால், அந்தக் குழந்தைக்கு ஒரு மதிப்பெண். குழந்தை சொல்லும் ஒவ்வொரு சரியான நற்குணங்களுக்கும் ஒரு மதிப்பெண் கூட்டிக் கொண்டே சொல்லவேண்டும்.
  7. நினைவாற்றலை விட மற்றவரிடம் இருக்கும் நற்குணங்களைக் கண்டறிவதே இவ்விளையாட்டின் முக்கிய நோக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
  8. அட்டைகளைக் கலந்து விட்டு, இதே விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாடலாம்.

Reference:
மதங்கள் மற்றும் மகான்கள் , (Printable cards)
ஊக்கமளிக்கும் உன்னத மனிதர்கள் , (Printable cards)
ஊக்கமளிக்கும் உன்னத மனிதர்கள்
Inspiring Lives
ஆடுபவர்கள் :
  • க்ரூப் 2 குழந்தைகள்

கற்பிக்கப்படும் நற்குணங்கள் :
  • ஒரு மனிதனைப் பணிவும் அடக்கமும் உடையவனாக்கும் சிறந்த குணங்களைப் பற்றி அறிந்துகொள்ளுதல்
  • ஒரு நல்மனிதர் மனிதகுலத்திற்குக் கிடைக்கபெற்ற வரப்ரசாதம் என்ற உண்மை அறிதல்
  • நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க

தேவையான பொருட்கள்:
  1. பல்வேறு ‘மதங்கள் மற்றும் மஹான்கள்’ பற்றிய படங்கள் ஒட்டிய அட்டைகள்
  2. சிறந்த மனிதர்கள் மற்றும் அவர்களுடைய சிறப்பு குணங்கள் அடங்கிய அட்டைகள்
  3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பென்சில் மற்றும் ஒரு பேப்பர்
  4. நேரம் வைத்து விளையாட ஒரு கடிகாரம்

முன்னேற்பாடு:

குருமார்கள், குழந்தைகளிடம் அனைத்து மஹான்கள் மற்றும் சிறந்த மனிதர்களின் சிறப்பு குணங்களைப் பற்றி உரையாடவேண்டும். மேலும், எப்பொழுதும் பிறரிடம் உள்ள நற்குணங்களையேக் கவனிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒரு மனிதன் அடக்கமுடையவன் ஆவதற்கு நல்லொழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

விளையாட்டு:
  1. தயாரித்து வைத்த இரு வகை அட்டைகளிலிருந்துக் குரு 8 அட்டைகள் மட்டும் எடுத்து அவற்றைக் வரிசை கலைத்து வைக்கவேண்டும்.
  2. குழந்தைகள் கையில் பென்சில் பேப்பருடன் அரை வட்ட வடிவில் அமரவேண்டும்.
  3. குரு, படங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் குழந்தைகளிடம் காண்பித்துவிட்டு, அவர்களை அமைதியாக அந்தப் படங்கள் காண்பிக்கப்பட்ட வரிசையிலேயே நினைவுகூறச் சொல்லவேண்டும்.
  4. பின்னர் படங்களைக் கவிழ்த்துத் தனியே வைக்கவேண்டும். குழந்தைகளைப், படங்களில் கண்ட மனிதர்கள் மற்றும் அவர்களுடைய சிறப்பு குணங்களைக் காண்பிக்கப்பட்ட வரிசையில் எழுதச் சொல்லவேண்டும். (மனிதகுலத்திற்கு அவர்கள் புகட்டும் பாடம் என்ன என்று எழுதவேண்டும்)
  5. குறிப்பிட்ட நேரம் முடிந்ததும், குழந்தைகளை ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் எழுதியதை வரிசையாக வாசிக்கச் சொல்லவும். (படம் மற்றும் நற்குணம்) ஒவ்வொரு சரியான படத்திற்கும் 2 மதிப்பெண்களும், வரிசை சரியில்லை என்றால் 1 மதிப்பெண்ணும் அளிக்கவேண்டும். படத்திலுள்ள நபருக்குப் பொருத்தமானக் குணத்தை எழுதியிருந்தால், அதற்குக் கூடுதலாக 1 மதிப்பெண் அளிக்கவேண்டும்.
  6. அதிக மதிப்பெண் பெற்றவரே வெற்றியாளர்.
  7. நினைவாற்றலை விட மற்றவரிடம் இருக்கும் நற்குணங்களைக் கண்டறிவதே இவ்விளையாட்டின் முக்கிய நோக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
  8. அட்டைகளைக் கலந்து விட்டு, இதே விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாடலாம்.

Reference:
மதங்கள் மற்றும் மகான்கள் , (Printable cards)
உயர்ந்த மனிதர்கள் மற்றும் உன்னத குணங்கள் , (Printable cards)

மதங்கள் மற்றும் மகான்கள்
S.no.Religions Noble quality
1.சர்வ தர்மம் Submit
சத்ய சாய் பாபா
2. புத்தம் Submit
புத்தர்
3.கிறிஸ்துவம் Submit
இயேசுகிறிஸ்து
4.இந்து மதம் Submit
சிவன்
5.இஸ்லாம் Submit
முகமது நபி
6.சமணம் Submit
மகாவீரர்
7.யூதம் Submit
மோசஸ்
8.சீக்கிய மதம் Submit
குரு நானக்
9.டாவோயிசம் Submit
லாவோ ட்சு
10.ஜோராஷ்ட்ரிய மதம் Submit
ஜோராஷ்டிரர்
உயர்ந்த மனிதர்கள் மற்றும் உன்னத குணங்கள்
S.no.Great personalities Noble quality
1. Submit
சாக்ரடீஸ்
ஆராய்ந்து அறியும் ஆர்வம்
2. Submit
ஆதி சங்கரர்
வேத ஞானம்
3. Submit
ஷேக்ஸ்பியர்
இலக்கியத்தில் கற்பனைத் திறன்
4. Submit
சுவாமி விவேகானந்தர்
தன்னம்பிக்கை
5. Submit
மகாத்மா காந்திஜி
சத்யம் மற்றும் அஹிம்சை
6. Submit
ஐன்ஸ்டீன்
அறிவியல் உள்ளுணர்வு
7. Submit
அன்னை தெரஸா
அன்பு மற்றும் அமைதி
8. Submit
லியனார் டோ டாவின்சி
அழகூட்டும் ஓவியம்
9. Submit
பீதோவென்
எழுச்சியூட்டும் இசை
10. Submit
மார்டின் லூதர்கிங்
ஒற்றுமை மற்றும் பொறுமை
மதங்கள் மற்றும் மகான்கள்
உயர்ந்த மனிதர்கள் மற்றும் உன்னத குணங்கள்